சனி, ஜூன் 30, 2012

இந்தியாவுக்கு 20 லட்சம் கோடிக்கும் மேல் வெளிநாட்டுக் கடன்: ரிசர்வ வங்கி


கடந்த 2011 -2012 ஆண்டுக்கான வெளிநாட்டு கடன் குறித்த நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமை 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மட்டும் வியாபார மற்றும் வர்த்தக நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 2011 ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சமாக இருந்த கடன் தொகை, 2012 ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் உலக வர்த்தக சந்தைகளின் நிலையற்ற போக்கும் அதனால் நடந்த கடும் பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

வெள்ளி, ஜூன் 29, 2012

சென்னை புறநகரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ 231 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா தகவல்


சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், வேளச்சேரி கொளத்தூர் ஆகிய இடங்களில் ரூ.231 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடைமேடை ஆகியவை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் மக்கள்தொகை, வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கேற்ப சாலைக் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை, மேம்பாடுகளை செய்திட முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னையில், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரத்தில் உள்ள சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல்; சென்னை, வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில் 98 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையினை இணைத்து மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலத்துடன் கூடிய வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைத்தல்; சென்னை உள்வட்டச் சாலையில், கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப் பகுதியில் 52 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல், என மொத்தம் 231 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை நகரத்தில், மெட்ரோ ரெயிலுக்கு பாதை அமைப்பதன் காரணமாக, ஜிஎஸ்டி சாலையில், சென்னை விமான நிலையம் அருகே அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், சென்னை விமான நிலையத்திற்கு அருகே ஜிஎஸ்டி சாலையை ஒரு கிலோ மீட்டர் வரை 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் மேற்படி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வழிவகை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

புதன், ஜூன் 27, 2012

பொறையாரில் TNTJ முன்னாள் கிளை தலைவர் கைது........... ......


ஒருதலை பச்ச நடவடிக்கையை கண்டித்து இன்ஷா அல்லாஹ் காவல் நிலையம் முற்றுகை போர்........... .....!! தமிழ்நாடு தவ்ஹித் ஜாமாஅத்தின் நாகை (வடக்கு) பொறையார் கிளை முன்னாள் தலைவர் சகோ அக்பர் அலி கைது... காவல்துறையின் ஒருதலை பச்சமான நடவடிக்கையை கண்டித்து பொறையார் காவல் நிலைய முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ் 28.06.2012 வியாழன் அன்று.... கண்டன உரை சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி.... வாருங்கள்...குட ும்பதோடு கண்டனத்தை பதிவு செய்வோம். உரிமைகளுக்காக இனி அழுவதல்ல, எழுவதே வீரம்.......... ....!! செருப்பாய் தேய்ந்தது போதும், நெருப்பாய் பொங்கி எழு............ .!! உத்தம நபியின் உண்மை சமுதாயமே..... அலை அலையாய் ஆர்ப்பரித்து வாரீர்......... அநீதிக்கு எதிராக கொதித்தெழுந்து வாரீர்......... ....!! போராட்ட களத்திற்கு அழைக்கிறது :- TNTJ

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து வடபழனி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. 30 பேர் படுகாயம்.


சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது. இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. போக்குவரத்து ஸ்தம்பிப்பு இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போயுள்ளத

திங்கள், ஜூன் 25, 2012

85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்!


மஹி உயிருடன் இல்லை என்ற தகவல் கிடைத்ததும் அவளது குடும்பத்தினர், தாயார் சோனியா உள்ளிட்டோர் கதறியழுதனர். மஹியின் கிராமத்திலும் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதமே குழந்தையின் உயிர் போக காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.(செய்தி) எழுபது அடி குழியை சரியாக மூடி வைக்காதத அலட்சியத்தால்அறியாத பச்சிளம் குழ்ந்தை அதோ விழுந்து இறந்துள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிர்பாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள். அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்தனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமியால் கயிறைப் பிடித்து மேலே வரமுடியவில்லை. இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே, கிட்டத்தட்ட 80 மணி நேரம் கழிந்த நிலையில் இன்று காலைதான் ராணுவம் தோண்டிய சுரங்கப் பாதை வழியாக மீட்புக் குழுவினர் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்தனர். இதனால் குழந்தை விரைவில் கொண்டு வரப்படுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் அதில் திடீரென தாமதம் ஏற்பட்டதால் பதட்டம் அதிகரித்தது. சிறுமி உள்ள பள்ளத்திலிருந்து அருகாமையில் ராணுவத்தினர் தோண்டியுள்ள பள்ளத்திற்கு குழந்தையை கொண்டு செல்ல ஒரு சிறிய சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அதன் சுற்றளவு குறுகியதாக இருப்பதாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும் பிரச்சனை ஏற்பட்டது. மூச்சு விடக் கூட முடியாத நிலையில் அந்த இடம் இருப்பதால் மிகவும் மெதுவாகவே தற்போது குழந்தையை மீட்டுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக குழந்தை மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. குழந்தையை மீட்டுக் கொண்டு வந்தபோதே அதை துணியால் மூடிபடியதான் கொண்டு வந்தனர். இதனால் குழந்தையின் உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன. மஹியை உடனியாக ராணுவ ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மஹி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்ட நீதிபதியும் அதை உறுதி செய்து சான்றளித்தார். இதையடுத்து மஹியின் மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மஹி உயிருடன் இல்லை என்ற தகவல் கிடைத்ததும் அவளது குடும்பத்தினர், தாயார் சோனியா உள்ளிட்டோர் கதறியழுதனர். மஹியின் கிராமத்திலும் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதமே குழந்தையின் உயிர் போக காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. தொழிற்நுட்பம் எத்தனையோ வளர்ச்சி அடைந்திருந்தும் கண் முன் சிறுமி பலியாகியுள்ளாள். நீயா? நானா? போட்டி போட்டுக் கொண்டு சாக்கடை அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பிடியில் தவிக்கும் நாடாகிப் போனதால், அவசரமாக செய்யவேண்டிய மீட்புப் பணியில் அலட்சியம் ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, ஜூன் 24, 2012

