செவ்வாய், ஏப்ரல் 30, 2013

கூனிமேடு வன்முறை! இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் ஆறுதல்!


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், கூனிமேடு பகுதியிலும் தனது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்முறையில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேற்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஏற்ப்பட்ட கலவரத்தை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை மூடப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. இதனால் மாநாட்டிற்கு வாகனங்களில் சென்ற இளைஞர்கள் போகும் வழியெல்லாம் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி பெரும் வன்முறையை நிகழ்த்தி கொண்டே சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் போது கூனிமேட்டில் இறங்கிய வன்முறையாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கியும், பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி மோசமாக நடந்துள்ளனர். மேலும் அங்கு சாலையோரத்தில் உள்ள பள்ளிவாசலின் மீது பீர் பாட்டில்களையும், கற்களையும் கொண்டு வீசி தாக்கியுள்ளனர். கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்தவர்களை கட்டையால் அடித்துள்ளனர். இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கறிகடை ஒன்றையும் எரித்துள்ளனர். 40க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் வந்த அந்த கும்பல் சுமார் அரைமணி நேரம் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கூனிமேடு மற்றும் மண்டவாய் குப்பம் ஆகிய பகுதிகளை தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முபாரக், தமுமுகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, ஐஎன்டிஜே முனீர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், தர்வேஸ் ரஷாதி உள்ளிட்ட தலைவர்கள் மக்களை சந்தித்தனர். WWW.NIDURIN.COM

சனி, ஏப்ரல் 27, 2013

சீனா, தைவானில் பறவைக் காய்ச்சல்! 22 பேர் பலி!


H7N9 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் தைவானில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக சீனாவில் 22 பேரைப் பலி கொண்ட இந்த வகை பறவைக் காய்ச்சல் நோய், தற்போது தைவானுக்கும் பரவியுள்ளது. சீனாவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட இந்தவகை பறவைக் காய்ச்சலால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர், 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். H7N9 என்றழைப்படும் இந்தவகை பறவைக் காய்ச்சல் சீனாவுக்குப் சென்று வந்த தைவானைச் சேரந்த வணிகரைத் தாக்கியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கான சிகிச்சையை துரிதப்படுத்தும் வகையில் தைவானில் கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அங்கு 120 க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 50 க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு கடன் அளிக்க மறுக்கும் பொதுத்துறை வங்கிகள்! சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு


முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் மற்றும் சலுகைகளை வழங்க பொதுத் துறை வங்கிகள் மறுப்பதாக தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர்கள் இந்த புகாரை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.லாசர் பேசும்போது; “கல்விக் கடன், தொழில் மற்றும் வியாபாரம் துவங்குவதற்கு இஸ்லாமியர்கள் கடன் கேட்டால் வங்கிகள் புறக்கணிக்கின்றன. உதாரணத்திற்கு சென்னை நகரத்தில் இருக்கின்ற வங்கிகள் இஸ்லாமியர்களுக்கு வழங்கியிருக்கக் கூடிய கடன்களை கணக்கெடுத்தாலே எந்தளவுக்கு கல்விக்காக, தொழிலுக்காக கடன் வழங்கியுள்ளார் என்ற விபரம் தெரியவரும். எனவே தமிழக அரசு தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் முஹம்மது ஜான்; “பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறு வணிக கடன், தனி நபர் கடன், கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தொழிற்கடனுக்கு மத்திய அரசின் தேசிய சிறுபான்மை வளர்ச்சி அமைப்பு வழங்கும் நிதிக்கு மாநில அரசு பொறுப்பேற்று ரூ.50 கோடி வரை பெற்று சிறுபான்மையினருக்கு வழங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலபாரதி பேசும்போது; “மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இஸ்லாமியர் மாணவர்களுக்கு கல்விக் கடனை வழங்குவதில்லை. இஸ்லாமியர்களிடம் துவேசம் காட்டுகிறது. இதற்காக திண்டுக்கல்லில் போராடியும் பயனில்லை. எனவே, சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் வங்கிகளில் கடன் உதவி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மாநில அரசு தலையிட வேண்டும்.” என்றார் இதற்கு அமைச்சர் முஹம்மது ஜான்; “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மாணவர்களுக்கு கடன் உதவி வழங்குவதை உத்தரவாதப்படுத்த, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசும்போது; “டாம்கோ சிறப்பான முறையில் கடன் வழங்குகிறது. டாம்கோ நிறுவனம் தாய்கோ மூலம் கடன் வழங்குகிறது. தாய்கோ நிறுவனம், ஆட்டோ லோன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறது. சங்கங்களுக்கு கடன் கொடுக்கவும் தயங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி, மத்திய அரசின் கீழ் உள்ள வங்கிகள், குறிப்பாக மாணவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அந்த வங்கிகளுக்கு மாநில அரசு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.” என்றார். www.niudrin.com

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு..


சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத ு.... முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்... தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்.... அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்... ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்...

வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு தூதரகம்மூலம் உதவி செய்யப்படுகிறது


துபாய்: ஏப், - 26 - வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது என்று துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மைய கூட்டம் 12.04.2013 அன்று காலை மூவன்பிக் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது அனைத்து அமைப்புகளும் துபாய் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி தனது சிறப்புரையில், சவுதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்தியர்கள் மிக அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடாவைப் பொறுத்தவரை இந்திய பணியாளர்கள் சிறப்பிடத்தைப் பெற்று வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் அனைத்து துறைகளிலும் ஒரு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் மாறுபட்டு வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இவை ஸ்திரத்தன்மையுடன் இருந்து வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களும், ஊடகங்களும் எவை குறித்தும் பேசவோ தங்களது கருத்துக்களை வெளியிடவோ எந்தவொரு தடையுமில்லை. இதன் காரணமாக அனைவரின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் மூலம் நல நிதி ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் அல்லலுறும் இந்தியர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது என்றார். அபுதாபி இந்திய தூதரக அதிகாரி பரதன், கன்சல் எம்.பி. சிங், அசோக் பாபு, தொழில் அதிபர்கள் ராம் புக்?ஷானி, பரத்பாய் ஷா, துபாய் ்டிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், துபாய் ்மான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சஙக தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கீழை ராஜாகான், துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பொதுச் செயலாளர் பி.டி. அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.www.nidurin.com

சொல்வதெல்லாம் உண்மை" , நிறுத்து உடனடியாக......!!


சொல்வதெல்லாம் உண்மை" , நிறுத்து உடனடியாக......!! இவ யாரு? இவ பெயர் என்ன? இவ என்ன தலைமை நீதிபதியா? இல்ல, குடும்பநல நீதிமன்ற நீதிபதியா?.இந்த நிகழ்ச்சிய உடனடியா நிறுத்தி போடணும் அம்மா, இல்லாட்டி , உங்கள நிறுத்தவேண்டி வரலாம். இந்த நிகள்சியை தடைசெய்ய அனைத்து உள்ளங்களும் ஒத்துழைப்பு கொடுத்து, இதை பகிரவும் உறவுகளே.

கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர்.


