முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பரவி வரும் பன்றிகாய்ச்சலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் இன்று அவரச ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுசுகாதாரத் துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும்

புதுடெல்லி,மார்ச்.16 - நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதேமாதிரி நேற்று மத்திய அரசு சார்பாக நாட்டின் வளர்ச்சி குறித்த பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும். மேலும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.6 சதவீதமாக அமையும். இது அடுத்த நிதியாண்டில் 8.6 சதவீதமாக உயரும். விவசாயம் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும். தொழில்துறை வளர்ச்சி 4 முதல் 5 சதவீதமாக இருக்கும். இதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணவீக்க விகிதம் உயர்வாகவே இருக்கும். ஆனால் ஆண்டு இறுதிக்குள் இதை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். உணவு பணவீக்க விகிதம் 2010-ல் 20.2 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரியில் 1.6 சதவீதம் குறைந்துள்ளது. இதனை மேலும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். உலகில் இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழும். நிதி மூலதனம் மற்றும் சேமிப்பு உயரும். தற்போதைய நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி 40.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இறக்குமதி 30.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக சேவைகளுக்கான மத்திய செலவு 2006-7-ம் ஆண்டில் 13.4 சதவீதமாக இருந்தது. தற்போது இது 18.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் மாசுபாடு ஆகியவற்றிருக்கு மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்படும்.

------------------------------------------------------------------------------------------------
இஸ்ரேலை புறக்கணிக்க வேண்டும் – அரபு பாராளுமன்ற மாநாடு
குவைத்சிட்டி:ஃபலஸ்தீன் மக்கள் மீது அட்டூழியங்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் இஸ்ரேலை அரபு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து 18-வது அரபு இண்டர் பார்லிமெண்டரி யூனியன்(எ.ஐ.பி.யு) மாநாடு நிறைவுற்றது.

இஸ்ரேலை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாகவும் ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் 2 தினங்களாக நடைபெற்ற மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் அணுசக்தியை தயாரிக்கும் ஈரானின் உரிமையை மதிப்பதாக மாநாடு அறிவித்தது. சர்வதேச அணுசக்தி ஏஜன்சியுடன் ஒத்துழைத்து இதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டிய மாநாடு, ஈரானின் அணுசக்தி தொடர்பாக பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேவேளையில், ஜி.சி.சி நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஈரானின் செயலை அங்கீகரிக்க இயலாது என்றும், இவற்றை கைவிட்டு விட்டு அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவும், சர்வதேச சட்டங்களை மதிக்கவும் ஈரான் தயாராகவேண்டும் என்று மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனம் கோரிக்கை விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக