வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

ஒரு பெண்ணால் 50 பேரை மணந்து ஏமாற்ற முடியுமா?: சகானா ஆவேசம்


கேரள அழகி சகானாவை பிடிப்பதற்காக அடையாறு மற்றும் புளியந்தோப்பு மகளிர் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். அடையாரைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சகானாவிடம் ஏமாந்தார். போலீசாரிடம் சகானா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொடுத்து இருந்தார். அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட போது அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என தெரிய வந்தது. கடைசியாக புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபர் தான் சகானாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரும் சகானா பயன்படுத்திய 2 செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இந்த எண்களை வைத்து சகானா இருப்பிடத்தை கண்டு பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த எண்களை அடிக்கடி “சுவிட் ஆப்” செய்து வைத்து விடுகிறார். இதனால் போலீசாரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே இன்று மதியம் 12.30 மணி அளவில் திடீர் என்று சகானாவின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய போது சகானா எதிர் முனையில் பேசினார். நீங்கள் சகானா தானா என்று கேட்ட போது ஆம் என்று உறுதி செய்தார். உங்கள் மீது கல்யாண மோசடி புகார்கள் வந்திருக்கிறதே என்று கேட்டதற்கு ஒரு பெண்ணால் 50 பேரை திருமணம் செய்து ஏமாற்ற முடியுமா? இது சாத்தியமா? என்று ஆவேசப்பட்டார். மேலும் நான் ரோமிங்கில் (வெளியூரில்) இருக்கிறேன். எனது செல்போன் எப்போது வேண்டு மானாலும் துண்டிக்கப்படலாம். போதிய இருப்பு இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே அடுத்த நொடியே செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மறு படியும் தொடர்பு கொண்ட போது “சுவிட் ஆப்” செய்யப்பட்டது தெரிய வந்தது. இதேபோல் நேற்று சகானாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது என்னை அசிங்கப்படுத்துகிறார்கள், நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

துஆ செய்யுங்கள்...............!!


இவர்கள் 11 வது படிக்கும் நம் சகோதரர்கள், பெருநாள் அன்று இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் இறந்து விட்டார், மற்றொருவர் அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார், அவர் குணமடைய எல்லாம் வல்ல ரப்புவிடம் இரு கையேந்தி பிரார்த்திப்பீர், யா அல்லாஹ்.... உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் என் சகோதரனை காப்பாயாக..... உன்னையன்றி நாங்கள் யாரிடமும் கையேந்த முடியாது..... அவ்வாறு ஏந்தினாலும் அவர்களால் எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது..... கருணையாளனே.... கிருபையாளனே.... என் சகோதரனை காப்பாயாக..... அவனுடைய குடும்பத்தில் மீண்டும் அவனை நல்ல நிலையில் சேர்ப்பாயாக.... ------------------------------------------- என் சமுதாயமே...... தயவு செய்து உன் நிதானத்தை தாண்டிய வேகத்தை கடக்காதே....pls pls pls.....

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ். தடையால் ரூ.300 கோடி இழப்பு


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த மாதம் இருதரப்புக்கு இடையே கலவரம் மூண்டது. கலவரத்துக்கு இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். கலவரம் கட்டுக்குள் அடங்காமல் போனதற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமும், இங்குள்ள விஷமிகள் சிலரும் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.களே காரணம். நிலநடுக்கம் பாதிப்பையும், புயல் பாதிப்பையும் இணைத்து, கிராபிக்ஸ் மூலம் அசாம் கலவர பாதிப்புபோல் சித்தரித்து அனுப்பப்பட்ட காட்சிகள், நெருப்பை பரவச் செய்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடைவிதித்தது. ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மற்றும் ஓணம் பண்டிகை சமயத்தில் இந்த தடைவிதிக்கப்பட்டதால், டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகையின்போது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் தவித்தனர். இதனால் மாற்றுவழியை பின்பற்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன உபகரணங்கள் வாயிலாக வாழ்த்து மற்றும் தகவல் பரிமாற்றங்கள் நடந்தன. மத்திய அரசு விதித்துள்ள தடை, அடுத்த மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதனால் ஓணம் பண்டிகையின்போதும் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மூலம் அதிகம் பேரிடம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த எஸ்.எம்.எஸ்.அனுப்புவதற்கான தடையை, பதட்டமான மாநிலங்களுக்கு மட்டும் அமல்படுத்தலாம். இதனால் மற்ற மாநில வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இதற்கு முன்பு, ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்ப, காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுபோன்ற நடவடிக்கையை தற்போதும் மேற்கொள்ளவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

ரமழான் நிடுர் விளையாட்டு போட்டிகளின்,உங்களுகாக் சில புகைப்படங்கள்...


thx nidur friends .....

