வெள்ளி, மார்ச் 30, 2012

பிரமோஸ் ஏவுகணை 2-வது முறை சோதனை வெற்றி

பாலசோர். மார்ச் 31 -ராணுவ பயன்பாட்டிற்கான சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இதுவரை பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதித்துள்ள இந்தியா, பிரமோஸ் என்ற ஏவுகணையையும் தயாரித்துள்ளது. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரமோஸ் ஏவுகணை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இப்போது இதே ஏவுகணையின் ராணுவ மாடல் சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை சோதனையும் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் சர்வதேச சோதனை தளத்தில் நடைபெற்றது. ராணுவத்தில் பயன்படுத்துவற்கான இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நடமாடும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த 28-ம் தேதி இதே பிரமோஸ் ஏவுகணை சோதனை இதே ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை தாங்கி 290 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை இரு பிரிவு எரிபொருள்களை கொண்டதாகும். முதல் கட்டத்தில் திட எரிபொருளும் இரண்டாம் கட்டத்தில் திரவ எரிபொருளும் பயன்படுத்தப்பட்டு செலுத்தப்படும்.

இந்த ஏவுகணை ஏற்கனவே தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதற்காக இப்போது மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் பெயரில் உள்ள முதல் இரண்டெழுத்துக்களையும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களையும் இணைத்து பிரமோஸ் என்று இந்த கூட்டு முயற்சி ஏவுகணைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

புதன், மார்ச் 28, 2012

துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)



துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு
Dubai International Peace Convention is being organized by Mohammed Bin Rashid Al Maktoum Award for World Peace (Government of Dubai) in association with Al Manar Center in partnership with Islamic Affairs & Charitable Activities Department (IACAD). DIPC 2012 will be a 3 day event to be held on 12th 13th & 14th April 2012 at Dubai World Trade Centre, Dubai. For further details,

பிரதமர் மன்மோகன் சிங்குடன் கிலானி சந்திப்பு


சியோல், மார்ச் 28 - தென் கொரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி நேற்று சியோல் நகரில் சந்தித்து பேசினார். நான்கு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் தென் கொரியா சென்றுள்ளார். அங்கு சர்வதேச அணுசக்தி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு கொண்டனர். இந்த மாநாட்டின் புற நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஜா கிலானி சந்தித்து பேசினார்.

இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் கூடிப்பேச தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது பரஸ்பரம் இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ள துறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் நம்பிக்கையின்மையை அகற்றி பரஸ்பரம் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் நோக்கம் நன்றாகவே இருக்கிறது என்றும் ஆனால் இரு தரப்பு உறவில் ஒரு புதிய உத்தியை பின் தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கருத்து கூறியதாக அவர் மேலும் கூறினார். பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்கு ஆசிய சங்கம் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியமான மேடையாக இருக்கிறது என்றும் ஹீனா ரப்பானி கர் கூறினார்.

இதுபோன்ற பிராந்திய ஒத்துழைப்பு மன்றங்களை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஜூலை மாத பாகிஸ்தான் வருகையை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அணு சக்தி மாநாட்டின் துவக்க நாள் அன்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கும் கிலானியும் கை குலுக்கி கொண்டதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிரிட்டன், ஆஸ்திரேலியத் தூதர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை, மார்ச்.28 - பிரிட்டன், ஆஸ்திரேலியத்தூதர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமிழ்நாட்டின் தொலைநோக்குத்திட்டம் 2023 க்கு நெஞ்சார வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தனர். பிரிட்டன் தூதர் சந்திப்பு: டில்லியில் உள்ள இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பீவன் மற்றும் சென்னையில் உள்ள துணைத்தூதர் மைக் நிரித விரியானாகீஸ் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.அப்போது தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற வைத்து, முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ அரும்பாடுபடும் முதல்வரை ஜேம்ஸ் பீவன் பாராட்டினார்.முதல்வரின் இத்தகைய முயற்சியில் தாங்களும், தங்கள் நாடும் பங்குபெற ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் அவர்களுக்கு தேவையான உதவிச் செய்ய அரசு நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆஸ்திரோலியத் தூதர் சந்திப்பு:

