வியாழன், மே 30, 2013

101ஆம் ஆண்டு நிறைவு விழா, 67 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழ்


www.nidurin.blogspot.com

10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது


சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.15 மணிக்கு வெளியாகிறது. இதையடுத்து மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த இணைய தளங்களில் ttp:// dge3.tn.nic.inஎன்ற இணைய தள முகவரிGPRS/ WAP வசதியுடன் கூடிய செல் போனிலும் தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதில் தேர்வெண்ணுடன் பிறந்த தேதியும் டைப் செய்து பார்க்க வேண்டும். இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். Wishing you All the Best !

சீனாவின் கடலோர அச்சுறுத்தலை முறியடிக்க இந்தியா-ஜப்பான் முக்கிய ஒப்பந்தம்


டோக்கியோ: 3 நாள் ஜப்பானில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று தாய்லாந்து செல்கிறார். முன்னதாக, இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு துறையில் இந்தியா - ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சீனாவின் கடலோர அச்சுறுத்தலை முறியடிக்க இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. விண்வெளித் தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அரிய தாதுக்கள் பயன்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச அளவிலான விவகாரங்களில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் செயல்படுத்துள்ள அதிக வேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளது.

சனி, மே 25, 2013

1 லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம்... சல்மான் குர்ஷித் சவுதி அரேபியா பயணம்


டெல்லி: சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஜூலை 3க்கு பிறகு கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சவுதிக்கு பயணமாகியுள்ளார். ‘உள் நாட்டினருக்கே வேலை' என்ற புதிய சட்டத்தை அண்மையில் சவுதி அரேபியா அரசு இயற்றியது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தப்போவதாக அரசு அறிவித்தது. அதன்படி அங்குள்ள நிறுவனங்களில் வேலையில் இருக்கும் வெளிநாட்டினரை நீக்கி விட்டு அந்த இடத்தில் சவுதி இளைஞர்களை நியமிக்க வேண்டும். இதை தொடர்ந்து சட்ட விரோதமாக அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை சவுதி போலீசார் சேகரிக்க தொடங்கினர். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஜூலை 3ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடுவுக்கு பின்னர் சவுதியை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. லட்சக்கணக்கான இந்தியர் சவுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வந்திருப்பதை தொடர்ந்து இவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்சிட் பாஸ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. 57 ஆயிரம் இந்தியர் இதுவரை பெறப்பட்ட 75 ஆயிரம் விண்ணப்பங்களில் 57 ஆயிரம் இந்தியர்களுக்கு எக்சிட் பாஸ் வழங்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த எக்சிட் பாஸ்களை நாள் ஒன்றுக்கு 500 என்ற அளவில் சவுதி அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள். இந்த வேகத்தில் சென்றால் ஜூலை 3க்குள் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்களை மட்டுமே சவுதி அதிகாரிகளில் சரிபார்க்க முடியும். இதனால் ஜூலை 3க்கு பிறகு 1 லட்சம் இந்தியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தியர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பிரச்னை குறித்து சவுதி இளவரசரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சல்மான் குர்ஷித் வெள்ளிக்கிழமை அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.

செவ்வாய், மே 21, 2013

இந்திய முதலீட்டை வரவேற்கிறோம்: சீனப் பிரதமர் லி கெகியாங்


இந்திய தொழில் நிறுவனங்கள் சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சீனப் பிரதமர் லி கெகியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய அவர், தெற்காசிய வளர்ச்சிக்கு இரு நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று கூறினார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்ட லி கெகியாங், இந்தியப் பொருட்களை சீனச் சந்தையில் விற்பனைக்கு வரவேற்பதாகவும் தெரிவித்தார். மிக அதிக வர்த்தக வாய்ப்புள்ள உலகின் மிகப் பெரிய சந்தைகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளது என்றும் சீனப் பிரதமர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற சீனா தயாராக உள்ளதாகவும் லி கெகியாங் உறுதி படத் தெரிவித்தார்.

