சனி, ஜூன் 08, 2013

ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம் தேதி, இவரை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பேஸ்புக் மூலம், பிரவீன் காதலியை, ராகவ் வசியப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரமே, இந்த கொலைக்கு காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதே போல், 2012 டிச., 26 ல், ஓசூர், ராயக்கோட்டை, ஹட்கோவை சேர்ந்த செல்வம், 24, என்பவரும், பேஸ்புக் காதல் விவகாரத்தில், படுகொலை செய்யப்பட்டார். ஒரு பெண்ணுக்கு, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து, பேஸ்புக்கில், தகவல் அனுப்பியுள்ளார்.இதை, அந்த பெண், தன் காதலன், அர்ஜுனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அர்ஜுன், நண்பர்களுடன், செல்வத்தை கொலை செய்துள்ளார். பேஸ்புக் காதல் தகராறுகளால், கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். விவகாரம் வெளியே தெரியாமல், போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.சில குறும்புக்கார இளைஞர்கள், பேஸ்புக்கில், தங்களை பெண்கள் போல் பாவித்து, மற்ற மாணவியர் படங்களை, மார்பிங் செய்து, கிளுகிளுப்பு குறுந்தகவல்கள், படங்கள் அனுப்பி குறும்பு செய்கிறார்; இன்னும் ஒருபடி மேலே போய், காதலிப்பது போல், மோசடி செய்வதும் நடக்கிறது. "பேஸ்புக் பற்றி, மாணவர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, ஜூன் 07, 2013

சவூதி: Viber க்கு தடை! - அடுத்தது What's up?

ரியாத்: சவூதி அரேபியாவில் திறன்பேசி (Smartphone) களில் தொலைபேசப் பயன்படுத்தப்படும் Viber எனப்படும் இணைய தள பயன்பாட்டுசெயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதியின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (CITC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டு விதிகளை வைபர் (Viber) சரிவரக் கடைப்பிடிக்காததையடுத்து புதன்கிழமை முதல் அதன் சேவை முடக்கப்படுவதாக தொ.தொ - த தொ.ஒ ஆணையம் கூறியுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படாத மற்ற பயன்செயலிகள் மீதும் தடை ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் தொழிற்நுட்ப ஆணையம் கூறியுள்ளது. வைபர் எனப்படும் பயன்செயலி மூலம் இணையத்தினூடே தொலைபேசவோ, செய்திகள் அனுப்பவோ, கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளவோ இயன்றது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபியாவில் தங்கள் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைபர் இணைய தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்கைப், வாட்ஸ் அப், வைபர் ஆகிய செயலிகள் கட்டுப்பாட்டு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் படி சவூதி தொலைத் தொடர்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது கூறத்தக்கது. சவூதியை அடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் ஸ்கைப், வைபர் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதும், வாட்ஸ் அப் செயலி இன்னமும் பயன்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலிகளுக்கான மூலத் தளங்களை (Servers) தங்கள் நாடுகளில் கண்காணிப்பு காரணத்திற்காக நிறுவ வேண்டும் என்பதே சவூதி மற்றும் ஏனைய அரபு நாடுகளின் கோரிக்கையாக இருந்துவந்துள்ளது. சவூதி அரேபியாவில் தற்போது 15.8 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர் என்றும், சராசரி அமெரிக்கர் உபயோகிப்பதினும் மும்மடங்கு அதிகமாக சவூதி அரேபியாவில் உள்ளோர் தங்கள் காணொளி தளத்தைப் பயன்படுத்துவதாகவும், காணொளிக் காட்சித் தளங்களின் அரசனான யூ ட்யூப் கூறியுள்ளது.

புதன், ஜூன் 05, 2013

அன்பார்ந்த சகோதரர்களே.....


அஸ்ஸலாமு அலைக்கும், தற்போது குவைத் அரசாங்கத்தால் காதிம் மற்றும் இக்காமா(Resident visa) இல்லாதவர்களை தாயகம் அனுப்பும் முயற்சியில் குவைத் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக குவைத்தில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சபாத்(Safat )அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஸர்க் sharq, பினைத் அல் கார், Benid-Al Gar தஸ்மா Dasma ஆகிய இடங்களில் இன்று முதல் முழூவிழ்ச்சில் சோதனைகள் நடந்து வருவதாக நமக்கு தகவல் வந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், நமது இந்திய சகோதரர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்கும்படியும், தங்களுடைய சிவில் ID, Passport போன்ற ஆவணங்களை தங்கள் வசம் வைத்திருக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

திங்கள், ஜூன் 03, 2013

குவைத்தில் உள்ளவர்களின் கவனத்திற்க்கு

குவைத்தில் வெளியில் செல்பவர்களுக்கு மிக முக்கியமான விடியோ அஸ்ஸலாமு அலைக்கும், அன்பார்ந்த சகோதரர்களே!!! தற்போது குவைத் அரசாங்கத்தால் காதிம் மற்றும் இக்காமா இல்லாதவர்களை காவல் துறையினரால் பிடித்து தாயகம் அனுப்பும் செய்தி தாங்கள் அனைவரும் அறிந்த ஓன்றே!!!!! இதன் காரணமாக குவைத்தில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஸர்ஃக், பினைத் அல் கர், தஸ்மா ஆகிய இடங்களில் இன்று முதல் முழூவிழ்ச்சில் சோதனைகள் நடக்கவிருப்தாக நமக்கு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆகையால் நம் சகோதரர்கள் அனைவரும் முன் எச்சரிக்கையோடு இருக்கும்படியும் தங்களுடைய சிவில் ID, Passport ஆவணங்களை தங்கள் வசம் பாதுகாப்பாக வைக்கும்படியும் தெரிவித்துக் கொள்கிறோம்.