கோவை : கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். கோவை மாநகரின் முக்கிய சாலையான அவினாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பில் லட்சுமி மில் ஜங்ஷன் உள்ளது. இதன் வடக்கு பகுதியில், விக்னேஷ்வரா பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடம் (தரை தளம் மற்றும் 3 மாடி) உள்ளது. தரை தளத்தில் ஆக்ஸிஸ் வங்கி செயல்படுகிறது. முதல் தளத்தில் விக்னேஸ்வர் கிரெஸ்டா, ஐபிகாம், எப்சிஎம் டிராவல் சொலியூசன், டோமின், கேரியர் லாஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. 2வது தளத்தில் ஷேர்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் பங்குவர்த்தக நிறுவனம் இயங்குகிறது. 3வது தளத்தில் ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் கம்பெனி இயங்குகிறது. நான்கு தளத்திலும் சேர்த்து மொத்தம் 8 கம்பெனிகள் இயங்கின. இவற்றில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். காலை 9.50 மணியளவில் மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. அப்போது, 2வது தளத்தில் உள்ள பங்கு வர்த்தக நிறுவனத்தின் இன்வெர்டரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதை, அங்கிருந்த ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் கருகிய வாடை வந்துள்ளது. அப்போதுதான் ஊழியர்கள் உஷாராயினர். ஏதோ ஒரு இடத்தில் தீ பிடித்துள்ளது என்பதை உணர்ந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற துவங்கினர். வெளியேறுவதற்கு ஒரே ஒரு படிக்கட்டுதான் உள்ளது. அதன்வழியாக, ஆண், பெண் ஊழியர்கள் முண்டியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த தகவல் இதர மாடிகளில் இருப்பவர்களுக்கும் பரவியது. நான்காவது தளத்தில் இருந்தவர்கள் அப்படியே மொட்டை மாடி மீது ஏறிக்கொண்டனர். மீதமுள்ளவர்கள் ஒரே ஒரு படிக்கட்டு வழியாக அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 10 நிமிடத்துக்குள் தீயின் வேகம் அதிகரித்து வணிக வளாகம் முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டானது. இதில், பங்கு வர்த்தக நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்த தடாகம் சாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் கீர்த்தனா (22), அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த ஸ்ரீலட்சுமி (32), வணிக வளாக துப்புரவு ஊழியர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயலட்சுமி (50), புலியகுளம் பகுதியை சேர்ந்த ஜான் மனைவி மார்க்கரெட் மேரி (55) ஆகியோர் மாட்டிக்கொண்டனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். மூச்சு திணறல் மற்றும் தீக்காயம் காரணமாக அதே இடத்தில் உயிரிழந்தனர். இவர்களில், கீர்த்தனா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். செயற்கை சுவாச கருவி: தீயணைப்பு படையினர் 10 வாகனங்களில் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை தீயை அணைக்க போராடினர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்களாலும் கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை. செயற்கை சுவாச கருவி வரவழைக்கப்பட்டு, அதை மாட்டிக்கொண்டு உள்ளே சென்றனர். காலை 11.40 மணிக்குத்தான் இறந்த நான்கு பெண்களின் உடலையும் அடையாளம் கண்டு மீட்டனர். 40 அடி உயரத்தில் இருந்து குதித்த பெண்கள் தீ விபத்தின்போது தனியார் பங்கு சந்தை நிறுவனத்தை சேர்ந்த சுகன்யா (28), ஜீவிதா ஆகிய இருவரும் சுமார் 40 அடி உயரமுள்ள 2வது மாடி பால்கனியில் இருந்து வெளியே குதித்தனர். இவர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு லாரி மீது நின்றுகொண்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமு (54), வீரர் ரகுநாதன் (46) ஆகியோர் நிலைதடுமாறி அடுத்தடுத்து கீழே விழுந்து காயம் அடைந்தனர். கணபதி தீயணைப்பு நிலைய வீரர் முருகன் (41) ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழையும்போது காயம் ஏற்பட்டது. ஆக்ஸிஸ் வங்கி ஊழியர் சக்திவேல் (47) மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்களுக்கு, மாநகர போலீசாரும் உதவிபுரிந்தனர். பல லட்சம் சேதம் இந்த தீ விபத்தில் தரை தளத்தை தவிர, மீதமுள்ள அனைத்து தளங்களில் உள்ள அலுவலக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இவை பல லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான உடமைகள் மட்டும் தப்பின. காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, ‘108’ ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர் தீயணைப்பு படை வீரர்களுடன், மாநகர போலீசார் மற்றும் கோவை முகாமில் உள்ள இந்திய விமானப்படை வீரர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடம் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை மீட்க விமானப்படையின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தீயணைப்பு படையினரின் ராட்சத ஏணி மூலம் அனைவரும் பத்திரமாக கிழே இறக்கப்பட்டு விட்டனர். இதனால், ஹெலிகாப்டர் திரும்பிச் சென்று விட்டது. www.nidurin.com

வியாழன், ஏப்ரல் 25, 2013

பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்


பெண்கள், குழந்தைகளை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களைக் கூட காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, சி.ஆர்.பி.சி. சட்டத்தின்படி சாட்சியாக விசாரணை செய்யக் கூட பெண்களையும், குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது. அவர்களின் இருப்பிடத்துக்குச் சென்றுதான விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை காவல் நிலையத்துக்கு அழைக்கத் தேவையில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால், இனி இதுபோல நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். www.nidurin.com

புதன், ஏப்ரல் 24, 2013

எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!! ரெத்தம் கொதிக்கும் பதிவு இது!!!!!