ரம்ஜான் விளையாட்டு விழாவில் கத்திகுத்து ?


வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த புங்கனூர் கிராமத்தில் ரம்ஜான் பண்டிகையைகொட்டி 2 நாட்கள் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நூர் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் மன்சூர் அகமது செய்திருந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஜமாத்தின் தலைவராக கமாலுதீன் இருந்து வந்தார். கடந்த மாதம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய ஜமாத் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி கமாலுதீன் மகன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் ஒன்றிய செயலாளர் வஜ்ருதீன், ஜமாத்தின் பஞ்சாயத்தாராக பொறுப்பேற்ற முகமது இந்திரிஸ் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜமாத் பஞ்சாயத்தார் இந்திரிஸ் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவரது நண்பர் நஜ்புதீன் இருவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இவர்களுக்கும் வஜ்ருதீன் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உருவான தகராறில் இந்திரிஸ் மற்றும் நஜ்புதீன் இருவரும் த.மு.மு.க.வினர் அசாருதீன், பாசிக், ரபிக், ரியாஜிதீன், மன்சூர் அகமது ஆகியோரை சரமாரி கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் இந்திரியஸ், நஜ்புதீன் ஆகிய இருவரையும் வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகுணா மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் நஜ்புதீன் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்தும் நஜ்புதீன் த.மு.மு.க.வினர் மீது புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதையொட்டி சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். . .

புதன், ஆகஸ்ட் 22, 2012

சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்


சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர் இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது. இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்காவிற்கு எதிராக கூறியதாவது, ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும். சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரி ஜமிளுடன் பேசியுள்ளேன். உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார். இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார். இதனிடையே, அந்நாட்டின் துணைப் பிரதமர், அதிபர் ஆசாத் பதவி விலகுவது குறித்து பேசி வருகிறோம். ஆனால் அது பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்கும் என்று கூறியுள்ளார். உச்சக்கட்ட சண்டை நடந்து வரும் அங்கு சிரியாத் துருப்புகள் டமஸ்கசின் மேற்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் போராளிகள் 23 பேரை கொண்றுவிட்டதாக சொல்லுகிறது. அதே சமயம் போராளிப்படைகள் அலெப்போ நகரின் 60 சதவிகிதப் பகுதியும் எல்லைப் பகுதியில் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்று அது கூறியுள்ளது. ரஷியாவும் சீனாவும் சிரியாவுக்கு ஆதராவாக பேசி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருப்பது இப்பிராந்தியத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

Aug21 வடகிழக்கு மக்களிடம் பீதியை கிளப்பி வதந்தி பரப்பிய 250 இணைய தளங்கள் முடக்கம்.


வடகிழக்கு மக்களிடம் பீதியை கிளப்பி வந்த 250 இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநில மக்களை பீதிக்குள்ளாக மூல காரணமாக இருந்து செயல்பட்டது பாகிஸ்தானில் உள்ள சில மதவாத அமைப்புகள். அவர்கள் அங்கிருந்து தவறுதலான, வீண் வதந்திகளை பரப்ப ஒட்டுவேலை மூலம் சித்தரித்து வீடியோக்கள், படங்களை அனுப்பினர். அவற்றை இந்தியாவில் உள்ள சிலர் திட்டமிட்டு பலருக்கும் எம்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இவற்றை கண்டதும், தென் மாநிலங்களில் படித்துக்கொண்டிருந்த, வேலையில் இருந்த பல வடகிழக்கு மாநிலத்தவரும் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்தனர். கடந்த நான்கு நாட்களில் பல ஆயிரம் பேர், பெங்களூர், சென்னை வழியாக அசாம் திரும்பினர். இவர்களை பீதிக்குள்ளாக்கிய இணைய தளங்கள், ‘ப்ளாக்’ பக்கங்கள் மற்றும் திட்டமிட்டு ஒட்டிவெட்டி தயாரிக்கப்பட்ட வீடியோக்களை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. இவை எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் அனுப்பப்பட்டவை என்று ஆதாரங்கள் திரட்டியது. இதுபோன்ற வதந்தியை பரப்புகிறவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. செல்போன்கள் மூலம் மொத்தமாக குறுந்தகவல்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. வதந்தியை பரப்பிய 250-க்கு மேற்பட்ட இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து `பேஸ்புக்', `டுவிட்டர்', `யூ டியூப்' போன்ற இணைய தளங்களின் குறிப்பிட்ட பக்கங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை வரை 130 இணைய தளங்கள் முடக்கப்பட்டன.மீதி உள்ள இணைய தளங்களும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இணையங்கள் மூலம் `இந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரி'ல் மிகப்பெரிய அளவிலான நிகழ்வு இது என்பதால், இந்த பிரச்சினை குறித்து இணைய குற்றங்கள் தொடர்பான சர்வதேச அமைப்பில் முறையிடவும் இந்தியா பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இது ஒரு மிகப்பெரிய சைபர் போர். இதை சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களுடன் விரைவில் அனுப்பப்பட உள்ளது” என்றார்.