வெள்ளி, மே 17, 2013

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில் வடகரை அறங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறப்பு 9 பேர் படுகாயம் அதில் இருவர் நிலை கவலைகிடமாக உள்ளது. அவர்களின் ஆபரேஷன் மற்றும் மருத்துவ செலவிற்கும் சிரமத்தில் உள்ளனர். ஆதலால் பேங்காக் வாழ் தமிழ் நல் உள்ளங்கள் ரூ 1,60,000/- கொடுத்து உதவி புரிந்தனர். இந்த தொகை பற்றா குறையாக உள்ளதால் நமது சிங்கப்பூர் வாழ் தமிழ் உள்ளங்கள் இருவரின் மருத்துவ சிகிச்சை செலவிற்காக உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேம். சிங்கையில் நீங்கள் நிதியுதவி அளிக்க S.பஷீர் (contact no: +6590405070) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..WWW.NIDURIN.COM

நீடூர் ரயில் நிலையத்தில் திருடர்கள் கைவரிசை...


நமதூர் ரயில்நிலையத்தில் திருடர்கள் அலுவலக அறையின் பூட்டை உடைத்து பணத்தைதிருட நினைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பணம் ஏதும் இல்லாததை அறிந்து சென்றுவிட்டனர். இதுபற்றி நிலைய அதிகாரி குமார் கூறுகையில்.தினதோரும் நமதூருக்கு வந்துசெல்லும் ரயில் கட்டணத்தை எடுத்துசென்றுவிடுவாதால் பணம் முலுவதும் தப்பியதாக கூறினார் தினமும் சில வெளியூர் ஆசாமிகள் ரயில் நிலையம் ஒட்டிய பகுதிகளில் குடித்துவிட்டு அங்கேயே குடித்த பாட்டில்களை வீசிவிட்டு செல்வதாக கவளையுடன் கூறினார் இதற்க்கிடையில் ரயிவே போலிஸ் தினமும் நமதூர் ரயில் நிலையத்தில் முகாமிட்டு கண்காணிபில் உள்ளனர்.சிலரை கைதும் செய்துவருகிறனர். அவ்வப்போது தமுமுக நிர்வாகிகளும்.நீடூர் ரயில் நிலையத்தை கண்காணிப்பில் இறங்கி செயல்படுகிறார்கள்என்பது குறிப்பிடதக்கது. . .

ஞாயிறு, மே 12, 2013

சற்றுமுன்


(வடகாரை-அரங்கங்குடி) இக்பால் தெரு "அப்சரா" கமாலுதீன் அவர்களின் மகனார் (முஹமது இல்யாஸ் வயது "17") சுற்றுலா சென்று திரும்போம் போது தஞ்சையில் வாகன விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார் "இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்" உடன் சென்ற இரண்டு சகோதரர்கள் மிகவும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் (தீவிர சிகிச்சை பிரிவில்)சேர்க்க பட்டுள்ளனர் மற்ற ஏழு நபர்களும் பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ... சகோதரர்கள் நலம் பெற துவா செய்வோம்

சனி, மே 11, 2013


ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப்பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

வெள்ளி, மே 10, 2013

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூமாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை! ! ! !


பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண்வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவிபிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார் . இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.நன்கு படிக்கக்கூடியவர ் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர்ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார ். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேரஇந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார் . இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புதன், மே 08, 2013

தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி


சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது. இதன் மூலம் சாந்தி உள்ளி்ட்ட பெயர்களில் பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள், பள்ளிகளில் 15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு


பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பு நிறைய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன, ஆனால் தனியார் இணையதளங்கள் வர்த்த நோக்கில் செயல்படுவதாக கருதி தற்போது நான்கு இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படுகின்றன, இதில் பிரச்சினை என்னவென்றால் ஒரே நேரத்தில் முடிவுகளை மாணவர்கள் பெற்றோர்கள் சொந்தங்கள் என பார்க்க முயல்வதால் இணையதளங்கள் லோடு தாங்காமல் முடங்க வாய்ப்புள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்; http://tnresults.nic.in/ http://dge1.tn.nic.in/ http://dge2.tn.nic.in/ http://dge3.tn.nic.in/

செவ்வாய், மே 07, 2013

டெல்லி மாணவி கொலை வழக்கு: மாத இறுதியில் தீர்ப்பு


டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தனது ஆண் நண்பருடன் சென்ற 23வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்சிங் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் டெல்லி திகார் ஜெயிலிலும், 18 வயதுக்கு குறைவான ஒரு நபர் மட்டும் சிறார் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராம்சிங் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான். மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை பற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீராஜ் குமார் கூறுகையில், மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவு கோர்ட்டில் கடந்த ஜனவரியில் விசாரணை தொடங்கியது. இதில் 90 சதவீத விசாரணை முடிவடைந்து உள்ளது. இதனால் இந்த வழக்கில் இம்மாத இறுதியில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஞாயிறு, மே 05, 2013

மலேசியாவில் ஞாயிறன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாகவுள்ள...