இதேபோல இந்தியாவிற்கான ஆஸ்திரேலியத்தூதர் பீட்டர்வர்கீசும் துணைத்தூதர் டேவிட் ஹோலி மற்றும்(வர்த்தகத்துறை) துணைத்தூதர் மைக்கேல் கார்ட்டர் ஆகியோர் நேற்று தலைமைச் செலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.அவர்களை அன்புடன் முதல்வர் வரவேற்றார்.முதல்வருடன் நடத்திய விவாதத்தின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ள தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், அதுவும் குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக வளர்த்து வருவதாகவும், அதற்கு வழிவகுக்கும் வகையில் 2023 தொலைநோக்குத்திட்டம் இருப்பதாகவும் பீட்டர் வர்கீஸ் குறிப்பிட்டார்.தமிழகத்தின் இந்த வளர்ச்சிப் பாதையில், தொழில்கல்விப்பயிற்சிகள், எரிசக்தி, ஆழ்கடல் மீன் பிடிப்பு குறைந்த செலவிலான வீட்டுவசதிகட்டுமானம், மற்றும் கலாசார, பரிமாற்றத்திட்டங்கள் போன்ற பலதுறைகளில் தமிழகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க தயாராயிருப்பதாக பீட்டர் வர்க்கீஸ் தெரிவித்தார்.இறுதியில் தமிழக வளர்ச்சியில் பங்கேற்க முன்வரும் ஆஸ்திரேலிய முயற்சிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

சனி, மார்ச் 24, 2012

அமெரிக்க தீர்மானத்தை செயல்படுத்த மாட்டோம்

கொழும்பு, மார்ச். 25 - ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜெனிவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. இது இலங்கையில் நடக்கும் சாதாரண தேர்தல் அல்ல. மிக சிறிய நாடான இலங்கையை எதிர்த்து மிகப் பெரிய நாடான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் மிக குறைவு. எமது நாட்டில் பலர் மது விற்பனைக்கான அனுமதியை பெற்றிருந்தாலும் அவர்கள் விரும்பிய இடத்தில் கடையை திறக்க பொதுமக்கள் அனுமதிப்பதில்லை. அது போல அமெரிக்கா, ஜெனிவா தீர்மானத்தை பெற்றிருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அன்று பிரபாகரனை உருவாக்கிய போது ஒரு உருத்திர குமாரனையும் உருவாக்கும் திட்டம்தான் இது. மிகச் சிறிய நாடான கியூபாவே அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் எங்களால் முடியாதா என்றார் அவர்

அமெரிக்காவில் ஆவணமின்றி உள்ள இந்தியர்கள் உயர்வு

வாஷிங்டன், மார்ச். 25 - அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக உயர்ந்துள்ளது என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2011 ம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது. இதில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் முறையான ஆவணங்களின்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு இந்த பட்டியலில் 7 வது இடம் ஆகும்

வியாழன், மார்ச் 22, 2012

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன: 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன.
ஆனால், போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னரான இலங்கையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
www.nidurin.blogspot.com

செவ்வாய், மார்ச் 20, 2012

ஆயுத இறக்குமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

லண்டன்:உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதிச்செய்யும் நாடு என்ற பெருமையை பெற்றிருந்த சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச ஆயுத விற்பனையில் 10 சதவீதத்தை இந்தியா இறக்குமதிச் செய்வதாக சுவீடன் ஏஜன்சியான ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் புதிய அறிக்கை கூறுகிறது.

2006-07 ஆண்டு காலக்கட்டத்தில் முதலிடத்தில் இருந்த சீனா தற்பொழுது ஆயுத இறக்குமதியில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் ஆயுத இறக்குமதி தற்போதைய சர்வதேச ஆயுத விற்பனையில் 5 சதவீதம் மட்டுமே ஆகும். பாகிஸ்தானும் 5 சதவீதம் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து சீனாவுடன் நான்காவது இடத்தை பகிர்ந்துகொள்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறும் அறிக்கை, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக 10 ஆயிரம் கோடி டாலரை செலவழிக்கும் என்று கூறுகிறது.

உள்நாட்டில் ஆயுத தயாரிப்பை துவக்கி அதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சீனாவின் ஆயுத இறக்குமதி குறைவதற்கு காரணமாகும். அதேவேளையில் சீனா ஆயுத ஏற்றுமதியில் சீனா உலகிலேயே 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா தீர்மானித்ததன் காரணமாக ஆயுத இறக்குமதியில் இந்தியா முந்தியுள்ளது

ஞாயிறு, மார்ச் 18, 2012

ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் : ஆர்.எஸ்.எஸ்

புது தில்லி : இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தும் நிலையில் அதற்கு முரணாக இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக தன்னுடைய பத்திரிகையான ஆர்கனைஸரில் தலையங்கத்தில் தங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் மேற்கத்திய நாடுகளின் போக்குக்கு இந்தியா பலியாகி விடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த புலிகளுக்கு எதிரான போரில் அனைத்து போர் விதிமுறைகளையும் மீறி புலிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் செயல்கள் சேனல் 4 தொலைக்காட்சியின் மூலம் வெளியாகியுள்ள நிலையில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இத்தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, மார்ச் 16, 2012

இந்தியாவுக்குப் பொருளாதார தடைவிதிக்க அமெரிக்கா திட்டம்!