47 நாட்கள் போராட்டத்திற்கு முடிவில்லை. ஏர் இந்தியா விமானிகள் இன்றுமுதல் காலவரைஅற்ற உண்ணாவிரதம்.


மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளில் ஒரு பிரிவினர் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை மத்திய அரசு சட்ட விரோதம் என அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விமானிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால் ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சகம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதனால் 47 நாட்களாக போராட்டம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என விமானிகள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 101 விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதலில் 10 பேர் கொண்ட விமானிகள் குழு உண்ணாவிரதத்தில் பங்கேற்பது என்றும் தொடர்ந்து விமானிகளின் குடும்பத்தினரும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

வியாழன், ஜூன் 21, 2012

பொறையார்றில் tntj சேர்ந்தவர் என்பதால் ஜனாஸாவை அடக்க மறுக்கும் சுன்னத் ஜமாஅத் மற்றும் இதற்க்கு மறைமுகமாக ஆதரவு அழிக்கும் தமுமுக சகோதரர்கள் ..


20/6/2012 தவ்கீத் மார்க்கஸ் தெரு, யூசுப் அவர்களின் தகப்பனார் முஹம்மது அலி வபாத்தாகி விட்டார்கள் . மையத் அடக்கும்மிடத்தில் பூட்டை போட்டுக்கொண்டு ஜனாஸாவை அடக்க மறுத்த சுன்னத் ஜமாஅத் போர்வைஇல உள்ள பொறையார் கல் நேஞ்சர்கள். ரவ்டிகள் தாக்கி மூன்று பேர் காயம் நேற்று மாலை அழகிய ஊரான பொறையார் ரவ்டிகளால் கலவர பூமியஹா காட்சியலித்தது.

அரசுபேருந்து மோதி விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி


சென்னை, ஜூன்.- 21 - சென்னையில் அரசு பேருந்து மோதியதில் விபத்தில் பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசன்ட் ரோடு அருகில் 16.6.2012 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த சுமதியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரச் சம்பவத்தில் காலமான சுமதியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதன், ஜூன் 20, 2012

மெரினாவில் ஒரே நபருக்கு 50 கடைகளா? விசாரணை செய்ய மேயர் சைதை துரைசாமி உத்தரவு.


மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கேள்வி நேரத்தின்போது 11 கவுன்சிலர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: மெரினா கடற்கரையில் மொத்தம் 1,200 கடைகள் உள்ளன. இதில், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் 25 கடைகள், 50 கடைகள் என வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தீவிரமாக விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக, நிரந்தரமாக உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படும். பின்னர், அவர்களுக்கு கடைகள் நடத்துவது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டு அவ்வண்ணமே அவர்கள் செயல்பட அறிவுறுத்தப்படுவார்கள். ஒருவர் பல கடைகள் வைத்திருப்பது தவிர்க்கப்படும். மெரினாவை சுற்றியுள்ள தலைவர்கள் சிலைகள் நவீன யுக்தியுடன் புதுப்பிக்கப்படும். விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் நடத்தப்படும் கலை, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் பல இடங்களில் அனுமதியின்றியும், பல இடங்களில் விதி மீறலுடன் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு எத்தகைய விதி மீறல்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தனியார் மூலம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. அவர்கள் பணியை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் 3 மண்டலத்திலும் தலா 2 வார்டுகளை மாநகராட்சி எடுத்துள்ளது. இனிமேல் அவர்கள் ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் சட்டப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பின்னர் சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற மற்றும் அவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்த உலக அளவில் 32 நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

திங்கள், ஜூன் 18, 2012

சென்னை தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.2000 அபராதம்! மாநகராட்சி அதிரடி


சென்னை தெருக்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிப்பதற்கான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்ற உள்ளது. சென்னை நகர தெருக்களில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிப்பது, கட்டிட இடிபாடுகளை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிப்பது என்று கடந்த 2008-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். அபராத தொகை லட்சக்கணக்கில் வசூலான நிலையில்,இத்திட்டம் தொடர்ந்து தீவிரமாக அமல் ஆகாமல் போனது.வேலைப்பளுதான் இதற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதோடு,அபராதத் தொகையை 4 முதல் 5 மடங்கு உயர்த்தி வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. அதன்படி தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.100 அபராதம் என்பது ரூ.500 ஆகவும், கட்டுமான கழிவுகளை கொட்டினால் இதுவரை ரூ.500 அபராதம் என்பது ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான தீர்மானம் வருகிற 19-ம் தேதியன்று, மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு மன்ற ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரிழந்தூர் அர்ரஹீமிய்யா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதல்


ஞாயிறு, ஜூன் 17, 2012

ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?


நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற விபரத்தை வழங்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரயில்வேத் துறை துவங்கியுள்ளது. நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய ரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும். இன்டர்நெட் வசதி கொண்ட செல்போன்களிலும் இந்த விபரங்களை பெறலாம். ரயில் எண்களை அளித்தால் ரயில் எந்த ரயில் நிலையத்தை சென்றடைந்தது, அடுத்து வரும் நிலையம் எது என்பது உள்ளிட்ட விபரங்களை பெறலாம். தற்போதுள்ள 139 எண்ணை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிற 8,000க்கும் அதிகமான ரயில்களின் விபரங்களை பெற முடியும். பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து இந்தியன் ரயில்வேயின் நேஷனல் டிரெய்ன் என்கொயரி சிஸ்டம் (என்டிஇஎஸ்) கீழ் இந்த இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும் ! ! !


அஸ்ஸலாமு அலைக்கும் ! ! ! விஜய் டிவி ஒரு கோடி நிகழ்ச்சியில் முஸ்லிம் இளம் பெண் ? ? ? தலையில் ஒரு ஸ்கார்ப் மட்டும் ? ? ? கணவன், தாய், சகோதரன் மற்றும் அணைத்து பார்வையாளர்கள் முன்னிலையில் சூர்யாவுடன் சிரித்து, சினிமா வசனங்கள் பேசி கை குலுக்கி மகிழ்கிறார். " நமது வீடு பெண்ணை பிற ஆடவர்கள் பார்க்கும் பொது யார் ரோஷம் கொள்ளவில்லையோ அவன் முஹ்மீனாக மாட்டன். (((நபி மொழி)

வெள்ளி, ஜூன் 15, 2012

பிரேசில்-இந்தியா வர்த்தகத்தின் இலக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 750 லட்சம் கோடி.


பிரேசில்-இந்தியா இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 750 லட்சம் கோடியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருக்கிறார். இந்தியா-பிரேசில் வர்த்தக மேம்பாடு குறித்து விவாதிக்க நான்கு நாள் பயணமாக பிரேசில் வந்திருக்கிறார். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தொழிலகங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியது: இப்போது இரு நாடுகளிடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 500 லட்சம் கோடி. அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா-பிரேசில் இடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 750 லட்சம் கோடியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றார்.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய உள்கட்டமைப்புத் துறையில் ரூ. 50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரேசில் தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். வேளாண் துறை, ஜவுளி, தகவல் தொடர்பு, மருந்துகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளின் தொழிலதிபர்களும் இணைந்து செயலாற்றலாம். தேசிய தயாரிப்புக் கொள்கையை இந்தியா சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 25 சதவீதத்தை தயாரிப்புத் துறை மூலம் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதனை நிறைவேற்றும் பொருட்டு, மாபெரும் தொழில் மண்டலங்களை உருவாக்க இருக்கிறோம். இந்த தொழில் மண்டலங்களில் ரூ. 50 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இது போன்ற உள்கட்டமைப்பு முயற்சிகளில் பிரேசில் தொழிலதிபர்கள் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆனந்த் சர்மா கூறினார்.

புதன், ஜூன் 13, 2012

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ரூ.660 கோடி மதிப்புள்ள ஓட்டல்.


சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருவது ஆகியவை இது செயல்படுத்திய பிரமாண்ட திட்டங்கள். கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் அமைக்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக ஒத்திப்போடப்பட்ட இந்த சூப்பர் பிளானை துபாய் வேர்ல்டு நிறுவனம் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது. ‘வாட்டர் டிஸ்கஸ்’ என்பது ஓட்டலின் பெயர். மேலும் கீழுமாக இரு டிஸ்க்குகள் இருப்பது போல ஓட்டல் வடிவமைக்கப்படுகிறது. மேல் டிஸ்க், கடல் மட்டத்துக்கு மேல் சில அடி உயரத்தில் இருக்கும். கீழ் டிஸ்க், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி ஆழத்தில் இருக்கும். ஓட்டலின் இரு டிஸ்க் பகுதிகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் மாடிப்படி இருக்கும். இரு டிஸ்க்குகளும் சுழலும் வகையில் அமைக்கப்படும். கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் போன்ற பகுதியில் 21 அறைகள் அமைக்கப்படுகின்றன. அறையில் சுகமாக ஓய்வெடுத்தபடியே, பவளப் பாறைகளின் அழகையும் மீன்கள் நீந்தி செல்வதையும் ரசிக்கலாம். கடலுக்கு அடியில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிரத்யேக விளக்குகள் அமைக்கப்படுகின்றன. விருப்பப்பட்டால் நீந்திவிட்டும் வரலாம். ‘அண்டர்ஸீ பார்’ வசதியும் உண்டு. சுனாமி வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டல் அமைக்கப்படும். சுனாமி வரும் சூழலில், கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் ஓட்டல் சுழன்று கடலுக்கு மேல் பகுதியில் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்படும். கடலடி தரையில் டிரில்லிங் செய்து ராட்சத பில்லர்கள் அமைத்து மொத்த ஓட்டலும் நிறுவப்படும். போலந்து நாட்டின் ஜினியா நகரை சேர்ந்த ‘டீப் ஓஷன் டெக்னாலஜி’ என்ற நிறுவனம்தான் கட்டுமான டிசைனை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் பிக் இன்வெஸ்ட் கன்சல்ட் நிறுவனம் கடன் உதவி வழங்க, துபாய் வேர்ல்டின் துணை நிறுவனமான ட்ரைடாக்ஸ் வேர்ல்டு நிறுவனம் டிஸ்க் ஓட்டலை கட்டுகிறது. கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ‘வாட்டர் டிஸ்கஸ்’ ஓட்டல் கட்டப்படுகிறது. ரூ.300 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. ரூ.660 கோடி வரை ஆகலாம் என தெரிகிறது என்று துபாய் வேர்ல்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு கிடையாது. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