மலேசியாவில் ஞாயிறன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாகவுள்ள தொகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு சேர்க்க விசேட விமானப் பயணங்களுக்கு பிரதமர் நஜீப் ரஸாக் ஏற்பாடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பிரதமர் மறுத்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்துத்தான் இந்த விமானப் பயணங்களுக்கு கட்டணம் செலுத்தினார்கள் என்றும், பிரதமர் அலுவலகம் பணம் கொடுக்கவில்லை என்றும் ஆளும் கட்சியான மலாய் ஐக்கிய தேசிய கழகம் கூறுகிறது. தேர்தலில் வாக்களிக்க தமது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வழமையான பாணியில் இவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள்தான் இவை என்று அக்கட்சி தெரிவிக்கிறது. மலேசியாவின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படும் இந்தத் தேர்தலின் பிரச்சார காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் அரசாங்கம் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நாட்டின் கிழக்கிலுள்ள சபா என்ற மாநிலத்தில் நூறு வயதைத் தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை சந்தேகத்தை தோற்றுவிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்து சொல்லியிருந்தார்.www.niduin.com

சனி, மே 04, 2013

விமானத்தை விமான பணிபெண்களிடம் இயக்க சொல்லி விட்டு தூங்க சென்றவிமானிகள்! ! ! !


161 பயணிகளுடன் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தை விமான பணிப்பெண்களை இயக்க சொல்லிவிட்டு விமானிகள் தூங்க சென்ற சம்பவத்தில் தலைமை விமானி,சக விமானி,மற்றும் இரண்டு பணிப்பெண்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் இடை நீக்கம் செய்தது. ஏப்ரல் மாதம் 12 ம் தேதி பாங்காக்கில் இருந்து டெல்லி புறப்பட்ட எ1-133 விமானத்தின் இயக்கத்தை தானியங்கி விமான பறத்தல் கட்டுப்பாடு கருவியில் நிலை நிறுத்திவிட்டு தலைமை விமானி பி.கே.சோனி,சக விமானி ரவிந்திர நாத் ஆகியோர் விமானம பறத்தல் அறையை விட்டு வெளியேறி உறங்க சென்று இருக்கிறார்கள்.சுமார் நாற்பது நிமிடங்கள் இருவரும் விமான பறத்தல் அறைக்கு வெளியே செலவழித்தும் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விமானத்தின் இயக்கத்தை விமான பணிபெண்கள் கனிகா கலா,ஜெ.பட் ஆகியோர்கள் கண்காணித்து இருந்திருக்கின்றனர். இதனிடையில் கனிகா கலாவின் கை தவறுதலாக தானியங்கி விமான பறத்தல் கட்டுப்பாட்டு கருவியில் பட்டு கருவியின் இயகக்த்தை நிறுத்தி இருக்கிறது.அதனை தொடர்ந்து விமானம் நிலை தடுமாற தொடங்கி இருக்கிறது. விமானம் நிலை தடுமாறுகிறது என்பதனை உணர்ந்து கொண்ட விமானிகள் ஓடி வந்து விமானத்தை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்து இருக்கின்றனர். ஆனால் இச்செய்தியை மறுத்த ஏர் இந்தியா விமான நிறுவனம், விமான பணிப்பெண்கள் விமான பறத்தல் அறையில் அதிக நேரம் செலவழித்ததை சுட்டி காட்டியே நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறது. மும்பையில் இருந்து வெளியாகும் மும்பை மிரர் பத்திரிக்கை இச்செய்தியை வெளியிட்டு இருந்தது.இதனை தொடர்ந்தே ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கைகளுக்க ு முன்னெடுத்து சென்றிருக்கிறது . அடப்பாவிகளா.... என்னடா நடக்குது? விமானத்துல குண்டு வைக்கிறது மாத்திரம் தீவிரவாதம் இல்லடா... வெடி குண்டு இல்லாமலேயே 161 பேர்களை கொல்ல பார்த்தானுங்க பாரு இதுவும் தீவிரவாத செயல் தான்...அவிங்களை நல்லா விசாரிங்கையா..ஏ தாவது இயக்கத்துலஇருக்க போறானுங்க! இவிங்கல்ல எவனாவது ஒருத்தன் இசுலாமியனா இருந்திருக்கனும ்.. என்ன நடந்திருக்கும்? 2001/11/ 7 ஐ மீண்டும் ஆவர்த்திக்க இசுலாமிய தீவிரவாதிகளின் சதி. விமான பணிப்பெண்களால் முறியடிக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கும்.www.nidurin,com