மத்திய கிழக்கு நாடுகளில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்காவுக்கு தடையாக இருப்பதோடு தொடர்ந்து எரிச்சலூட்டிவரும் ஈரானுடன் இந்தியா பொருளாதார உறவுகளைத் தொடருமானால் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாகி ஒருவர் கூறியதாக புளூம்பர்க் வயர் செய்திகள் கூறியுள்ளது.
இது குறித்து ஜூன் 28ஆம் தேதி வாக்கில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவுக்கு 10 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஈரானுடனான கச்சா எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா கணிசமாகக் குறைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலும் இந்திய வணிகத்துறை அமைச்சகம் மற்ற துறைகளில் ஈரானுடன் உறவுகள் வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதால் அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு அரசியல்வாதிகள், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவை நெருக்கி வருவதாகத் தெரிகிறது.

வியாழன், மார்ச் 15, 2012

இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

புதுடெல்லி:சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியுறவு துணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் உயர்மட்டக்குழு சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார துறை அமைச்சர் டாக்டர் பந்தர் பின் முஹம்மது பின் ஹம்ஸா அஸத் ஹாஜருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவில் இருந்து வரும் ஹஜ்ஜிற்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை பரிசீலித்து 10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீட்டை அனுமதிக்கவேண்டும் என்று பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுத்தொடர்பான தீர்மானம் ஹஜ்ஜையொட்டிய கட்டத்தில் உருவாகும்.

புனித பயணிகளுக்கு மெட்ரோ ரெயில் வசதியை அனுமதிக்கவேண்டும் என்றும் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும்

புதன், மார்ச் 14, 2012

சங்கரன்கோவில் விஜயகாந்தை விரட்டியடித்த பெண்கள்

நெல்லை, மார்ச் 14 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற விஜயகாந்தை பெண்கள் விரட்டியடித்தனர். சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2 தினங்களாக சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட தர்மத்தூரணிக்கு பிரச்சாரம் செய்ய சென்றார். இதற்கிடையே தேர்தலையொட்டி இப்பகுதி கிளைச் செயலாளராக இருந்த பரமன் என்பவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார். இதனால் பரமன் ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் விஜயகாந்த் இங்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் அவர்களை பார்த்து நாக்கை துறுத்தி எச்சரித்தார். இதை சட்டை செய்யாத பெண்கள் மீண்டும் விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதைப்பார்த்த பிரச்சாரத்தில் இருந்த தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் பெண்களை பார்த்து அமைதியாக இருங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் நான் பேசிக்கொண்டிருக்கும் போது நீ எப்படி சொல்லலாம் என்று அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர் நொந்துபோனார். இச்சம்பவங்களையடுத்து அத்துடன் பிரச்சாரத்தை அப்பகுதியில் முடித்துவிட்டு வேறு இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

சிறுமி கற்பழித்து கொலை: காமகொடூரனுக்கு 3 ஆயுள்

ஊட்டி, மார்ச்.14 - 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த காம கொடூரனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 70 அபராதமும் விதித்து ஊட்டி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பில்லிக்கம்பை பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ். கூலிவேலை செய்து வரும் இவரது மகள் ஜனனி(6).அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 29-9-2009 அன்று பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன் என்பவரது மகன் மணிகண்டன்(25), ஜனனியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜனனி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து அவன் மீது ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி பிரேம்குமார், குற்றவாளி மணிகண்டனுக்கு கற்பழித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், பெண்களை வன்கொடுமை செய்தமைக்காக ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 3 ஆயுள் தண்டனையும், 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் வாதாடினார்.