"Z" தமிழ் தொலைகாட்சி, "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் நேற்று கண்ட அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சி" போலி ஹிந்து முன்னணி RSS சங்கபரிவார் கும்பல் இஸ்லாமிய பெண்களை ஹிந்து இளைஞர்கள் காதலிப்பது போல நடித்து கற்பமாக்கி கைவிட்டால் ஒரு லக்சம் பணமும் மற்றும் போலீஸ் வழக்கு உள்ளிட்ட செலவுகளைவும் ஏற்றுகொள்வதாக ரகசிய செயல் திட்டம் வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.!!! 100 கணக்கான அப்பாவி இஸ்லாமிய அபலை பெண்களை இந்த போலி ஹிந்துத்துவா காவி தீவிரவாதிகள் தினமும் எமற்றாபட்டு கொண்டு இருகின்றனர்.!!!!!!!அதற்க்கு ஆதாரமே இன்று Z தமிழ் வழியாக ஓழிபெயர்ப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி!!!!!!!!!!!!!!!!!! இந்த காணொளி பாருங்கள் அந்த பெண். தன்னை எப்படியெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி தன்னை காதலித்து கர்ப்பம் ஆக்கினான் என்பதைவும் அந்த கயவனின் காலில்விழுந்து கதரவுவதைவும். அதற்க்கு அவன் உன்னால் முடிந்ததை செய் மற்றும் என்மேல்வழக்கு பதிவு செய்துகொள் அதை நான் பார்துகொல்கிரைன் என்று திமிராக பேசுவதைவும் பாருங்கள் மற்றும் உன்னை கொலை செய்வேன் என்று மிரட்டுவதைவும் பாருங்கள். முடிந்தவரை இதை அதிகமாக அதிக அளவில் பரப்புங்கள்.இஸ்லாமிய பெண்கள் மத்தியில் அதிகம் பரப்புங்கள். நம் பிள்ளைகள் , அக்கா , தங்கை, உறவினர் என அனைவாரிடமும் இதை பரப்புங்கள்!!!!போலி ஹிந்து வெறியர்களின் சதி திட்டதைவும் அதனால் ஏற்படும் அபாயத்தைவும் ஒவ்வருவரும் தன குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் அண்டைவீட்டார் என அனைவரடிடமும் எடுத்து சொல்லுங்கள் எடுத்து சொல்லுங்கள். இதைபோல் கயவர்கள் மற்றும் போலி காவிகள் இடம் இருந்து இறைவன் காப்பாதுவனாக....!!!!!!!!!!

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

காவல் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்: முதல்வர்


சென்னை, ஏப்.24 - காவல் துறையினருக்கான பயிற்சி மையங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவல்துறை மானியக்கோரிக்கைக்குப்பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லுாரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், கோயம்புத்தூர், ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். www.nidurin.com

சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி


சவூதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது. காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்கவேண்டியுள்ளது பரிசோதனைக்காக. ஏற்கெனவே நமது பாசத்திற்குரிய சவூதிகள் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும். குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறதாம். இதைவிட முக்கியமான விஷயம் எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடு்க்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொருமுறையும் கேட்டு தெழிவு பெற்றுக்கொள்ளுங்கள். காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது. அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டுவர முடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை பார்த்தபோது மனதுக்கு வருத்தமாகவே இருந்தது... இந்த செய்தி உங்களுக்கு பயன்பெறும் என்று நம்புகிறேன் www.nidurin.com

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்

சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர். திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள் உலகம், புவி வெப்பமடைதல், புனர்வாழ்வு மற்றபல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

சனி, ஏப்ரல் 20, 2013

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!


பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும் அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான் நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை . பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் ! இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது . இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.. WWW.NIDURIN.BLOGSPOT.COM

தோழர்கள் கவனத்திற்கு அவசரம் பகிரவும் மற்றும் உதவவும் !


நமது அன்பு நண்பர் திரு . Yasir Arafath அவர்களின் அண்ணன் அவர்களுடைய குழந்தை வயது 11 விளையாடும் பொழுது தவறி மொட்டை மாடியில் இருந்து கிழேவிழுந்து உயிருக்கு போராடும் நிலையில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த குழந்தைக்கு ஏ - (நெகடிவ்) இரத்தம் நாளை காலை 9 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால் தேவைபடுகிறது. கருணை உள்ளம் கொண்டவர்கள் தயவுசெய்து இரத்தம் கொடுக்க முன்வரவேண்டுகிறேன். தயவுசெய்து உதவுங்கள். தொடர்புக்கு இம்ரான் 9894461115,9597555629 www.nidurin.com

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்


ஈரானில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது 5.2. ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர் ஆனால், இந்த தடவை நடந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பூமிக்கு அடியில் 2.கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெக்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் உருவானதால் மக்கள் அச்சத்துடன் உள்ளன.