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) எனது அன்பு சகோதர, சகோதரிகளே,நண்பர்களே மற்றும் நீடுர்-நெய்வாசல் வாசிகளே....


அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) எனது அன்பு சகோதர, சகோதரிகளே,நண்பர்களே மற்றும் நீடுர்-நெய்வாசல் வாசிகளே.... நமதூர் ஜின்னா தெருவில் வசிப்பவரும், முன்னாள் நாட்டாண்மை, மர்ஹூம் தாதா ஷரீப் அவர்களின் இளைய மகனார், 44 வயதாகும் சகோதரர் மர்ஜுக் அலி அவர்கள், கடந்த இரு வருடமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்குள்ளானார்,தற்பொழுது அவரது இரு சிறு நீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில்,ஒருநாள்விட்டு,ஒருநாள் இரத்த சுத்தகரிப்பு செய்துவருகிறார்..மருத்துவ செலவிற்கு மிகவும் திண்டாடுகிறார்..தான் துபாயில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் இந்நோயிக்காக செலவழித்துவிட்டார்.. ஒருமுறை இரத்தம் சுத்தகரிப்பு செய்ய ரூ3500 செலவாகிறது.. மேலும் அவர் சிறுநீரகம் பெற வரிசையில் காத்திருக்கிறார்.. அப்படி சிறுநீரகம் கிடைத்தால்,அறுவை சிகிச்சை செய்ய சுமார் ஏழு இலட்சம் ஆகுமாம்... தயவு செய்து அவருக்கு உதவி கரம் நீட்டுங்கள்...சிறு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.. வல்ல ரஹ்மான் உங்களுக்கு நிறைய ரஹ்மாதையும்,பரக்கத்தையும் வழங்குவான்.. தயவுசெய்து முன்வாருங்கள்... நமது சகோதரரை காப்பாற்றுங்கள்... நான் சிங்கையில் என்னால் முடிந்த தொகையை வசூல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன்... விரைவில் அவரது தொடர்பு எண்ணை உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.. மர்ஜுக் ஒரு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்.. வாகன ஓட்டுனராக பணிபுரிந்தார்,ஊருக்கெல்லாம் நன்கு அறிமுகமான,பழக இனிமையான நபர்..ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர்,சிறு வயதிலேயே உழைக்க ஆரம்பித்தார்.துபாய் பயணம் சென்று பொருள் ஈட்டினார்.தனது குடும்பத்தை முன்னெற்ற பாதைக்கு இட்டுச்சென்றார்..கடின உழைப்பாளி.. திருமணமாகி, இரண்டு குழந்தைக்கு தந்தை.. அன்புடன்... அப்துல் ரவூப் புதுமனைத்தெரு (நீடுர்-நெய்வாசல்) சிங்கை +6591654076 www.nidurin.com

புதன், மே 01, 2013

மிக அவசரமாக இரத்தம் தேவை! ! ! !


சென்னை சகோதரரருக்கு ஒரு அவசரவேண்டுகொள் ! மிக அவசரமாக ரத்தம் இன்று 1/5/2013 அல்லது நாளை 2/05/2013 நடக்கும் அறுவைசிகிச்சைக்கு AB-NEGATIVE-தேவை படுகிறது சென்னை மற்றும் காஞ்சி மாவட்டதை சேர்ந்தவர்களுக்கு அறிய வாய்ப்பு.... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு சகோதரிக்குAB-NEGATIVE பிரிவு இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது ! தொடர்புக்கு: 9597280722(புர்கான்)...WWW.NIDURIN.COM

நாகப்பட்டினம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இனைந்து கண்டன ஆர்பாட...