செவ்வாய், மார்ச் 13, 2012

சங்கரன்பந்தல் வயலில் பஸ் கவிழ்ந்தது

இன்று (13/03/20012) காலை 10:30 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து பொறையார் சென்ற சமீர் பேருந்து அரும்பாக்கம் அருகில் நல்லாடை முக்கட்டுக்கு கொஞ்சம் முன்னால் கவிழ்ந்தது. இன்று 10:30 மணி அளவில் சமீர் பஸ் அரும்பாக்கத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தது. முப்பதுக்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னால் வந்த லாரிக்கு இடம் கொடுப்பதற்காக வலது பக்கமாக ஒதுங்கிய வண்டி அப்படியே சறுக்கி வயலில் கவிழ்ந்தது. பத்து பதினைந்து பேருக்கு அடி. இவர்களுக்கு சிகிக்சை அளிப்பதற்கு சங்கரன்பன்தல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கபட்டது

. இவர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு நல்ல அடி என்பதால் மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்குமாறு டாக்டர் கூறியதின் பேரில் அவர்கள் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டனர். இறையருளால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. பஸ்ஸை ஓட்டிவந்தது கண்டக்டர் என்று சொல்லப்படுகிறது . டிரைவரும் , கண்டக்டரும் ஸ்பாட்டிலிருந்து வழக்கம் போல் எஸ்கேப். 20 பேர் சிறு காயங்களுடன் சங்கரன்பந்தல் மருத்துவமனையில் சேர்க்க பட்டனர் இதில் பயணம் செய்த திருவிளையாட்டம் , கடலி , வாழ்கை சேர்ந்தவர்கள் இதில் 6 நபர்களுக்கு அதிக காயங்களுடன் தலையில் அடிபட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பலத்த காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை

பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை: பிரதமரின் நேயம்


இந்தூர், மார்ச்.13 - 2008 ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பெண் பூர்ணிமா ஜெயினுக்கு பிரதமர் மன்மோகன்சிங்கின் தலையீட்டால் ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் ஜெயின். இவரது மகள் பூர்ணிமா ஜெயின். பூர்ணிமாவுக்கு 25 சதவீதம்தான் கண்பார்வை உள்ளது. ஆனால் குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் பூர்ணிமா. ஆனால் அவரது பார்வை குறைபாடை காரணம் காட்டி அவருக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து பூர்ணிமா ஐகோர்ட்டுக்கு சென்றார். விசாரணை செய்த கோர்ட் அவளை மத்திய நிர்வாக ஆணைய அலுவலகத்தை அணுகுமாறு வழிகாட்டினர். ஆனால் அங்கு சென்ற பிறகும் அவருக்கு பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பிருந்தாகாரத் எம்.பி. உதவியால் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறினார். பிரதமரின் தலையீட்டால் பூர்ணிமாவுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. 4 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சியளிப்பதாக பூர்ணிமா தெரிவித்துள்ளா

ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த மூத்த மனைவி

லண்டன், மார்ச்.13 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த இடத்தை அவரது மனைவிகளில் ஒருவர்தான் காட்டிக் கொடுத்துள்ளார். இதற்கு காரணம், ஒசாமா தனது கடைசி மனைவி மீது அதிக அன்பு காட்டி வந்ததுதான் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனுக்கு 5 மனைவிகள். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில் 5 மனைவிகளில் இளையவரான அல்சதாவுடன் மட்டுமே இரவு நேரத்தை ஒசாமா உல்லாசமாக கழித்துள்ளார். அதே சமயம் அவரது மூத்த மனைவி ஹைரியாசபீர், அக்கட்டிடத்தின் தரை தளத்தில் தனியாக படுத்திருந்தாராம். தன்னை விட்டு விட்டு எந்நேரமும் அல்சதாவுடன் பின்லேடன் இருந்தது ஹைரியாவுக்கு பொறாமையை தூண்டியுள்ளது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்புணர்வால் அவர் தனது கணவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக் கொடுத்து விட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

திங்கள், மார்ச் 12, 2012

ஜப்பானில் சுனாமி முதலாம் ஆண்டு நினைவு நாள்


டோக்கியோ,மார்ச்.- 12 - சுனாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் ஜப்பானில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்குபொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச்11-ம் தேதி மதியம் 2.26 மணிக்கு வடகிழக்கு கடற்கரை பகுதியில் 9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ராட்சத பேரலை புகுஷிமா மாகாணத்தை கடுமையாக தாக்கி துவம்சம் செய்தது. கட்டிடங்கள் வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. கப்பல்கள், படகுகள், கார்களும் தண்ணீரில் மிதந்தபடி ரோடுகளில் வலம்வந்தது. இந்த இயற்கை பேரழிவில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர். அவர்களில் 15,800 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் 3 ஆயிரம் பேரை காணவில்லை. கோர சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் சொல் லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். பூகம்பம் மற்றும் சுனாமியில் புகுஷிமாவில் உள்ள தாய்சி அணுஉலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் உள்ள 6 அணுஉலைகள் 4 உலைகள் வெடித்து சிதறின. வெடித்து சிதறிய அணுஉலைகளை குளிர்விக்கும் பணி கடந்த 6 மாதத்துக்கும் மேல் நடைபெற்றது. தற்போது அணுஉலை பாதுகாப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கொடுமைகளையும், உயிர் பலிகளையும் ஏற்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஜப்பானில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த விழாவில் ஜப்பான் மன்னர் அகிடோ அவரது மனைவி ராணி மிசிகோவுடன் பங்கேற்றார். இவர்களுடன் பிரதமர் யோஷிகியோ நோடாவுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்தில் புதுப்பெண்ணை விவாகரத்து செய்த மணமகன்.