வியாழன், ஏப்ரல் 11, 2013

'மிஹின் லங்கா தமிழகத்துக்கான சேவைகளை நிறுத்துகிறது


மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்ததன் பின்னணியில் பயணிகள் எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கிறது. இதனால், பல்வேறு இலங்கை விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளைக் குறைத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து பத்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் தற்போது உள்ளன என்றாலும் சென்னைக்கே மிக அதிக எண்ணிக்கையிலான சேவை நடக்கின்றது, இரண்டாம் இடத்தில் திருச்சி இருக்கிறது என்கின்றனர் நோக்கர்கள்.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம்புரண்டு பயணிகள் 4 பேர் பலி - 30 பேர் காயம்


அரக்கோணம், பீகார் முசாபர்பாத்திலிருந்து பெங்களூர் புறநகர் யெஸ்வந்துபூர் நோக்கி இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அரக்கோணம அருகே சித்தேரி என்னுமிடத்தில் சென்றபோது, அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்ப இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இருந்தும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

திங்கள், ஏப்ரல் 08, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்!


திருச்சி: பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலையை கண்டித்தும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளை கண்டித்தும் த.மு.மு.க சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 06.04.2013 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திருச்சி சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகில், பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை கண்டித்தும்... இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளை கண்டித்தும்... ஐ.நா. பெருமன்றம் உடனடியாக தலையிடக் கோரியும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க கோரியும், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர்(ம.ம.க) பைஸ் அஹமது,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக செயலாளர்.பேராசிரியர்.ஹாஜாகனி, மாவட்ட துணைத்தலைவர் முஹம்மதுரபீக், மாவட்ட வழக்கறிஞர் அணிச்செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் சையது முர்துஸா ஆகியோர்களின் கண்டன உரையாற்றினர்,சிறப்பு அழைப்பாளராக ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாயளர் மீரான் மிஸ்பாகி மற்றும் தமுமுக நிர்வாகிகள் பலர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சனி, ஏப்ரல் 06, 2013

டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் கை முறிவு: சக கைதிகள் தாக்கியதாக புகார்


டெல்லி: டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கை உடைந்துள்ளது. விமானப்படைத் தேர்வு எழுத இருந்த நிலையில் சிறையில் சக கைதிகள் தாக்கி அவனது வலது கை எலும்பு முறிந்துவிட்டதாக வழக்கறிஞர் புகார் செய்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை வழக்கில் சிக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம் சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டான். முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் மற்றும் பவன் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வினய் சர்மா விமானப்படையின் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளான். அவனுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சியாளரை வழங்க சிறை அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தான் தேர்வுக்கு படிப்பதால் பால், பழம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வினய் சர்மா புதிய மனு தாக்கல் செய்திருந்தான். இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக டெல்லி நீதிமன்றத்தில் வினய் சர்மா நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தான். அவனது வலது கையில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. அவனது வக்கீல் கூறுகையில்,ஏப்ரல் 7ம் தேதி நடக்க உள்ள விமானப்படை தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த வினய் சர்மாவை சிறையில் சக கைதிகளும், போலீசாரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில், வினய் சர்மாவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று புகார் தெரிவித்தார்.

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

வெளிநாட்டினருக்கு எதிரான சவூதி சட்டம் - நிறுவனங்களுக்கு 2 மாதம் கெடு?


