நீடூர்


மணதார மக்கள் பாராட்டுகிறார்கள் ! ! !



நீடூர் ஊராட்சி தலைவர் A.M.சபீர்அஹமது வேண்டுகோலை ஏற்று நீடூர் ஜனாப் S.கியாசுதீன் அவர்கள் 2,50000.ரூபாய் மதிப்பிலான டிராக்டர் ஒன்றை அன்பளிப்பாக நீடூர்ஊராட்சிக்கு அளித்துள்ளார்கள்.இதற்காக நீடூர் ஊராட்சிமன்ற தலைவர் சபீர்அஹமது அவர்களும் ஊர் பொதுமக்களும் s.கீயாசுதீன் அவர்களை மணதார பாராட்டி.நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளர்கள்.இதனால் ஊர்எங்கும் சுத்தமாக காட்சியளிக்கிறது.என்பதில் மாற்றுகருத்தில்லை. இதற்கிடையில் ஊரில் கழிவறைகள் கட்டிதர ரூ.30.000ஆயிரம் தருவதாக கியாசுதீன் அவர்கள் இசைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.இவர்களின் நலப்பணிக்காண உதவிகள் வரவேற்றக்தக்கதாகும்.மக்களின் நலன்களில் ஈடுபடும். S.கியாஸ்தீன் அவர்களை நீடூர்-நெய்வாசல் குருப் சார்ப்பாக பாரட்டுவோம். . .

--------------------------------------------------------------------------------------------

நீடூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக அறிவிப்பு ! ! !



-----------------------------------------------------------------------------------------------

நீடூர்-நெய்வாசல் பெரியபள்ளிவாசலில் நோட்டீஸ் வெளியிட தற்போதைய நிர்வாகம் முடிவு


----------------------------------------------------------------------------------------------
நீடூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நன்றி அறிவிப்பு பேனர்