கோலாலம்பூரில் லீ (23) என்பவர், தனது 27 வயது காதலியான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு, கார் டீலர் ஒருவர் வந்துள்ளார். டீலரை கண்டவுடன் தனக்கு உடனடியாக புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு லீயிடம் வாங் கேட்டார். அதற்கு லீ மறுப்பு தெரிவித்தார்.


இதனால் இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இவர்களின் வாய்த்தகராறு முற்றி, கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்துவிடுவதாக வாங் மிரட்டினாள்.

இவ்வளவு பிடிவாதமான மனைவி தனக்கு வேண்டாம் என லீ முடிவெடுத்துள்ளார். பின், அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்துள்ளனர். விரைவில் அவர்களுக்கு முறைப்படி விவாகரத்து கிடைக்க உள்ளது. புது மனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1 மணிநேரத்திலேயே, கணவர் விவாகரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, மார்ச் 11, 2012

இதுவரை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் 320 ஆபரேசன்

சென்னை, மார்ச். 11 - முதல்வரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் 320 ஆபரேசன் செய்து சென்னை அரசு மருத்துவமனை முதலிடம் பெற்று இழப்பிட்டு தொகையாக ரூ.28 லட்சம் பெற்றது. முதல்​ அமைச்சர் ஜெயலலிதா புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் உயிர்காக்கும் உயர் சிகிச்சை பெறும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 வருடத்துக்கு ரூ.4 லட்சம் ஒரு குடும்பத்துக்கு மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி ஒருமாதம் ஆகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் போட்டி போட்டுக் கொண்டு அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார்கள். இதுவரை நடந்த மொத்த அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது. 848 பேர் விண்ணப்பித்து இருந்ததில் 613 பேருக்கு சிகிச்சை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் 320 பேருக்கு பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 94 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. இதன் மூலம் யுனைடெட் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.28 லட்சத்து 36 ஆயிரம் காப்பீட்டு தொகையை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. 2​வது இடத்தில் கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவ மனையும், 3​வது இடத்தில் மதுரை தேவகி கேன்சர் மருத்துவமனையும் பெற்றுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க 250 படுக்கைகள் உள்ளன. இருதயம், புற்று நோய், சிறுnullரகம், குடல், ரத்தம் தொடர்பான நோய்கள், கல்லீரல், நரம்பு, எலும்பு முறிவு, உள்ளிட்ட 12 மருத்துவ துறையின் கீழ் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்

இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: விஜயகாந்த்!


சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தின் மீது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக நேற்று(சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து அந்த அரசு நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மன்றம் நிபுணர் குழுவை அமைத்து விசாரித்தது.
மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது; இலங்கை போர்க் குற்றவாளிதான் என்றும் உணரப்பட்டு இலங்கை அரசுக்கும் அது தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு, தானே ஒரு குழுவை அமைத்து விசாரித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளும் வெளி வந்துள்ளன. இலங்கை அதையும் நிறைவேற்றவில்லை.
இன்று இலங்கையில் தமிழ்ப் பகுதியில் தமிழ் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள் சிங்கள இராணுவத்தினரால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். தமிழ்ப் பகுதிகளில் சிங்கள இனவெறி அரசின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்னும் உள்ளனர்.

தமிழ்ப் பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே இன்றும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமைகளின் பேரால், சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து ஜனநாயக நாடுகளின் சார்பில் அமெரிக்க நாடு, ஜெனீவாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானம் முழு அளவிற்கு நமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை உலக அபிப்பிராயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும்.
இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். மனித உரிமைக் குழுவில் ஒரு குறிப்பிட்ட நாட்டை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டு வரக் கூடாது என்று இந்தியா கூறி வருகிறது. இதன் மூலம் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு முழு மனதோடு ஆதரிக்க வேண்டும். நடுநிலை வகிப்பதையோ அல்லது அந்த தீர்மானம் வருகின்றபோது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதையோ மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."
மேற்கண்டவாறு தன்னுடைய அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்

சனி, மார்ச் 10, 2012

முஸ்லிம்களை கண்காணிக்கும் நியூயார்க் போலீஸ்: மேலும் ஆதாரங்கள் வெளியீடு!