ஐ.ஐ.டி. உள்ளிட்ட அரசுக் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணை செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தில், எந்தவித ஆதார ஆவணங்களும் இல்லாமல் அரசு மேல் முறையீடு செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இட ஒதுக்கீடு என்ற சிக்கலான பிரச்னையை அரசு மிகவும் சாதாரணமாகக் கையாள்வது அதிருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுபான்மையினருக்கு 4.5 சதவிவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், இவ்வழக்கு விசாரணையை புதன் கிழமை வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஐ.டி., மாணவர்கள் சேர்க்கையில் சிறுபான்மையினருக்கு உள்ஓதுக்கீடு குறித்து மத்திய அரசின் விளக்கத்தை ஏற்கமுடியாது என அறிவித்து, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மீண்டும் மறுத்து விட்டனர். நீதிபதிகளின் இந்த உத்தரவால் ஐஐடி மாணவர் சேர்கையில் தற்போதைக்கு உள்ஒதுக்கீடு என்பதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

செவ்வாய், ஜூன் 12, 2012

போலி பாஸ்போர்ட்டில் பிரான்ஸ் செல்ல திட்டமிட்ட 3 இலங்கை தமிழர்கள் கோடம்பாக்கத்தில் கைது.


கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் தங்கும் விடுதி ஒன்றில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் சிலர் தங்கி இருப்பதாக கமிஷனர் திரிபாதிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த விடுதியில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த ரெபிஜினஷ், தர்மசீலன், பாலா ஆகியோர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள். இவர்களிடம் விசாரித்தபோது போலி பாஸ்போர்ட்டில் 3 பேரும் பிரான்சு செல்ல திட்டமிட்டது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த புரோக்கர்கள் பிரபாகரன், சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

திங்கள், ஜூன் 11, 2012

நடுவானில் பெண் பைலட்டுகள் ஓட்டிய விமானத்தில் முன்பக்க டயர் கழண்டு விழுந்தது. 52 பேர் காயம்.


அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன்பக்க டயர் கழன்று விழுந்தது. விமானம் குவாஹாட்டியில் தரையில் இறக்கப்பட்டபோது, விமானத்தில் இருந்த 52 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. பெண் பைலட்டுகளின் சாமர்த்தியம்: அந்த விமானத்தை சாமர்த்தியமாக தரை இறக்கிய பைலட்டுகள் ஊர்மிளா யாதவ், யாஷு ஆகிய இருவருமே பெண்கள் குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் அசாம் முதல்வர் தருண் கோகோய் பாராட்டுத் தெரிவித்துள்ளார். கழன்று விழுந்தது டயர்: முன்னதாக சில்சாரில் இருந்து குவாஹாட்டிக்கு பயணிகள், பணியாளர்கள் என 52 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விமானம் புறப்பட்டது. விமானம் வானில் கிளம்பிய உடனேயே விமானத்தில் இருந்து ஒரு பொருள் தரையில் விழுந்ததை விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் கண்டறிந்தனர். விமான நிலைய ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது விமானத்தின் முன்பக்கத்தில் இருக்கும் இரு டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்திருப்பது தெரியவந்தது. எனினும் விமானம் குவாஹாட்டி சென்றது. டயர் கழன்றது குறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை எப்படியாவது பத்திரமாக தரையிறக்கும் முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: விமானம் தீப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் இருக்கும் எரிபொருள் தீரும்வரை வானில் பலமுறை வட்டமிட்டது. விமான நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தை வழக்கமான முறையில், அதே நேரத்தில் சற்று மெதுவாக தரையிறக்கும்படி பைலட்டுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி விமானம் தரையிறக்கப்பட்டது. காயத்துடன் தப்பினர்: எனினும் முன்பக்கத்தில் ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கியதால் விமானம் கடுமையாகக் குலுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 52 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல். கைது செய்ய முதல்வர் உத்தரவு.


பெங்களூர் அருகே பிடதியிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல் வைத்துள்ள கர்நாடக அரசு, ஆசிரமத்தில் சோதனை நடத்தி,சொத்துக்களை கைப்பற்றவும், ஆசிரமம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட அமைப்பினர் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்குதல் நடத்தினார். இதைக்கண்டித்து கன்னட அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்,ஆசிரமத்தை கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அரசு அறிவித்தது. ஆசிரமம் மீதும் அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்தும் அரசுக்கு பல்வேறு குற்றச்சாட்டு தொடர்ந்து வருவதால் அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கலெக்டருக்கும்,மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உத்தரவிட்டார். இதையடுத்து ராம் நகர் மாவட்ட கலெக்டர் வி.ஸ்ரீராமரெட்டி, எஸ்பி அனுபம் அகர்வால் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி இன்று காலை அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில் இன்று மதியம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல் வைத்துள்ள கர்நாடக அரசு, ஆசிரம் குறித்த குற்றச்சாட்டுக்களை குறித்து விசாரணை ந்டத்தவும், ஆசிரமத்தில் சோதனை நடத்தி, சொத்துக்களை கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சோதனையின் அடிப்படையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை அரசு ஏற்குமா என்பது விரைவில் தெரியவரும். கைது செய்ய உத்தரவு இதனிடையே நித்யானந்தா மீதான ஜாமீன‌ை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,அவரை கைது செய்யவும் முதல்வர் சதானந்தா உத்தரவிட்டுள்ளார். இதனால் நித்யானந்தா எந்த நேரத்திலும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஏறகனவே தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சனி, ஜூன் 09, 2012