-----------------------------------------------------------------------------------------------
வரும் 07.04.2012.காலை11மணி. மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீடூர் தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
------------------------------------------------------------------------------------------------ நமதூர் ஜமாத்தார்கள் பிரசட்சனை.அதனை கையில்எடுத்துள்ள வட்டார ஜமாத் கூட்டமைபின் முயர்ச்சி வெற்றிபெறுமா?
நமதூரில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளை சமாதானம் செய்துவைக்கும் முயர்ச்சியில் இருசாரார்களையும் அழைத்து பாம்ஸ்மஹாலில் இருதினங்களாக பேச்சுவார்த்தையில். வாட்டாரஜமாத் கூட்டமைப்பு.நிர்வாகிகள் ஈடுப்பட்டுவருகிறது. இதுவரவேற்றக்க தக்க செய்தியாக இருந்தாலும். இருசாரார்களும் அழைத்து தங்கள் வாதங்களை கேட்டறிந்த வட்டாரஜமாத்கூட்டமைபினரின் பேச்சுவார்த்தை வெற்றிபெறுமா என்பது தான் கேள்வி?சமாதான முயர்ச்சி என்பது இன்றைய காலத்தின் கட்டாயம் இவர்களின் கூட்டுமுயர்ச்சிக்கு இருசாரர்களையும் ஒன்று சேர்ந்தால் அதைவிட பெரிய சந்தோஷம் வேறுஒன்றுமே இருக்காது.அதைபோல் இரண்டு சாரார்களின் மத்தியில் சிக்கி தவிக்கும் நடுநிலையாளர்களின் வாதங்களையும் கேட்டறிந்தால் நன்றாக இருக்கும் என்பது?நம்முடய தாழ்மையான கருத்து.அதேபோல் வட்டார ஜமாத்கூட்டமைபின் பேச்சுகளை ஏற்காத ஒருசாரார் இருப்பாரையானால் அவர்களை வட்டார ஜமாத் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------ மனிதநேய மக்கள் கட்சி நீடூர்கிளை சார்பாக நீடுர்மின்சார வாரிய சீர்கேட்டை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
நீடூர் தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலகத்தில் வரும் 7ம்தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி நீடூர்கிளை சார்பாக நீடுர்மின்சார வாரிய சீர்கேட்டை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.இதை பற்றி கிளை தலைவர் M.S.ஜெஹபர்அலி கூறுகையில் நீடூர் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கட்டணம் செலுத்த சென்றால் மின் தடையை காரணம் சொல்லி கம்ஃபியுட்டர் வேளை செய்யவில்லை எனக்கூறி பொதுமக்களை அலைகழிக்க வைப்பதை கண்டித்தும்.2.ஜெனரேட்டர் வசதி இருந்தும் செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும்.3. வீடுகளுக்கு மின் ரீடிங் குறிக்க வரும் போது அரசு ஊழியர்கள் கட்டணம் கட்ட கடைசி தேதி குறிப்பிட படாமல் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளும் ஊழியர்களை கண்டித்தும்.4.மின்சார வாரிய (வயர்மேன்) சம்மதபட்ட பகுதியில் இருக்கவேண்டும் என்பது அரசு விதிகள் அப்படி இருந்தும் மழைகாலங்களும்.புயல்ஏற்படும் சூழலிலும் .டிரான்ஸ் Fமர்களில் பீயூஸ் போனால் அதை நிர்வத்தி செய்ய 15கிலோ துளைவில் இருக்ககூடிய வயர்மேன்களை அழைக்கவேண்டிய சூழல் உள்ளது அதனை மாற்றி தினமும் இருக்கும்படி வயர் மேன்னை பணி அமர்த்த வேண்டும் அதை செய்யவலியுர்த்தியும்.மின்சார விலை ஏற்றத்தை மீண்டும் வாபஸ் பெற கூறியும் மாபெறும் ஆர்ப்பட்டம் செய்ய போவதாக கூறினார்.இதில் மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் M.A.ஜெப்ருதீன்.தமுமுக செயலாளர் M.S.M.சபீர்.தமுமுக கிளை பொருளாளர் M.காமில்.தமுமுக.கிளை நிர்வாகிகள் சபா பஷீர்.ரபீக்.யாசர்அராபத்.அமீன் பைசல்.ரில்வான்.மிஸ்பாஹுதின்.நிஜாமுதீன்.மற்றும் கிளை உறுப்பினர்கள் என ஏராலமானோர் தீர்மாண கூட்டத்தின் போது அருகிள் இருந்தனர். பொதுமக்கள் இப்போராட்டத்தில் பெரும்திரளாக கலந்துக்கொள்ள தமுமுக மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. -----------------------------------------------------------------------------------------------
நீடூரில் ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு விழா
நீடூரில் ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.இதற்காக மணதழவில் வெளிநாடுகளில் முயற்சி செய்து உதவிகரம் நீட்டிய நமதூர் சகோதர்களுக்கு தமுமுக என்றென்றும் கடைமை பட்டுள்ளது. இதற்காக பண உதவி செய்த நண்பர்களுக்கு முதலில் கிளை தலைவராகிய நானும் மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து. உங்கள் அனைவருக்கும் எனது சலாமையும்.நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். சில நண்பர்களால் நன்கொடை கொடுக்க முடிந்தும்.நண்பர்கள் சிலர் சில காரணங்கள் கொடுக்க வாய்பினை இழந்திருப்பீர்கள். அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.சில வசூலின் பொது எங்களுக்கு ஏற்ப்பட்ட இன்ப துன்பங்களை கோடுயிட்டு காட்ட வேண்டும் என்பதற்காக இதை தருகிறோம். நமதூர் நண்பர்களோடு வசூல் செய்கையில் பல வெளியூர் நண்பர்கள் உங்கள் ஊரில் பல செல்வந்தர்கள் இருக்கும் வேளை ஒருவர் மட்டுமே ஆம்புலன்ஸ் வாங்கி தரலாமே. இதற்காக வசூல் தேவையா? கேள்விக்கேட்டனர். அவரிடம் பதில் கூற வழியில்லாவிட்டலும் ஒரு விஷயத்தை முன்நிறுதீனோம். அது என்னவேன்றால்.ஒருவர் பணத்தில் ஒரு பொருள் முலுமையடைவதை விட பலரின் பொருட் சிலவால் ஆம்புலன்ஸ் வாங்கினால் அனைவருக்கும் நண்மை சேர்ந்திடுமே என்ற நோக்கத்தின் அடிப்படையில் செய்வதாக கூறிய விடைப்பெற்றோம், இருந்தும் இதுபோன்ற நல்லகாரியங்களுக்கு உதவி என்றதும் தந்தவர்களும் உண்டு இவர்களுக்கா? என்று எங்களை பற்றி பேசியவர்களும் உண்டு. அதற்காக மணம் சலிக்காமல் பெரும் முயர்ச்சி கொண்டு அதில் சாதனையும் செய்துவிட்டோம்.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.இந்த விழாவில் பொருள் உதவி தந்த பல நண்பர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்பது குறிப்பிட தக்கது.அதே வேளையில் நமதூரில் உள்ளவர்களும் உதவிகரம் நீட்டியது யாராலும் மறக்கமுடியாது.வெளிநாடுகளி ல் பணியில் இருந்தவாரே தங்கள் அலுவலக பணிநேரத்தை தவிற மற்ற நேரங்களில் சிறம்மாம் பாராமல் அலைந்து திரிந்து ஒவ்வொறு நபர்களிடமும் வசூல் செய்து இன்று அனைத்து சமுக மக்களுகாக பணியாற்றிவரும் தமுமுக ஆம்புலன்ஸ் உங்களின் பெயர் சொல்லும்.வகையில் செய்துவிட்டீர்கள்.என்பதில் மாற்று கருத்தில்லை.அதே போல் உங்கள் வாழ்கை மேன்பட தமுமுக என்றேன்றும் துஆ செய்யும் என்பதையும் இதன்மூலம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் இதற்காக பாடுப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் நற்பாக்கியமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்கிருபை செய்வாக என துவா செய்தவனாக முடிக்கிறேன்.வசலாம்
-----------------------------------------------------------------------------------------------------
நமதூர் பள்ளிவாசல் நிர்வாக தேர்தல்! வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கம் விபரம் அளிக்க வக்ஃப் அதிகாரி உத்தரவு