நியூயார்க்:முஸ்லிம்களையும் அவர்களின் நிறுவனங்களையும் நியூயார்க் போலீஸ் கண்காணித்து வருவது குறித்த மேலும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மதத்தின் அடிப்படையிலேயே நியூயார்க் போலீஸ் முஸ்லிம்களை கண்காணிப்பதை நிரூபிக்கும் விதமாக அசோசியேட் ப்ரஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சிரியா, எகிப்து, அல்பேனியா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களை நியூயார்க் போலீஸ் கண்காணிக்கிறது. 2007-ஆம் ஆண்டு சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள் முஸ்லிம்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். சிரியாவில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்த போதிலும் முஸ்லிம்களை மட்டுமே கண்காணிக்க பணிக்கப்பட்டோம் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள், வியாபார ஸ்தாபனங்கள், மஸ்ஜிதுகள் ஆகியவற்றின் புகைப்பட்டங்களை பதிவுச் செய்வது, ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பலகார கடைகள் ஆகியவற்றில் சென்று முஸ்லிம்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது, ரகசியமாக முஸ்லிம்கள் குறித்த விபரங்களை சேகரிப்பது ஆகிய பணிகளை போலீஸார் முக்கியமாக மேற்கொண்டுள்ளனர்.

எகிப்தைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர்களையும், அல்பேனியா குடியேற்றக்காரர்களில் இதர மதத்தவர்களையும் தவிர்த்து முஸ்லிம்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டனர் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.

முன்பு இதைப் போன்றதொரு குற்றச்சாட்டு எழுந்தவேளையில் அவ்வாறு தாங்கள் முஸ்லிம்களை கண்காணிக்கவில்லை என்று போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், பின்னர் ஆதாரங்கள் வெளியான பிறகு பாதுகாப்பு பீதியை குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கண்காணித்ததாக போலீஸ் விளக்கம் அளித்தது.

தற்போது நியூயார்க் போலீஸ் பல்டியடித்துள்ளது. பாதுகாப்பு பீதியை முன்னிட்டு கண்காணிக்கவில்லை என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணித்ததாகவும், மதத்தின் அடிப்படையில் கண்காணிக்கவில்லை என்றும் நியூயார்க் மேயர் மிகாயேல் ப்ளூம்பர்க் புதிய விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவருடைய கூற்றை மறுக்கும் விதமாக புதிய ஆவணங்கள் அமைந்துள்ளன.

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒபாமா - கர்சாய் உரையாடல்

வாஷிங்டன், மார்ச் 10 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் உரையாடல் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி துறை அமைச்சர் ஜாய் கேமே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் உரையாடல் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்றார். குறிப்பாக இருநாட்டு உறவுகள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அம்சங்கள், ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானப் பணிகள் நல்லிணக்க நடவடிக்கைகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் ஜாய் கேமே தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் தலைமையிலான நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்டுவரும் சமரச பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஒபாமாவிடம் கர்சாய் எடுத்துக்கூறியதாக தெரிகிறது. இரு நாடுகளும் பரஸ்பர பங்களிப்பை அளிப்பது எனவும் சிகாகோவில் நடக்க இருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில் இரு நாடுகளும் கலந்துகொள்வது எனவும் இருநாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்
றும் கேமே கூறினார்