டெல்லியில் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வரும் எனக்கு அரசு பங்களா தேவையில்லை. சச்சின்


எம்.பி என்ற முறையில் எனக்கு அரசு பங்களா வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்ற சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும் ஒரு சில நாட்கள் அவைக்கு வர திட்டமிட்டுள்ளேன். இதற்காக ஒரு சில நாட்கள் மட்டும் டெல்லியில் தங்குவேன். அந்த ஒரு சில நாட்களுக்காக எனக்கு தனியாக பங்களா ஒதுக்க வேண்டியது தேவையில்லை. எம்.பி என்ற முறையில் அரசு எனக்கு பங்களா ஒதுக்கினால் அதை ஏற்க மாட்டேன். ஒரு சில நாட்கள் தங்குவதற்காக வருடம் முழுவதும் பராமரிப்பு செலவு வீணாகிவிடும். பங்களாவை நான் ஏற்றுக் கொண்டால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும். எனக்கு பங்களா ஒதுக்குவதைவிட வீடு தேவைப்படும் வேறொருவருக்கு அதை தரலாம். இவ்வாறு டெண்டுல்கர் கூறினார்.

.ஜாமியா அரபிக்கல்லூரியின் பவளவிழா வேளைகள் மும்முறம்


நமதூர் ஜாமியா மிஸ்பாஹுதா அரபிக்கல்லூரியின் பவள விழா இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 30ம்தேதி மிக சிறப்பாக மூன்று தினங்களுக்கு நடைப்பெறும் வேளையில். ஜாமியாமிஸ்பாஹுதா அரபிக்கல்லூரிஎங்கும் புதிதாக வண்ணங்கள் பூசப்பட்டு வேளைகள் நடைப்பெற்று வருகிறது. விழாவை நினைவுக்கூறும் வகையில் நுலைவாயில் (ஆர்ச்).ஒன்று ஏற்ப்பாடு செய்யபடவுள்ள நிலையில் வேளைகளும் துரிதமாக நடைப்பெறுகிறது. புதியவண்ணத்தோடு தோற்றமளிக்கும் நமதூர் ஜாமியா மிஸ்பாஹுதா அரபிக்கல்லூரியின் புகைப்படம்.இதோ

"பேஸ்புக்கில் வாலாட்டிய மருத்துவ மாணவர் கைது!


Jun 5 2012 பழிவாங்குவதற்கு ஃபேஸ்புக்கில் வாலாட்டிய மருத்துவ மாணவரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சைபர் குற்றங்கள் உலக அளவில் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஆர்குட் போன்ற சமூக வளைத்தளங்கள் வந்த பிறகு இந்த குற்றங்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இந்த சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் உண்மை சம்பவங்கள் திருடப்பட்டு அவை பழிவாங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த விபின் குமார் சவுகான்(27) என்பவர் பேஸ்புக் மூலம் செய்த குற்றத்திற்காக கம்பி எண்ண காத்துக் கொண்டிருக்கிறார். இவர் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற படித்து வருகிறார். இவர் தனது மைக்ரோ பயாலஜி துறையைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை பழி வாங்குவதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சையான வாசகங்களையும் எழுதி இருக்கிறார். இதுபோன்று, ஃபேஸ்புக் வழியாக பல்வேறு குடைச்சல்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின்பேரில், விபின் மோதி தூங்கிரியை போலிசார் கைது செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, ஐடி சட்டத்தின் படி, அவர் செய்த குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் இவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் அத்தோடு ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. மோதி தூங்கிரி காவல் நிலையத்தின் காவல் அதிகாரி திரு. தீபக் கன்டேல்வால் கூறும் போது கூற்றம் சாற்றப்பட்டிருக்கும் விபின் தனது செயலால் ஏற்படும் விளைவகளை அறியாமல் இருக்கிறார் என்று கூறுகிறார். எது எப்படியோ சைபர் குற்றங்கள் அதிகரிக்காமல் இருக்க இப்படிப்பட்ட கடுமையான தண்டனைகள் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

சவுதி அரேபியா: சர்வதேச மன்னிப்பு கழகத்தின் எதிர்ப்பையும் மீறி தலை வெட்டி கொல்லப்பட்ட போதை வியாபாரி.


போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக, சவுதியில் பாகிஸ்தானியரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் போதை கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஜோகர் உசைன் முகமத் சதக் என்பவர், சவுதிக்கு ஹெராயின் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று ஜோகரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொலை குற்ற வழக்கில் கடந்த புதன்கிழமை சவுதியை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 31 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சர்வதேச பொது மன்னிப்பு கழகம் மற்றும் மனித உரிமை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வெள்ளி, ஜூன் 08, 2012

