சனி, ஜூலை 28, 2012

"எமது சகோதரிகளின் கவனத்திற்க்கு !


"எமது சகோதரிகளின் கவனத்திற்க்கு ! நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidden Camera " பொருத்தப்பட்டுள்ளது என்பதை மறந்திடாதீர்கல், அக்கேமராக்கள் அநேகமானவை கடைகளில் நடைபெறும் களவுகளை பிடிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் சில காமுகர்களின் கடைகளில் நீங்கள் வாங்கும் உடைகளை அணிந்து பார்க்கும் "TRIAL ROOM " இலும் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் உடைகளை அணித்து பார்ப்பதற்க்கு முன்பதாக குறித்த அறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது இருக்கின்றதா என்பதை அவதானியுங்கள், உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்...

வெள்ளி, ஜூலை 27, 2012



Ramadan Scraps
Ramadan orkut scraps, wishes

Orkut Scraps | Eid Mubarak

பள்ளி சிறுமி பலி எதிரொலி தமிழகம் முழுக்க வாகனங்களில் சோதனை:


பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் ஆவேசத்துடன் கூறி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்தார். இதையடுத்து, சிறுமியை பலி வாங்கிய பள்ளி பஸ்சுக்கு தகுதி சான்று வழங்கிய தாம்பரம் ஆர்டிஓ அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கைது செய்யப்பட்டார். அவரும் ஆர்டிஓ பாடப்பசாமியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். வாகனங்கள் நல்ல முறையில் உள்ளதா, பிரேக் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா, அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்கிறார்களா என்று சோதனை நடத்துகின்றனர். விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் இன்று காலை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களுக்கு தலா ரூ.750 அபராதம் விதித்தனர். மாணவர்களையோ, பொதுமக்களையோ அதிக அளவில் ஏற்றிச் சென்றால் ஆட்டோ பர்மிட் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

வெள்ளி, ஜூலை 13, 2012

பொது இடங்களில் அநாகரீகமாக நடக்கும் காதலர்கள் கைது? தமிழக போலீஸ் அதிரடி.


பூங்கா, கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வரும் காதலர்கள், இளம் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், அநாகரீகமாக நடந்து கொண்டு, சங்கடங்களை ஏற்படுத்துகின்றனர். இந்த இடங்கள் தவிர, பஸ்நிலையம், ரெயில் நிலையம், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களிலும் அத்துமீறல்கள் நடக்கின்றன. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை எச்சரிக்கவும், தேவை ஏற்பட்டால் கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து, நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக அன்பை வெளிப்படுத்திய 500 ஜோடிகளை போலீசார் பிடித்தனர். அவர்களில் சிலர் மீது, பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்ற செயல்களை வளரவிடாமல் தடுக்க, தங்களது நடவடிக்கையை இறுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.

வியாழன், ஜூலை 12, 2012

குடிபோதையில் பெண்ணின் பின்பக்கத்தை கிள்ளியவருக்கு 6 மாதம் ஜெயில்.