காதலில் விழுந்தேன் பட டைரக்டர் நண்பருடன் கைது

சென்னை,மார்ச்.10 - படம் தயாரிக்க ரூ.67 லட்சம் பணத்தை தயாரிப்பாளரிடம் வாங்கி மோசடி செய்த சன்பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் பட டைரக்டர் பி.வி.பிரசாத் மற்றும் அவருடன் கூட்டுசேர்ந்து படதயாரிப்பாளரை ஏமாற்றிய மற்றொரு டைரக்டர் மாசி மற்றும் தீ படத்தை டைரக்ட் செய்த கிச்சா என்பவரும் மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இதுபற்றிய விபரம் வருமாறு; கோலங்கள், சித்தி, அண்ணாமலை, சொர்க்கம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் தமிழ்குமரன். இவர் கடந்த 2009 ம் ஆண்டு சொந்தமாக திரைப்படம் தயாரிக்க எண்ணி சன் பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய டைரக்டர் பி.வி.பிரசாத் என்பவரை தனது படத்தை இயக்கும் படி அமர்த்தியுள்ளார். அதன் படி ஒப்பந்தம் போடப்பட்டு முதல்கட்டமாக தமிழ்குமரன் பி.வி.பிரசாத் வசம் ரூ.67 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். தனது படத்திற்கு காதலில் விழுந்தேன் கதாநாயகன் நகுலை கதாநாயகனாக போடும்படி கேட்டுள்ளார். அதற்க்கு ஒத்துகொண்டு பணத்தை வாங்கிய டைரக்டர் பிரசாத் படத்தை எடுக்காமல் இழுத்தடித்துள்ளார் இதுப்பற்றி தயாரிப்பாளர் கேட்ட பொழுதெல்லாம் சரியான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். ஒருக்கட்டத்தில் தனது நண்பரும் மாசி, தீ படத்தை இயக்கியவருமான கிச்சா என்பவரை காட்டி இனி இவர்தான் உங்கள் படத்தை இயக்குவார் என்று கூரியுள்ளார்.ஆனால் கிச்சாவும் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி தயாரிப்பாளர் தமிழ்குமரன் படம் பதிவு செய்யும் லேபில் விசாரித்தபோது படத்தை தமிழ்குமரன் பெயரில் பதிவு செய்யாமல் பிரசாத் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி கேட்டு தனது பணத்தை தமிழ்குமரன் திரும்ப கேட்டபோது ரூ.50 லட்சத்திற்க்கு செக் கொடுத்துள்ளனர். பிறகு அதையும் போடவேண்டாம் என்று கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தயரிப்பாளர் கமிஷ்னர் திரிபாதியிடம் இதுப்பற்றி புகார் அளித்துள்ளார். புகாரை விசாரிக்க திரிபாதி உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றபிரிவு போலிசார் நேற்று இருவரையும் கைது செய்து சைதப்பேட்டை 11வது திமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர். பி.வி.பிரசாத்திடமிருந்து அவர் பயன் படுத்திய இன்னொவர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளி, மார்ச் 09, 2012

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு!

புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கட்டுரைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கஸ்மியின் கைது டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு இடையே கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ரேடியோ டெஹ்ரான் மற்றும் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா ஆகியவற்றில் பணியாற்றிய கஸ்மி இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஈரானுடன் தொடர்புடைய இதர நபர்களுடன் கண்காணிப்பில் இருந்தார். இந்தியாவின் விசாரணையை கண்காணித்துக்கொண்டிருந்த இஸ்ரேல் வட்டாரங்கள் கஸ்மியை கைது செய்ய நிர்பந்தம் அளித்துள்ளதாக கருதப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சார்ந்த கஸ்மி கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியில் பத்திரிகைத்துறையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றார். மத்திய அரசின் ப்ரஸ் இன்ஃபர்மேசன் பீரோவின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளரான கஸ்மி தூதரக பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். தனது கட்டுரைகளில் ஃபலஸ்தீனில் அப்பாவி மக்களை கொலைச் செய்யும் இஸ்ரேலை கடுமையான மொழியில் விமர்சிப்பார் கஸ்மி. இவரது கட்டுரைகளை அரபு மொழி பத்திரிகைகள் மொழிப்பெயர்த்து வெளியிடுவதுண்டு. கஸ்மியை பலிகடாவாக்க இக்கட்டுரைகள் தாம் தூண்டுகோலாக அமைந்துள்ளன என்று கருதப்படுகிறது. 2003-ஆம் ஆண்டு ஈராக் போர் குறித்து தூர்தர்சன் மற்றும் பி.பி.சிக்காக ரிப்போர்ட் செய்த கஸ்மி ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரசீக மொழியிலும் புவியியலிலும் பட்டமேற்படிப்பை முடித்துள்ள 50 வயதான கஸ்மி தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் டெல்லியில் பி.கே.தத் காலனியில் வசித்து வந்தார். குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஈரானை பகைக்க வேண்டாம் என்பதால் மூடி மறைப்பதாகவும் இஸ்ரேலின் நாளிதழான ஹாரட்ஸ் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி தூதரக ரிப்போர்டர் பராக் ராவிட் என்பவர் அளித்த செய்தியாகும் அது. கஸ்மியை கைது செய்தது தன்னை ஆச்சரியமடையச் செய்ததாகவும், தன்னிடம் போலீஸ் கட்டாயப்படுத்தி கைது மெமோவை எழுதி வாங்கியதாகவும் கஸ்மியின் மகனும், எம்.பி.ஏ பட்டதாரியுமான ஷவ்ஸாப் கூறுகிறார். “எனது தந்தை நிரபராதி ஆவார். போலீஸ் அவரை பலிகடாவாக மாற்றுகிறது” என்று ஷவ்ஸாப் கூறுகிறார். ஈராக் போரை தனது உயிரை பணயம் வைத்து ரிப்போர்ட் செய்த தேசிய ஹீரோதான் கஸ்மி. அவரை பொய் வழக்கில் சிக்கவைத்துள்ளார்கள். கஸ்மியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வேளையில் அவரது வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். கஸ்மி தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளார்