குளிர்ந்த காற்றுடன் குற்றாலத்தில் சீசன் துவங்கியது

தென்காசி. ஜூன்.8 - குற்றாலத்தில் சீசன் துவங்கும் அறிகுறியாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இதனால் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவிடும். தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்றுடனன் மழை பெய்யும் நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் இந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கேரளாவிற்கு அருகாமையில் உள்ள தமிழகப் பகுதிகளில் மட்டுமே பெய்யும் இந்த சாரல் மழை பெய்யும். இந்த சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலி அருவி, குண்டர் தோப்பு அருவி, புது அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும் இந்த அருவிகளில் குளிக்கவும், குளிர்ந்த காற்றுடன் பெய்யும் சாரல் மழையில் நனையவும் உலகம் முழுவதும் உள்ள உல்லாசப் பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள். இந்த சீசன் காலத்தில் குற்றாலம் வருகை தரும் உல்லாச பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து வருகிறது. மேலும் குற்றாலம் வருகை தரும் உல்லாசப் பயணிகள் சீசனை அச்சமின்றி அனுபவிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஏராளமான போலீஸார் குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி ஆகிய பகுதிகளில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும், பழைய குற்றாலத்தில் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகமும், சிறப்பாக செய்து வருகிறது. மேலும் சீசன் காலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள் நடத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. பகல் முழுவதும் குற்றாலத்தில் வெயில் இல்லை. நேற்று பகல் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் விரைவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவடும் இதனால் உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல் குற்றாலம், தென்காசி பகுதி பொது மக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

புதன், ஜூன் 06, 2012

15 -வது வயதில் முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் முடிக்கலாம் – டெல்லி உயர்நீதிமன்றம் ! ! !


புதுடெல்லி :- வயதுக்கு வந்த முஸ்லிம் இளம்பெண்கள் 15-வது வயதிலேயே திருமணம் முடிக்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 18 வயது பூர்த்தியாகாமல் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய பெற்றோருடைய அனுமதி இல்லாவிட்டாலும் கணவருடன் வசிக்க இஸ்லாமிய மார்க்கம் அனுமதிப்பதாக நீதிபதிகளான ரவீந்திர பட், எஸ்.பி.மார்க் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. இதுத்தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்றம், 15 வயது பூர்த்தியான முஸ்லிம் பெண்களின் திருமணம் செல்லுபடியாகும் என கூறியது. 16 வயது இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் முடித்ததாக குற்றம் சாட்டி அப்பெண்ணின் தாயார் தாஹிரா பேகம் சமர்ப்பித்த ஹேபியஸ் கார்பஸ்(ஆட்கொணர்வு மனு) மனு மீதான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தாஹிரா பேகத்தின் மனுவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம், திருமணம் முடித்த அவரது மகள் தனது கணவர் வீட்டில் வசிக்கவும் அனுமதி அளித்தது. கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்த அந்த பெண், தற்பொழுது டெல்லி அரசின் கீழ் இயங்கும் காப்பகத்தில் தங்கியுள்ளார். தம்பதிகள் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒவ்வொரு ஆறு மாதம் கழியும் தோறும் சிசு பாதுகாப்பு மையத்தின் முன்னால் ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. . .

வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் புதிய பைலட்டுகள் நியமனம். ஏர் இந்தியா அதிரடி முடிவு.


வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், புதிய பைலட்டுகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. அந் நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் 2 நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகள் கடந்த மே 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் இப்போது 75 சதவீத விமானங்களே இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், புதிதாக பைலட்டுகளை நியமித்து விமானங்களை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்துக்கு உதவ, புதிய வியாபாரத் திட்டத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு வழங்கும். முதல்கட்டமாக ரூ. 1,200 கோடியை இப்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.250 கோடி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையில் வரி பாக்கிகளை செலுத்தவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான சேவை குறைப்பு: இதற்கிடையே விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியதாவது: வேலைநிறுத்தத்தால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நாள்தோறும் ரூ. 10 முதல் 15 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை ரூ. 5 முதல் 6 கோடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலானோர் பயணிக்கும் வெளிநாடுகளுக்கான விமானங்களின் சேவையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட உள்ள இந்த ரூ. 30 ஆயிரம் கோடிதான் நாங்கள் அளிக்கும் கடைசி நிதி உதவியாகும்'' என்றார் அமைச்சர்.

நைஜீரிய விமான விபத்துக்கு என்ஜின்கோளாறே காரணம்


லாகோஷ், ஜூன். - 6 - 153 பேரை பலி வாங்கிய நைஜீரிய விமான விபத்துக்கு அந்த விமானத்தின் என்ஜின்கள் பழுதானதே காரணம் என்று அந்த விமானத்தின் பைலட் அது வெடிப்பதற்கு முன்பு கண்ட்ரோல் ரூமில் தெரிவித்துள்ளார். நைஜீரிய விமானம் ஒன்று லாகோஷ் நகரில் நேற்று முன்தினம் திடீரென்று வெடித்து சிதறி கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய துணை பைலட் உட்பட 153 பேர் பலியானார்கள். சம்பந்தப்பட்ட விமானம் லாகோஷ் நகரில் விபத்துக்குள்ளானது. இது கீழே விழுவதற்கு முன்பாக அந்த விமானத்தின் 2 என்ஜின்களும் திடீரென்று பழுதாகிப் போய் விட்டன. இத்தகவலை விமான போக்குவரத்து தலைமை அதிகாரி தெரிவித்தார். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அந்த விமானத்தின் பைலட் கண்ட்ரோல் ரூமிற்கு அதை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீட்பு பணியாளர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் இருந்து இதுவரை 137 உடல்களை மீட்டுள்ளனர். அதில் ஒரு பெண்மணி தன் குழந்தையை கட்டி அணைத்தபடி பிணமாக கிடந்துள்ளார். விபத்துக்குள்ளான விமானம் ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்தான் இந்த தாயும், குழந்தையும். கட்டிடத்தில் விமானம் விழுந்ததால் அங்கிருந்த சிலர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் விழுந்த போது உடனடியாக தீப்பிடித்து வெடிக்கவில்லை. 10 நிமிடம் கழித்தே அந்த விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான நிலையத்தில் ஒரே குழப்பம் நிலவியது. பிறகு விபத்து பற்றி தெரிந்ததும் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