EID MUBARAK...


nidurin.blogspot.com

சனி, ஆகஸ்ட் 18, 2012

ஜாக்கிரதை!


மதுரை, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகள் சமீபத்தில் ...தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது... ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல் காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும் இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட, சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து, காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், வீட்டைவிட்டு வெளியில் வராமல் மனஉளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள். கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ். கிராமமோ... நகரமோ... கேபிள், தண்ணீர் கேன், கேஸ் சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக இருந்தாலும்... சம்பந்தபட்ட நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்போது... வேலை முடியும் வரை அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது. முக்கியமாக வீட்டில் தனியாக இருக்கும்போது இப்படிப்பட்ட நபர்களை அனுமதிக்காமல்... குடும்பத்தினரில் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது. நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர் என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை அவசியமே!

பர்மாவில் கொலைவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்..............!!

வந்தாரை வாழ வைக்கும் இந்திய மண்ணில் பர்மாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்கையை கொடுக்க வேண்டும், இந்திய பாரத தேசம் மதச்சார்பற்ற மக்களால் சூழப்பட்ட, மனிதநேயம் நிறைந்த மக்களால் பின்னப்பட்ட இந்த மண்ணில் எத்தனையோ... எத்தனையோ மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வாழ்கையை கொடுத்த இந்த தேசம்.... நமது இந்திய எல்லையை ஒட்டிய பர்மா மக்களுக்கும் அனுமதி வழங்கி இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து தாயை போல் அரவணைக்க வேண்டும், அவ்வாறு அரவணைத்து உலகிலேயே மனிதநேய மிக்கவர்களாக அரபுகளைவிட, ஐரோப்பியர்களை விட இந்தியர்கள் மனிதநேய மிக்கவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டும், பாபர் மசூதியை இடித்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்த காவி பயங்கரவாதிகளால் ஏற்பட்ட இழிவு இன்று வரை மறையவில்லை.... அந்த இழிவை மீண்டும் துடைக்க வேண்டாமா.......? மனிதநேய அடிப்படையில் பர்மா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் உலகமே இந்தியாவை தன்னுடைய தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்து விடும், மேலும் இந்தியாவிற்கும், அரபுநாடுகளுக்கும் நட்புறவு இன்னும் அதிகரிக்கும், தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா.... பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொடுக்க வேண்டும், காமசகதியில் புரளும் தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா..... பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு அனாதைகளாய், நிராயுதபாணியாய் நிற்கும் மக்களுக்கும் தாயுள்ளத்தோடு அரவணைத்து அடைக்கலம் கொடுக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.... இந்தியா அடைக்கலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்.... nidurin.blogspot.com

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

அஸ்ஸலாமு அலைக்கும்,

Assalamu Alaikum Wa Rahmatullah Wa Barakatahu! அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்க்ள்.. www.nidurin.blogspot.com

லண்டன் கையேந்தி பவன்களின் உணவு அயிட்டங்களுக்கு போட்டி : இந்திய வகை உணவு அசத்தியது


மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் தெருவில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சாட் உணவு வகைகள் உலகம் முழுவதும் பிரசித்தம். கையேந்தி பவன் என்று அழைக்கப்படும் இந்த சாலையோர ஓட்டல்களில் விலை குறைவு. இந்த கடைகளை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்நிலையில் கையேந்தி பவன்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. லண்டனில் பிரிட்டிஷ் ஸ்ட்ரீட் ஃபுட் அவார்ட்ஸ் 2012 என்ற பெயரில் சுவையான, சுகாதாரமான தெரு வகை உணவுகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. சுமார் 3,000 வகை உணவுகள் போட்டியிட்ட இதில் 16 வகையான உணவுகள் பரிசுக்குரியவையாக போட்டி நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டது. இதில் சமோசா, பேல்பூரி உள்ளிட்ட இந்திய சாட் உணவுகளை கொண்டு இந்தியர் ஒருவரால் புதுமையாக தயாரிக்கப்பட்ட உணவுக்கு பரிசு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 15, 16ம் தேதிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வகை உணவுக்கு இங்கிலாந்தில் பெருத்த வரவேற்பு கிடைத்து உள்ளது. லண்டன், லீட்சில் தள்ளுவண்டியில் உணவு விற்கும் இந்திய பெண்மணி மஞ்சித். இவரது தள்ளுவண்டி கடைக்கு மஞ்சித் கிச்சன் , தேலா (நம்பர் 1 சாட் ஸ்டேஷன்) என்று பெயரிட்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்திய வகை உணவுகளை விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளர்களை கவர சுவையாக உணவுகளை தயாரித்து சுடச்சுட பரிமாறுகிறார். உணவின் ப்ரத்யேக சுவையால் இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். போட்டிக்காக சமோசா, பேல்பூரி போன்ற உணவுகளின் கலவையாக இவர் தயாரித்த சாட் உணவு பரிசு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மஞ்சித் கூறுகையில், தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தேன். தனியாக தொழில் செய்ய விரும்பி, தள்ளுவண்டி கடை போட்டேன். சைவ சாட் வகை இந்திய உணவுகளை தயாரித்து விற்க தொடங்கினேன். ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு இருந்தது எனக்கு உற்சாகம் அளித்தது. இப்போது பரிசும் கிடைத்துள்ளதுÕ என்றார்.

பர்மா (ரோஹிங்கியா) செய்தித்துளிகள்:


* துருக்கி வெளிநாட்டமைச்சர் தலைமையிலான குழு ரோகிங்கிய முஸ்லிம்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ஏராளமான நிவாரணப் பொதிகளையும் வழங்கி உதவியது. பர்மாவின் பிதம மந்திரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். * சவூதி அரேபியா 50 மில்லியன் அமெரிக்க டொலரை ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக வழங்கியது. * UAE வெளிநாட்டமைச்சர் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். * பிரித்தானிய MP George Galloway ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவி வழங்குமாறு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளரை வேண்டியுள்ளார். * முன்னாள் மலேசியப் பிரதமர் மஹதீர் முஹம்மத், ரோஹிங்கிய முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வருமாறு சகல முஸ்லிம் நாடுகளையும் வேண்டியுள்ளார்.

சாலையில் உல்லாசத்துக்கு அழைப்பது போல் பெண்ணை நிறுத்தி லாரிகளை மடக்கி வழிபறி செய்த மாணவர்கள் கும்பல்:


குடியாத்தத்தை சேர்ந்தவர் அப்சல் (30), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு கொரியர் பார்சல் ஏற்றி கொண்டு சென்னையில் இருந்து ஆம்பூருக்கு லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த நந்தியாலம் அருகே வந்த போது இளம்பெண் ஒருவர் சாலையோரம் நின்று லாரியை மறித்தார். இதனைக்கண்ட அப்சல் லாரியை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்றார். அப்போது மறைந்திருந்த 4 பேர் கும்பல் அப்சலை தாக்கி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுபற்றி அப்சல் ஆற்காடு போலீசில் புகார் செய்தார். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக வழிப்பறியில் ஈடுபட்டதாக மலர் (30), பாஸ்கரன் (22), ஆகியோரை பிடித்து விசாரித்தனர். மலர், பாஸ்கரனுடன் சேர்ந்து கும்பல் ஒன்று வழிபறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதுபோன்று ஏற்கனவே அந்த பகுதியில் டிரைவர் ஒருவரை தாக்கி வழிப்பறி செய்துள்ளனர். மலர் கொடுத்த தகவலின் பேரில் வேலூரை சேர்ந்த ஆசாத் (17), மகேஷ்குமார் (21), சிப்காட்டை சேர்ந்த விக்னேஷ் (18), முகமது பாஷா (19), மற்றொரு விக்னேஷ் (17), மணியம்பட்டை சேர்ந்த மகேஷ்குமார் (21), ஆகியோர் வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலரை சாலையில் நிற்க வைத்து உல்லாசமாக இருக்க ஆசை காட்டி பின்னர் டிரைவர்களை ஒதுக்குபுறமாக அழைத்து சென்று கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மலர், பாஸ்கர் ஆகியோரை கைது செய்த போலீசார் மாணவர்கள் 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

புதன், ஆகஸ்ட் 15, 2012

அல்லாஹு அக்பர்..............!! அல்லாஹு அக்பர்..............!!


குவைத்தில் பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்................!! பர்மாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து, 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை அகதிகளாக்கி கருவறுத்த பயங்கரவாத பர்மா அரசை கண்டித்து குவைத்திலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம். அல்ஹம்துலில்லாஹ்..............!!