ஈரானை தாக்கினால் கடுமையான எதிர்விளைவுகள் உருவாகும்: இந்தியா எச்சரிக்கை!

வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான தாக்குதல் மேற்காசியாவில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால், இந்தியாவின் சார்பாக கூறியதாவது: இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கம், இந்தியாவின் எரிபொருள் தேவை ஆகியவற்றை உருக்குலைக்கும் விதமாக அமெரிக்கப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மேலும் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தவறானப் புரிதல்களும் உருவாக்கப்படுகின்றன. இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் இந்தியாவில் இன்னமும் 40 கோடி மக்கள் வர்த்தக ரீதியான எரிபொருள் பயன்பாட்டை மேற்கொள்வதில்லை. மாறாக ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு மாதந்தோறும் அதிகரித்து வருவதாகவும், அது குறித்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்படுகின்றன. இச்செயல் இந்தியா குறித்து தவறாகச் சித்தரிக்கப்படுவதாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் இறக்குமதி அளவை ஒப்பிடும்போது, ஈரானிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயின் இறக்குமதி அளவு குறைவாகவே உள்ளது. இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால், உடனடியாக ஒரு மாற்று ஏற்பாட்டை உருவாக்குவதோ, ஈரானிடமிருந்து கச்சா எகச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதோ இயலாது. சர்வதேச சமுதாயத்தில் பொறுப்புமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தனது கடமையை சிறப்பாகவே செய்யும். ஈரான் விவகாரத்தில் மோதல் போக்கு உருவாவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.

வெள்ளி, மார்ச் 02, 2012

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை, மார்ச்.9 - முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வநத்தது. எடுத்து பேசியபோது எதிர்முனையில் இருந்த நபர் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அதற்கு அருகில் உள்ள வீடு ஆகியவற்றில் குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

உடனே போலீசார் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே சென்னை போலீசார் தஞ்சாவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். எதிர்முனையில் இருந்த நபர் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது திருவொற்றியூரில் இருந்து ஒரு பெண் பேசினார். அவரிடம் விசாரித்த போது அவரது கணவர் தஞ்சாவூரில் இருப்பதாக தெரிவித்தார். உடனே தஞ்சாவூர் போலீசார் ஈஸ்வரி நகரில் வசிக்கும் ஜான் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒத்துக் கொண்டார்.அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் இருந்து கடைசியாக 108 ஆம்புலன்சுக்கு பேசியிருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது பற்றி ஜான் கூறியதாவது:

நான் எனது மனைவி அருள் உதயாவுடன் சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் நான் தஞ்சாவூருக்கு சென்றேன். எனது மனைவி அருள் விஜயா. திருமணமான 3 வருடத்தில் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அவர் சென்னை திருவொற்றியூரில் ஒரு துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்பம் நடத்த வரும்படி பல முறை அழைத்தும் வர மறுத்துவிட்டார். நான் தனியாக தஞ்சாவூரில் வசிக்கிறேன். என்னை உதாசீனப்படுத்தும் என் மனைவியை ஏதாவது ஒரு வகையில் பழிவாங்க திட்டம் போட்டேன்.

எனது திட்டப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். அவர்களிடம் எனது மனைவியின் செல்போன் நம்பரையும் கொடுத்தேன். போலீசார் அந்த நம்பர் மூலம் எனது மனைவியை பிடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை பிடித்து விட்டார்கள். இவ்வாறு ஜான் கூறினார்., வெடிகுண்டு வதந்தியைப் பரப்பியதில் எனது மனைவிக்கும் தொடர்பு உள்ளது என்றார். இதையடுத்து போலீசார் அருள் உதயாவையும் கைது செய்தனர்