திங்கள், ஜூன் 04, 2012

நைஜீரியாவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி 147 பேர் பலி


அபுஜா: நைஜீரியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள லாகோஸில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதி்ல் இருந்த 147 பேரும் பலியாகினர். நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இருந்து பயணிகள், விமானிகள் என்று 147 பேருடன் தனியார் பயணிகள் விமானம் மெக்டான்னல் டக்லஸ் எம்டி-83 நேற்று லாகோஸுக்கு புறப்பட்டது. அந்த விமானம் பிற்பகல் 2.44 மணி அளவில் லாகோஸ் முர்தலா முகமது விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 147 பேருமே பலியாகினர். விமானம் மோதிய இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். மீட்பு பணியை மேற்கொள்ள மக்கள் இடையூறாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல் அறிந்த நைஜீரிய அதிபர் குட்லக் ஜானதன் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள பாரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர் செய்தியாளர் டிமோத்தி கூறுகையில், திடீர் என்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. நாங்கள் முதலில் அது கேஸ் சிலிண்டர் தான் வெடித்துவிட்டது என்று நினைத்தோம். அதன் பிறகு தொடர்ந்து வெடி சத்தம் கேட்டதையடுத்து அனைவரும் வெளியே வந்து பார்த்தோம். மக்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். விமானம் எரிந்து கொண்டிருந்தது என்றார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்த தனியார் விமான

கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால், மும்பை, கேரளா கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து. ஓர் அதிர்ச்சி ஆய்வு.


புவி வெப்பமயம் காரணமாக, கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால், மும்பை, கேரளா உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளும், டெல்டா பகுதிகளும் அதனால் பாதிப்படையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஐ.நா.,வுக்கு அறிக்கை:புவி வெப்பமயமாகி வருவது குறித்து, 120 அமைப்புகளைச் சேர்ந்த 220 விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து, அதுகுறித்த அறிக்கையை ஐ.நா.,வுக்கு அளித்துள்ளனர். கடந்த 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினம் மற்றும் கடலோரப் பகுதிகளான கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பிரதிப் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று, இந்தக் குழு ஆய்வு நடத்தியது. வாழ்வாதாரம் பாதிப்பு:அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடலோரப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதில் பல ஆச்சர்யமான, அதேநேரத்தில் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. 1990-2100 வரையிலான காலத்தில், கடல் நீர் மட்டம், 9 செ.மீ. உயரத்தில் இருந்து, 90 செ.மீ., உயரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புத் தன்மையுடையதாக மாறும். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். நெல்,கரும்பு விளையும் நஞ்சை நிலங்களின் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படலாம். நாட்டின் மேற்கு கடற்கரையோர பகுதிகளான குஜராத்தின் கட்ச் மற்றும் மும்பை, தெற்கு கேரளா, கொங்கன் கடற்கரையோர பகுதிகள், அதிக பாதிப்புக்கு உள்ளாகும். கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி மற்றும் மகாநதி ஆகிய டெல்டா பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள நீர்ப்பாசன பகுதிகளுக்கும் ஆபத்து ஏற்படும். நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் கலாசார பகுதிகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பால், சில மாநிலங்களுக்கு குறிப்பிடத் தகுந்த விளைவுகள் ஏற்படும். ஆய்வில் தகவல்:நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் "டிஜிட்டல் இமேஜ் ப்ராஸசிங்' முறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், கடல் நீர் மட்டம், ஒரு மீட்டர் அளவுக்கு அதிகரித்தால், 4.2 ச.கி.மீ., அளவுக்கு, கடல் நீர் புகுந்து விடும் என்றும், இரண்டு மீட்டர் அளவுக்கு அதிகரித்தால், 42.5 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர் புகுந்து விடும் என்றும் தெரியவந்தது. அதேநேரத்தில், கொச்சியில் நடத்திய ஆய்வில், ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம் அதிகரித்தால், 169 ச.கி.மீ., அளவுக்கும், இரண்டு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம் அதிகரித்தால், 599 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர் புகுந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஜூன் 03, 2012

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகிறது ! ! !


(http://tnresults.nic.in/) உள்ளிட்ட இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். . . Wishing you all the Best........

டீசல்-கியாஸ் விலைகளை கண்டிப்பாக உயர்த்த பிடிவாதம்


புதுடெல்லி, ஜுன் 3 - டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த 31 ம் தேதி பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை உயர்த்தியாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ரங்கராஜன் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் தற்போது நிதி பற்றாக்குறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும். இதனால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. டீசல், சமையல் எரிவாயுவின் விலைகளை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. டீசல், கேஸ் விலைகளை கணிசமாக உயர்த்தினால்தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். இந்த முடிவும் ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.