துபாயில் ஒரு பாரில் குடிக்க வந்த பெண்ணின் பின்பக்கத்தைக் கிள்ளியதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த நபருக்கு அந்த ஊர் ஜட்ஜ் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டார். இதைக் கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஸ்டீவன் ஷெரீப். வயது 43 ஆகிறது. இவர் ஒரு பிசினஸ்மேன். துபாயில் தங்கியுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு பாருக்குப் போயுள்ளார். அங்கு ஏராளமான பேர் கோப்பையுடன் இருந்துள்ளனர். லேசான வெளிச்சம் மட்டுமே இருந்துள்ளது அந்த பாரில். அப்போது 23 வயதான இளம் பெண் ஒருவரை நெருங்கிய ஸ்டீவன், அந்தப் பெண்ணின் புட்டத்தைப் பிடித்துக் கிள்ளியதாக கூறப்படுகிறது. ஷாக் ஆகிப் போன அந்தப் பெண் கத்தியுள்ளார். இதையடுத்து அவருடன் வந்திருந்த அவரது ஆண் நண்பருக்கும், ஸ்டீவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதன் இறுதியில் ஸ்டீவனை, அந்தப் பெண்ணின் நண்பர் சரமாரியாக தாக்கி விட்டார். இறுதியில் போலீஸார் வந்து ஸ்டீவனைக் கைது செய்தனர். வழக்குத் தொடரப்பட்டது. கோர்ட்டில் நிறுத்தப்பட்டார் ஸ்டீவன். கோர்ட்டில், பெண்ணின் புட்டத்தை கிள்ளியதற்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கேட்டதும் ஸ்டீவனும், அவரது மனைவி பெடினாவும் கடும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஸ்டீவன் கூறுகையில், இது கேலிக்கூத்தாக உள்ளது என்றார் அவர். அவரது மனைவி பெடினா கூறுகையில், எனது கணவருக்கு ஒரு பெண்ணை எப்படிக் கவருவது என்று கூட தெரியாது. அவ்வளவு அப்பாவி அவர். அவருக்குப் போய் இப்படி ஒரு தண்டனையா என்று குமுறினார். ஆனால் ஷெரீப் கிள்ளியதாக கூறப்படும் பெண் கூறுகையில், எனது இடது புட்டத்தை அழுத்தமாக கிள்ளினார். மேலும் எனது இரு கால்களுக்கும் இடையே கையை விட்டு தடவினார் என்று கூறினார். அதேசமயம், இதைச் செய்தவர் ஷெரீப் என்று அவர் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. அப்போது அந்த இடத்தில் ஷெரீப்தான் இருந்தார் என்பதால் அவர் மாட்டியுள்ளார். கடந்த 7 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார் ஷெரீப். இவருக்கும், பெடினாவுக்கும் திருமணமாகி 14 வருடங்களாகிறதாம். இவரது மனைவி டென்மார்க்கைச் சேர்ந்தவர். கோபன்ஹேகனில் இவர் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை தனது கணவரைப் பார்க்க துபாய் வந்து செல்கிறார். 6 மாத சிறைத் தண்டனை முடிந்ததும் ஷெரீப் அவரது நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய விரும்புவதாக கூறிய ஷெரீப், ஆனால் அதற்கான செலவை தன்னால் சமாளிக்க முடியாத அளவு பொருளாதார நிலை இருப்பதாக சோகத்துடன் கூறினார்.

திங்கள், ஜூலை 09, 2012


ஆக்ராவிலுள்ள தாஜ்மகால், டில்லி செங்கோட்டை, இந்தியா கேட், காஷ்மீர் தால் ஏரி உட்பட, 98 சுற்றுலாத் தலங்களை, சுத்தம் மற்றும் சுகாதாரம் நிறைந்த பகுதிகளாக மாற்ற, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.பல்வேறு நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு, 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள், தற்போது வருகின்றனர். இதை, இரு மடங்காக அதிகரிக்க, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கூறியதாவது:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தில், இரு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. முதல் திட்டம், நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது.இரண்டாவது, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு, தரமான சேவைகளை வழங்குவது என்பதாகும். இதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அதிகளவில் வரும் இடங்களில், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, அப்பகுதிகளில் சுகாதாரம் நிறைந்த சூழலை உருவாக்குவது, 24 மணி நேரமும், அப்பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில், சிறப்பு கவனம் செலுத்தப்படும். தலைநகர் டில்லியில், இந்தியா கேட், கன்னாட் பிளேஸ், சாந்தினி சவுக், தாமரை கோவில், ஜந்தர்மந்தர், ராஜ்காட், புரானா குல்லா, சப்தர்ஜங் டோம்ப் என, 14 சுற்றுலாத் தலங்கள் உள்ளன.இவை தவிர, ஆக்ராவில், தாஜ்மகால், காஷ்மீரில் தால் ஏரி, ஒடிசாவில் கோனார்க், கேரளாவில் கோவளம் கடற்கரை என, 98 பகுதிகள் உள்ளன. இவற்றை எல்லாம், சுத்தம், சுகாதாரமாக வைத்திருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணியில், பொதுத் துறை நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும், சேர்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார்.