ரியாத்: சவூதி அரசின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எதிரான புதிய சட்டத்தின் காலக் கெடுவை 2 மாதகாலம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், இதில் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறப் படுகிறது. இந்த சட்டம் அமுல்படுத்தப் பட்டு கடந்த சிலதினங்களாக, கெடுபிடி அதிகரித்து, தகுந்த உரிமம் இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டு தொழிளாலர்கள் பலர் கைது செய்யப் படுவதோடு அவரவர்களின் நாட்டிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த திடீர் நடவடிக்கைக்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த நிதாகத் சட்ட நடவடிக்கைக்கு,வங்கிகள், காய்கறி அங்காடிகள்,நகைக்கடைகள்,இன்னும் சில நிறுவனங்களுக்கு மட்டும் மேலும் 2 மாதம் அதாவது (ஜூன் 9 ஆம் தேதிவரை) கெடு விதித்திருப்பதாக ஒரு சவூதி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது குறிப்பிடப் பட்டுள்ள இரண்டு மாதத்திற்குள், ஏற்கனவே அறிவித்துள்ளபடி சவூதி நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதோடு, நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள வரைமுறைபடி மட்டும் வெளிநாடு பணியாளர்கள் அமர்த்தப் பட வேண்டும். மீறினால் இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனங்களும் வெளிநாட்டு பணியாளர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவர் என்று அதில் கூறப் பட்டுள்ளது.

நைஜீரியா: பஸ் மற்றும் பெற்றோல் டேங்கர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பேர் பலி


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஈடோ மாநில பெனின் - ஓர் நெடுஞ்சாலை உக்போகுயி என்னுமிடத்தில் சென்ற பஸ், லாரி, பெட்ரோல் டேங்கர் என மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. அப்போது டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட குறைந்தது 36 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 100-ற்க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளனர். ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் விபத்துகள் நைஜீரியாவில் நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் டேங்கர் விபத்துக்குள்ளானதில் 100-ற்க்கும் மேற்பட்டோர் இறந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது.

வியாழன், ஏப்ரல் 04, 2013

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற கல்லூரி மாணவன் பிடிபட்டார்


சென்னை : காதலி தன்னை விட்டு வேறு ஒரு மாணவனை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த மற்றொரு மாணவன் துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொல்ல முயன்றான். துப்பாக்கியை இயக்க தெரியாததால் தலையில் ஓங்கி அடித்து விட்டு ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் மதுரவாயலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா காயி (22). மதுரவாயலில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் இறுதி ஆண்டு படிக்கிறார். இவருடன் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்தி தாஸ் (22) படிக்கிறார். நண்பர்களாக பழகிய இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர், மதுரவாயல் கம்பர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து ஒன்றாக தங்கினர். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணீஸ் குமார் (23) என்பவரும் பிடெக் இறுதியாண்டு படித்தார். மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஹேமந்தி தாசுக்கு மணீஸ் குமார் ஆறுதல் கூறினார். பின்னர் மணீஸ் குமாரும் ஹேமந்தி தாசும் காதலிக்க தொடங்கினர். இதையறிந்த ஆதித்யா ஆத்திரம் அடைந்தார். இருவரையும் கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதித்யா அறையில் இருந்து ஹேமந்தி தாஸ் வெளியேற முடிவு செய்தார். இதை தெரிந்து கொண்ட ஆதித்யா, ஹேமந்தி தாசின் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஆதித்யாவின் அனைத்து சான்றிதழ்களையும் ஹேமந்தி தாஸ் எடுத்து வைத்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என ஹேமந்தி தாசும், ஆதித்யாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மதுரவாயல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். சொன்னபடி ஹேமந்திதாஸ் மணீஸ் குமாருடன் பைக்கில் வந்தார். இது ஆதித்யா வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஆதித்யா “எனது காதலியை நீ அபகரித்து விட்டாய். அவள் இல்லாமல் நான் தினமும் செத்து பிழைக்கிறேன். அவளை என்னிடம் திருப்பி கொடு‘‘ என்று கத்தியுள்ளார். பதிலுக்கு “நான் ஹேமந்தி தாசை கட்டாயப்படுத்தி என்னுடன் அழைத்து செல்லவில்லை. அவள் தான் என்னுடன் விரும்பி வந்தாள். நீ அவளை மறந்து விடுÕÕ என்று மணீஸ் குமார் கூறினார். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்யா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட முயன்றார். துப்பாக்கியை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியாததால் அவரால் சுட முடியவில்லை. துப்பாக்கியை பார்த்ததும் ஹேமந்திதாசும், மணீஸ் குமாரும் பயத்தில் கூச்சலிட்டனர். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால், செய்வதறியாது தவித்த ஆதித்யா துப்பாக்கியால் இருவரது தலையிலும் ஓங்கி அடித்தார். இதில் அவர்கள் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. தப்ப முயன்ற ஆதித் யாவை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். காயம் அடைந்த மணீஸ், ஹேமந்திதாஸ் இருவரையும் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுட முயன்றது ஏன்: மாணவன் வாக்குமூலம் துப்பாக்கியால் சுட முயன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட ஆதித்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ஹேமந்தி தாசை உயிருக்கு உயிராக காதலித்தேன். படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். என் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் வில்லன் போல் மணீஸ் குமார் வந்தார். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்றேன். அங்கு ஸீ 5 ஆயிரம் மதிப்பில் கள்ள துப்பாக்கி வாங்கி வந்தேன். ஓட்டல் அறைக்கு வந்த உடனேயே மணீஸ் குமாரை சுட்டு தள்ள முடிவு செய்தேன். சுட முயன்ற போது அதை எப்படி இயக்குவது என்று எனக்கு தெரியவில்லை. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு படிக்க வருபவர்களில் பலர் தங்களது பாதுகாப்பிற்காக கள்ளத்துப்பாக்கி வாங்கி வருவது வழக்கம்தான். இவ்வாறு ஆதித்யா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில ஆசாமிகள் 5 பேர் வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கியை வைத்து கடத்தல் செய்யும் சில சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தொடங்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன், ஏப்ரல் 03, 2013

தாயுடன் மொபட்டில் சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவி பலி


வேளச்சேரி : கல்லூரி பஸ்சை தவறவிட்டதால், தாயுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவி, லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், மாணவர்களும் மறியலில் ஈடுபட்டனர். மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது ஒரே மகள் சுகன்யா (19). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை கல்லூரி பஸ்சை தவற விட்டார். இதனால் சுகன்யாவை அவரது தாய் லட்சுமி, மொபட்டில் கல்லூரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். மேடவாக்கம் , மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதற்காக ஜல்லிக் கற்களை சாலையோரம் கொட்டியுள்ளனர். அப்பகுதியில் சித்தாலப்பாக்கம் அருகே வந்தபோது லட்சுமியின் மொபட், ஜல்லிக் கற்களில் ஏறியதில் நிலைதடுமாறியது. இதில் மொபட் சரிந்து லட்சுமி சாலையோரமும், சுகன்யா சாலையின் நடுவிலும் விழுந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சுகன்யா மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காயமின்றி தப்பிய லட்சுமி, தன் கண்ணெதிரிலேயே மகள் இறந்ததை பார்த்து கதறி அழுதார். விபத்து நடந்ததை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் டிரைவர், தண்ணீர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு கீழே குதித்து தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவ்வழியே வந்த 2 லாரிகளை சிறைபிடித்தனர். சிறிது நேரத்தில் தகவலறிந்து மாணவர்களும் அங்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின்னர் சுகன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்நாளே லீவு போட விரும்பாமல் சென்றார் தாய் லட்சுமி கூறுகையில், சுகன்யா எங்களுக்கு ஒரே மகள், நன்றாக படிப்பாள். பிளஸ் 2 வரை மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். அந்த பள்ளி நிர்வாகம் நடத்திய இன்ஜினியரிங் கல்லூரியில்தான் முதலாண்டு சேர்ந்து படித்து வந்தாள். வீட்டில் இரண்டு கார்கள் உண்டு. இருந்தாலும் கல்லூரி பஸ்சிலேயே தோழிகளுடன் சென்று வருவாள். இன்று கல்லூரி பஸ்சை தவறவிட்டு விட்டாள். நீண்டநாள் விடுமுறைக்கு பிறகு கல்லூரி தொடங்குவதால் முதல்நாளே லீவு போடக்கூடாது என்று கூறினாள். அதனால் நான் மொபட்டில் அழைத்து சென்றேன். என் கண் முன்பே ஒரே மகள் இறந்து விட்டாளே என்று கூறி கதறி அழுதார். விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த மதி (25) கைது செய்யப்பட்டார்.

>சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு...


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்...


வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்... 1) முதலில் வெளிநாடு immigration கவுன்ட்டர் சென்றதும் அவர்கள் பாஸ்போர்ட்- ல் exit சீல் பதிந்துள்ளனரா என்பதை பார்க்கவும். 2) இந்திய விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கும் முன்னரே எழுந்து ஓடவேண்டாம். சில சமயம் நம் அவசரத்தால் Hand Luggage மறக்க நேரிடும். 3) நம் விமான நிலையத்தில் Immigration கவுன்ட்டர் களில் - நம் சில லகுட பாண்டிகள் நம்மை பார்த்ததும் எராளமான பார்வையும் - குதர்க்கமான கேள்விகளையும் கேட்பார்கள் பயப்ப வேண்டாம். மேலே சொன்னது போன்று இங்கேயும் Exit முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.. என் சகோதருக்கு இது போன்று தான் முத்திரை குத்தாமல் அனுப்பிவிட்டனர், அவரோ குழந்தைகள் வெளியே காத்திருக்கின்றனர் என்று பப்பரக்கானு பார்க்காமல் போய்விட்டார்..... பிறகு என்ன திரும்ப சென்னை விமான நிலையம் வரும்போது நீ எப்படி வெளில போனேன்னு 3 மாதம் கழித்து கேட்கின்றனர்... அடப்பாவிகளா அத உங்க அப்ப்ரண்டிச்ட கேளுங்க ஆபீசர்ஸ்.. பிறகு என்ன தனி ரூமில் வைத்து enquery செய்து பழிய சீல் தேதியில் முத்திரை இட்டு குவைத் அனுப்பி வைத்தனர்... கவனமாக கையாள வேண்டும் சகோதர்களே... 4) எல்லாம் முடிந்ததும் பாஸ்போர்ட் டை - பத்திரபடுத்திவிட்டு உங்கள் Luggage எடுக்க செல்லவும். 5) விமான நிலையம் உள்ளேயும் வெளியேயும் சில சில காக்கிகள் என்ன பாய் பொட்டில என்னனு கேப்பாங்க உண்மையை சொல்லி வெளியேறுங்கள்... மீறி பணம் கேட்டால் அருகில் உள்ள Aiport Authority ஆபீசரிடம் புகார் தெரிவியுங்கள். தகவல் : யாசீன் ஷாஜஹான்

ஓட்டுனரின் சாமர்த்தியம் - 60 பயணிகள் உயிர் தப்பினர்!


தேனி: தேனியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்திலிருந்து தப்பியது. தேனியில் இருந்து மதுரைக்கு 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று இன்று பகல் 12:15 மணிக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை மூட்டமாக எதிரே சாலையே தெரியாத அளவிற்கு கிளம்பியது. இதை பார்த்ததும் ரோட்டில் சென்றவர்களும் எதிரில் வாகனங்களில் வந்தவர்களும் டிரைவரிடம் சைகை காட்டி பஸ்சை நிறுத்தக் கூறினர். இதனிடையே பஸ்ஸின் உள்ளேயும் புகை பரவி திடீரென தீ பிடிக்கத் தொடங்கியது. உடன் பஸ்ஸை நிறுத்திய ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் வெளியேறுமாறு கோரினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, 60 பயணிகளும் எந்தவித சேதமுமின்றி உயிர் தப்பினர்.

பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை !


தொடர்ச்சியாக சிறுபான்மை விரோத உணர்ச்சிகளை தூண்டுவிடும் வகையில் அறிக்கைகள் வெளியிடும் வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.அப்துல் நாஸர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நாடு முழுவதும் பிரவீன் தொகாடியா இனவெறியை பரப்புரைச் செய்துவருகிறார்.தொகாடியா, பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும். நேற்று முன் தினம் அஹ்மதாபாத்தில் நடத்திய உரையில் ஹிந்து மாநிலத்தை உருவாக்குவோம் என்பது நாட்டை வகுப்புவாத மயமாக்குவதற்கான முயற்சியாகும். இது நாட்டின் மீதான வெளிப்படையான போரைத்தான் தொகாடியா நடத்துகிறார். ஏதேனும் சிறுபான்மை தலைவர்கள் தங்களின் உரிமைகளைக் குறித்து பேசும்பொழுது உடனடியாக அவர்களை சிறையில் அடைக்கும் அதிகாரிகள், தொகாடியா, உமாபாரதி போன்றவர்களின் விஷக்கருத்துக்களை காணாதது போல் நடிக்கின்றனர் என்று பி.அப்துல் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்