சனி, ஜூன் 02, 2012

சென்னையில் இன்று முதல் மின்வெட்டு நேரம் ஒரு மணிநேரமாக குறைப்பு. ஜெயலலிதா


தமிழகத்தில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதையடுத்து சென்னையில் தினசரி ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் இனி மின்வெட்டு அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியனவும் முற்றிலுமாக நீக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநிலம் முழுவதும் மின்வெட்டு அமலில் உள்ளது. மின்சார தட்டுப்பாடு ஜூன் முதல் படிப்படியாக நீங்கும் எனவும், அதன் மூலம் மின்வெட்டு குறைக்கப்படும் எனவும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து முதல்வர் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின்வெட்டை படிப்படியாகக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மாநிலத்தின் மின் நிலைமை இப்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.அதுமட்டுமல்லாது, மே 10-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம், தனது முழு உற்பத்தித்திறனான 840 மெகாவாட் மின்னுற்பத்தியை தொடங்கி விட்டது.இந்தச் சூழ்நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சனிக்கிழமை (ஜூன் 2) முதல் தளர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது. உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியன முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. சென்னையில் வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு இரண்டு மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகதின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் இருந்து மூன்று நேரமாகவும் குறைக்கப்படும். இப்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியன விரைவில் செயல்படத் தொடங்கும். எனவே, இப்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இது குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் மின்வெட்டு குறைய வாய்ப்பு: மின்சார உற்பத்தியின் அளவைப் பொறுத்து, மின் வெட்டு செய்யப்படும் நேரம் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தின் ஒரு நாளைய மின்தேவை சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மின்னுற்பத்தி அளவு 10,400 மெகாவாட்டாக உள்ளது. எனவே மின் பற்றாக்குறை ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.கைகொடுக்கும் காற்றாலை: தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலமாக, சராசரியாக நாளொன்றுக்கு 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஓரளவு கைகொடுத்து வருகிறது.இப்போதைய நிலவரப்படி சுமார் ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்சார தட்டுப்பாடு இருக்கிறது. இனி வரும் மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையமும், மேலும் சில அனல் மின் நிலையத் திட்டப் பணிகளும் செயல்பாட்டுக்கு வரும்போது மின் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.எனவே, அடுத்த மாதத்தில் சென்னையில் மின்வெட்டு முற்றிலும் நீங்குவதற்கும், மாவட்டங்களில் மின்வெட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாகக் குறையவும் வாய்ப்புள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது


டெல்லி: நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, ஜூன் 01, 2012

லண்டனில் இந்திய மாணவன் கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி கைது


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இந்திய மாணவன் அனுஜ் பித்வே லண்டனில் அடையாளம் தெரியாத ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்திய மாணவன் கொல்லப்பட்டது லண்டனில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும், இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இன வெறி காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் பிரிட்டனை சேர்ந்த 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கியாரன் ஸ்டாபிள்டன் என்கிற அவர் ' தான் ஒரு மனநல நோயாளி' என போலிசாரிடம் தெரிவித்திருகிறார். அனுஜை கொலை செய்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை லண்டனில் இம்மாதம் 25-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அவரது பெற்றோர் லண்டன் சென்றுள்ளனர். இது குறித்து அனுஜின் குடும்பத்தினர் கூறியபோது: அனுஜ் கொல்லப்பட்ட பிறகு முதன்முறையாக லண்டன் வந்துள்ளோம். கொலையாளியின் வாக்குமூலத்தை நேரில் கேட்க வேண்டும் என வந்துள்ளோம். எங்கள் மகனை கொன்றவனை நேரில் பார்க்க உள்ளோம். இது மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். இந்த வழக்கு குறித்த தகவல்களை அறிய இந்திய ஊடகங்களும் லண்டன் ஊடகங்களும் ஆவலாக உள்ளன என தெரிவித்தனர்.

ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது. இனி நாடு முழுவதும் ஒரே கட்டணம். கபில்சிபல்


புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதால் ரோமிங் கட்டணம் நீக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். கிராமப்புற தொலைத்தொடர்பு அடர்த்தியை அதிகரிப்பதே புதிய ‌கொள்கையின் நோக்கம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தாராள கொள்கை பின்பற்றப்படும்.உற்பத்தி கேந்திரமாக இந்தியா மாற்றப்படும். புதிய கொள்கையில் மொபைல் போன்களுக்கான ரோமிங் கட்டணத்தை நீக்க பரிந்துரைக்கப்பட்ட் நிலையில்,நாடு முழுவதும் ஒரே எண்ணை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளவும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கபில் சிபல் மேலும் கூறினார்.

தானும் அழுது,அப்பா,அம்மா வையும் அழ வைத்துவிட்டு,இன்று முதன்முதலாக பள்ளிக்கு செல்லும் எல்லா குட்டிப்பாப்பாக்களுக்கும்,குட்டி பசங்களுக்கும் வாழ்த்துக்கள்..!!

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு..,

மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு ஆணையினை ஆந்திர உயர் நீதிமன்றம் 28.05.2012 அன்று ரத்து செய்தது. ”இந்த ரத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்போவதாக” மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ”சிறப்பு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்த குர்ஷித், அட்டர்னி ஜெனரலுடன் விவாதித்து,விரைவில் இதனை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். ”அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என ஆந்திரா நீதிமன்றம் தெரிவித்தது சரியானது” எனத்தெரிவித்த சல்மான் குர்ஷித், ”முஸ்லிம்களுக்கு மதரீதியாக ஒதுக்கீடு வழங்காமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு கோருகிறோம்” எனத் தெளிவுபடுத்தினார். சிறப்பு சலுகை பெறும் அளவிற்கு முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படாததாலும், மதச்சிறுபான்மையினர் அனைவரும் ஒரே இனக்குழுவினைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் ஆந்திர நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.