சனி, ஜூலை 07, 2012

பள்ளி மாணவிகளை ஏமாற்றும் இளைஞர்கள்!!!


பள்ளி மாணவிகளை ஏமாற்றும் இளைஞர்கள்! காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.] நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர். நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா? இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒரு விதபதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர். விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூஷன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள். பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள். அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா…? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள். காலையில் பெற்றோர் வந்து பஸ் அனுப்பி வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள். உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சில வக்ககிர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள். படிப்பு சுமையே மாணவிகளை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம். அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.

வெள்ளி, ஜூலை 06, 2012

சிங்கள வீரர்களை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசுக்கு திடீர் சிக்கல்.


தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக தொடர்ந்து மவுனம் காக்கப்படுகிறது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமல்லாது திமுக தலைவர் கருணாநிதி,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, இலங்கை வீரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதிமுகவினர் நேற்று தாம்பரம் விமானப்படை தளம் அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர்.அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளபோதிலும்,மத்திய அரசு இது விஷ்யத்தில் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. மேலும் சார்க் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த அடிப்படையிலேயே இலங்கை வீரர்கள் 9 பேர் ஒன்பது மாத காலத்திற்கு பயிற்சி பெறுவதற்காக இங்கு வந்துள்ளனர்.அத்துடன் அவர்கள் மட்டுமல்லாது சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள இதர நாடுகளை சேர்ந்த வீரர்களும் இந்த பயிற்சிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் இலங்கை வீரர்களை மட்டும் திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பினால்,மற்ற நாடுகளில் இருந்து வந்த வீரர்களுக்கு மட்டும் பயிற்சி அளித்தால் பிரச்னை வரும் என்று கூறப்ப்டுகிறது. ஆனால் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பாவிட்டால்,தாம்பர விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மேலும் பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று எச்சரித்துள்ளன. ஆனால் மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவிலலை. அதே சமயம் தாம்பர விமானப்படை தளத்தை சுற்றி முன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதன், ஜூலை 04, 2012

தாய்லாந்தில் சுற்றுலா பஸ் விபத்து: 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் சாவு


சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ்ஸின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பஸ் டயர் வெடித்ததில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீஸôர் தெரிவித்தனர். இங்குள்ள சூரத் தானி மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். இங்குள்ள கோ பாங்கான் எனும் தீவிற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இறந்த மற்றவர்களில் 8 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்ளூர் போலீஸôர் தெரிவித்தனர்.

செவ்வாய், ஜூலை 03, 2012

Where is Muslim Ummah ? Where is Human rights ?? Where is Media ??? Please Pray for our brothers in Burma. & please share this pic as much as u can. :


+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!


டெல்லி: உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர். அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம். இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து. மின் தட்டுப்பாடு அதிகரிக்குமா?


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பு நிலக்கரி மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்களில் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரியை துறைமுகத்தில் உள்ள கரிதளத்தில் இருந்து நேரடியாக அனல் மின்நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் நிலக்கரி, அனல் மின் நிலையத்தில் உள்ள பிரைமரி கிரஷர் ஹவுஸ் மற்றும் செகண்டரி கிரஷர் ஹவுஸ் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு நிலக்கரி உடைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த யூனிட்டில் உள்ள 47, 48வது பெல்ட்களில் திடீர் உராய்வு காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி பிரைமரி கிரஷர் ஹவுஸ் வரையிலும் பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் மின் மோட்டார்கள், நிலக்கரி ஆகியவை எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீ விபத்தில் கன்வேயர் பெல்ட்கள் மற்றும் மின் மோட்டார்கள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன. செகண்டரி கிரஷர் யூனிட்டை பயன்படுத்தி மின் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்’’ என்றனர்.