நமதூர் ஜமாத் தேர்வுக்காக ஜனநாயக முறையீல் தேர்தல் நடத்த வக்ஃப் நிர்வாகிகள் ஓட்டு லிஸ்ட் பெயர்பட்டியலை இன்று பள்ளிவாசலில் வைத்துள்ளார்கள்
ஜமாத்தார்கள் பார்வைக்காக வைக்கப்பட்டதை தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என அனைவரும் பார்த்தார்கள் இதற்கிடையில் நாளை ஜமாத் கூட்டம் நடத்த பள்ளிவாசல் கரும் பலகையில் எழதி வைக்கப்பட்டுள்ளது.

www.nidurin.blogspot.com
------------------------------------------------------------------------------------------------
ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்


எல்லாம் வல்லா அல்லாஹ்வின் நல்லாருள் மற்றும் ஹாஜிகளின் நல் ஆதரவினாலும் 7ஆம் ஆண்டு பூர்த்திசெய்து 8 ஆம் ஆண்டில் நுழைகிறேன்

ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்

மக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தாங்கும் இட வசதி

புனித குரான் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதல்

சைவம் மற்றும் அசைவம் தமிழக உணவு நம் தமிழ்நாடுசமையல்காரர் ஏற்பாடு


மேலும் விபரம் அணுக

அன்சாரி ( நீடூர் ராஜா தெரு )
மக்காஹ் ,
அலைபேசி :+966 564008897

Mohamed Imran S
Saudi Arabia :00966551348284
www.nidurin.blogspot.com


------------------------------------------------------------------------------------------------
நீடூரில்

------------------------------------------------------------------------------------------------
நீடூரில் இஜ்திமா

நமதூரில் JMH நிக்காஹ் மஹாலில் இஜ்திமா 3.3.12 முதல் தொடங்கியது ஏராலமானவர்கள் கலந்து பயான் கேட்டனர்.வெளியூர்களிருந்து ஏராலமானவர்கள் அரசுபஸ்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வருகை புரிந்தனர்.அவர்ளுக்கு இருபிடம் சாப்பாடு ஆகியவைகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது, இஜ்திமா இரண்டு நாட்கள் தொடச்சியாக நடைப்பெறுகிறது.nidurin
------------------------------------------------------------------------------------------------
மார்ச் 3.4.நீடூர் நிக்காஹ் மஹாலில் இஸ்திமா அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்
இன்ஷா அல்லாஹ் நீடூர் JMH நிக்காஹ் மஹாலில் வரும் மார்ச் 3.4.ஆகிய தேதிகளில் இஸ்திமா ஏற்பாடு செய்யப்படுள்ளது.அனைத்து ஊர்களிருந்தும் ஏராளமான ஜமாத்தார் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள் நடைப்பெறும் இஸ்திமாவில் சொற்பொழிவை அனைவரும் கேட்டு பயன்பெறுமாறு அனைவருரை அன்புடன் அழைக்கின்றார்கள். நாமும் அதன்படி இஸ்திமாவில் கலந்துக்கொண்டு இஸ்லாத்தை முலுமையாக அறிவோம்.இன்ஷாஅல்லாஹ்
...............................................................................................

வக்ப் வாரிய அதிகாரி நீடூர்-நெய்வாசல் வருகை! நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தார்களுடன் சந்திப்பு

வக்ப் வாரிய அதிகாரி முஹம்மது நேற்று(23-02-2012) நீடூர்-நெய்வாசல் வருகை தந்துள்ளார். அப்போது தற்போதைய நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களை சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று முழுவதும் நீடூர்-நெய்வாசலில் முகாமிட்டிருந்த அவர் வக்ப் வாரிய மாநில பொதுக்குழுவின் ஆலோசனை முடிவின்படி ஜனநாயக ரீதியிலான தேர்தலை நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்திற்கு நடத்துவதற்கான முதற்கட்ட பணியாக வாக்காளர் பட்டியலை வாங்கி சென்றுள்ளார். வாக்காளர் பட்டியல் விரைவில் நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்தினர் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் பணிகள் முடிந்ததும் தேதி அறிவிக்கப்பட்டு ஜமாஅத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்கிற தகவலை நீடூர்ஆன்லைன்.காம் நேயர்களுக்காகவும், உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்களுக்காகவும் வக்ப் அதிகாரியின் ஒப்புதலுடன் வெளியிடுகிறோம்.


........................................................................................................................................................................................................................



பிரபல ரவுடி படுகொலை மர்ம நபர்களுக்கு வலை

மயிலாடுதுறை : நாகை மாவட்டம் மணல்மேடு அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் பாலையா (46). இவர் பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி. ஒரு கொலை வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலையா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலையா ஆத்தூரிலிருந்து பைக்கில் காளி கிராமத்தை நோக்கி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கன்னியாநத்தம் என்ற இடத்தில் பைக்கை வழிமறித்து பாலையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
..................................................................................................................................................................






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக