ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

பாகிஸ்தானில் மீண்டும் நில நடுக்கம் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம்


பாகிஸ்தானில் மீண்டும் நிலÂ நடுக்கம் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம் : பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அவாரன் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமையாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

புதன், செப்டம்பர் 04, 2013

ஆபிஸில் ராகிங் : மனமுடைந்த 19 வயது பெண் தற்கொலை- சக பணியாளர்கள் 10 பேர் கைது


நாசிக்: சக பணியாளர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றத்தில் சம்பந்தப்பட்ட 10 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாசிக்கில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் வசித்து வந்த பிரனாளி பிரதீப் என்ற 19 வயது இளம்பெண் சாத்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்தார். கடந்த ஞாயிறன்று திடீரென கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு, தூக்கில் தொங்கியுள்ளார் பிரனாளி. பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரனாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன் பிரனாளி எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் பணி புரிந்த சக ஊழியர்களின் ராகிங்கே பிரனாளியின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரனாளியின் தந்தை கூறுகையில், பிரனாளி அலுவலக விஷயமாக ஜெர்மனி செல்ல இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமலே அவரது சக ஊழியர்கள் அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரனாளியின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 10 ஊழியர்களில் நான்கு பேர் பெண்கள். தற்போது அவர்கள் அனைவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், அவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு, பயிற்சிக்காலமாக அங்கு பணி புரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் ஓட்டம்


ஜகர்த்தா, செப் 2- பசிபிக் பூகம்ப வளையத்திற்குள் வரும் இந்தோனேசியாவில் அடிக்கடி ஏற்படும் பூகம்பத்தால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு லட்சத்திற்கு மேல் மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலூக்கா மாகாண பரத் தயா தீவுகளில் நேற்றிரவு 8.52 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப்பதிவாகியுள்ளதாக அமெரிக்கா மண்ணியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 வினாடிகள் நீடித்த இந்த கடும் பூகம்பத்தால் உயிருக்கு பயந்த மலூக்கா மாகாண மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வீதியில் ஓடிவந்தனர். தூரப்பகுதியில் ஏற்பட்ட இந்த கடும் பூகம்பத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Nidur halinur colony marjuk Thambi riyas 1/09/2013 Marrige photo J.M.H. Nikkah Mahal


www.nidurin.blogspot.com

டெல்லி பாலியல் வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை


புதுடெல்லி,செப்.1 - டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறார் சீர்திருத்த கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி 23 வயதுடைய மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் பஸ்சில் ஏறியுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் நண்பனை அடித்து கட்டிப்போட்டுவிட்டு மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சுயநினைவு இழந்த நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டால் அங்கு சிகிச்சை பலனிளிக்காததால் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடே கொதித்தெழுந்தது. டெல்லியில் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் கூடி 10 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லி நகரமே முடங்கிப்போனது. ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் முயன்றனர். நாடு முழுவதும் சமூக நல அமைப்புகளும், பெண்கள் நல சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 6 பேர்களை போலீசார் கைது செய்து வழக்கப்பதிவு செய்தனர். இதில் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோரும் அடங்குவர். கைது செய்யப்பட்ட 6 பேர்களில் ஒருவன் 17 வயது சிறுவனாக இருந்ததால் அவன் மட்டும் சிறார் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். மீதிப்பேர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டான். இவர்கள் மீது டெல்லி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் அந்த 5 பேர்களில் ஒருவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மீதி 4 பேர் டெல்லி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை விரைவில் முடியும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் சிறுவன் மீது சிறார் சீர்திருத்த கோர்ட்டில் வழக்கு விசாரணை கடந்த மாதமே முடிந்துவிட்டது. விசாரணை முடிவில் சிறுவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். ஆனால் தண்டனை மட்டும் அறிவிக்கப்படாமல் 3 தடவை தள்ளிவைக்கப்பட்டது. சிறார் வயது வரம்பு குறித்து வழக்கு ஒன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்காமல் இருப்பதால் தண்டனை வழங்குவதை சிறார் சீர்திருத்த கோர்ட்டு தள்ளிவைத்து வந்தது. தண்டனை வழங்க சிறார் சீர்திருத்த கோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதால் அந்த சிறுவனுக்கு நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளை சிறார்களுக்கான சீர்திருத்த சிறையில் அந்த சிறுவன் அடைக்கப்படுவான். சிறுவனுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று மருத்துவ மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். வேறுபல சமூக அமைப்புகளும் மகளிர் சங்கங்களும் சிறுவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. www.nidurin.blogspot.com

2.5% 'ஜகாத்' மூலம் 25% பலன் : 7 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ். ஆனார்கள்!


'ஜகாத் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் நிதியுதவியின் மூலம் படித்த, 7 நபர்கள் உட்பட மொத்தம் 30 முஸ்லிம்கள், இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பொறுப்புக்களில் அமர்ந்துள்ளனர். முன்னாள் அரசு ஊழியரான 'டாக்டர் செய்யத் ஜஃபர் மஹ்மூத்' என்பவரது தலைமையில், கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, வசதி படைத்த முஸ்லிம்களிடம் 'ஜகாத்' பெற்று கல்விப் பணிகள் உள்ளிட்ட பல சமுதாயப் பணிகளை செவ்வனே செய்து வருகிறது. இவ்வாண்டு தேர்வான 30 முஸ்லிம் மாணவர்களில், 2.5% ஜகாத் பண உதவியுடன் பயின்ற 7 நபர்கள் பெற்ற வெற்றி என்பது, 25% ஆகும். டெல்லியில் உள்ள இஸ்லாமிக் கல்சுரல் சென்டரில் நேற்று முன்தினம் (29/08/13) நடந்த விழாவில், முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் கலந்துக் கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.