செவ்வாய், நவம்பர் 20, 2012

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்பாட்டம்!


பாலஸ்தீன புமியில் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அப்பாவி பெண்களையும்,குழந்தைகளையும் கொன்று குவித்து வருகின்றதுஇந்த இம்மாபாதக செயலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றது.அதை தொடர்ந்து கோவையில் 19ம் தேதி மாலை 5 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில்தெற்கு பகுதி தலைவர் ஏ.சானவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எம்.ஜெய்லாபுதீன் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் கோட்டை பகுதி தலைவர் சாகுல் நன்றியுரை நிகழ்த்தினர். இதில் 100 க்கு மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

நல்லா இருக்குடா உங்க நியாயம்...


"மும்பையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலைசெய்தது மட்டுமில்லாமல் தன்னுடைய "சாம்னா"என்ற பத்திரிக்கையில் முஸ்லீம் களை பற்றியும் வட இந்தியர்களை பற்றியும் தினம்,தினம் நச்சுக்கருத்துக்களை பரப்பிவந்தவன் கொடுங்கோலன் தாக்கரே. எத்தனையோ வழக்குகள் அவன் மீது இருந்தும் அவன் தானாக சாகும் வரை அவனுடைய முடியைக்கூட அசைக்க இவனுங்களுக்கு வக்கில்லை.ஆனால் ஒரு தனிமனிதன் இறந்ததிர்க்கு ஏன் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்று எழுதியதற்கு 2 பெண்களுக்கு சிறை. நல்லா இருக்குடா உங்க நியாயம்...

ஃபலஸ்தீன் மீது இஸ்ரேலின் கொடூர தாக்கதல்-டெல்லி இஸ்ரேல் தூதரகம் முற்றுகை


ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் கண்டனப் பேரணி நடத்தினர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஸா, ஜெ.என்.யூ ஸ்டுடண்ட்ஸ் யூனியன், எ.ஐ.பி.டபிள்யூ.எ, எ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.டி.எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் இந்த கண்டனப்பேரணி நடைபெற்றது. அவரங்கசீப்-ஜன்பத் சாலை சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி, இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி தடைசெய்தது. இஸ்ரேல் மீதான கடும் எதிர்ப்பால் கொந்தளித்த மக்கள் போலீசின் தடுப்புகளை மீற முயன்ற போது தலைவர்கள் தலையிட்டு தடுத்தனர். நிரபராதிகளின் இரத்தத்தை உறியும் புற்றுநோய்தான் இஸ்ரேல் என்றுஎன்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப் கூறினார். இந்த போராட்டம் அடையாளம் மட்டுமே. இஸ்ரேல் கூட்டுப்படுகொலையை தொடர்ந்தால், கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜெ.என்.யு) மாணவர் யூனியன் தலைவர் லெனின் கூறினார். நிரபராதிகளான ஃபலஸ்தீன் மக்களை கொலை செய்வதை நிறுத்தும் வரை இத்தகைய போராட்டங்கள் உலகமெங்கும் தொடரும் என்று ஜெ.என்.யு பேராசிரியர் கமால் மித்தர் கூறினார். இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்றும், சுதந்திர ஃபலஸ்தீனை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஞாயிறு, நவம்பர் 18, 2012

பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த குரல்கொடுக்க வேண்டும்!


சர்வதேச நாடுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை! எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் இ. அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களை மட்டுமல்லாது அப்பாவி பாலஸ்தீன மக்களையும், குழந்தைகளையும் குறி வைத்தே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியில் அத்துமீறி இஸ்ரேல் தொடர்ந்து தரைவழித் தாக்குதலை நடத்தி பாலஸ்தீன மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. பாலஸ்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிர்காலத்தில் பெரும் மோதல்களுக்கு வழிவகுக்கும். சர்வதேச சட்டங்களையும், மனித நேய நெறிமுறைகளையும் மீறி இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக்கூடிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பாலஸ்தீன மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் போராட வேண்டும். பயங்கரவாத செயல்களை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்தால், மிகவும் மோசமான விளைவுகளை இது சர்வேதேச அளவில் ஏற்ப்படுத்தும் என நான் எச்சரிக்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சனி, நவம்பர் 17, 2012

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!


அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும். இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு - பிளஸ் 2 அரையாண்டு தேர்வு 19-ல் தொடக்கம்


சென்னை, நவ. 17 - பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் வரும் 19 ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் இப்போது அரையாண்டு தேர்வுக்கான பொதுவான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19 ம் தேதி தொடங்கி ஜனவரி 7 ம் தேதி வரையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 19 ம் தேதி தொடங்கி ஜனவரி 10 ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். மொழிப்பாடங்கள் மற்றும் பிரதான பாடங்களுக்கு இடையே இந்த ஆண்டு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகுதான் விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு இந்த இரண்டு வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் தேர்வுகளுக்கு இடையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில மாதிரி தேர்வாக அமையும் வகையில் படிக்க கதுந்த கால அவகாசம் அளித்து நடத்தப்படுகிறது. இந்த கால அவகாசத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தராதேவி கேட்டுக் கொண்டுள்ளார். அரையாண்டு தேர்வுக்கு 11 வேலை நாட்கள் தேவைப்படும். போதுமான வேலை நாட்கள் தேர்வுக்கு கிடைக்காததால் இடையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 10 ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: 19 ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், 20 ம் தேதி மொழிப்பாடம் 2 ம் தாள், 21 ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22 ம் தேதி ஆங்கிலம் 2 ம் தாள், ஜனவரி 2 ல் கணிதம், 4 ம் தேதி அறிவியல், 7 ம் தேதி சமூக அறிவியல் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: 19 ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், 20 ம் தேதி மொழிப்பாடம் 2 ம் தாள், 21 ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22 ம் தேதி ஆங்கிலம் 2 ம் தாள், ஜனவரி 2 ல் கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரின் அண்டு டயக்ட்ரிக்ஸ், ஜனவரி 3 ம் தேதி வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல், ஜனவரி 4 ம் தேதி இயற்பியல், பொருளியல், ஜனவரி 7 ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 8 ம் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, ஜனவரி 9 ல் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்சுடு லாங்வேஜ் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, தமிழ், ஜனவரி 10 ல் உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு !


சென்னை: 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர். நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம். முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்.

ஞாயிறு, நவம்பர் 11, 2012

சென்னையில் தரைதட்டிய கப்பல் மீட்கப் பட்டது!


சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பல் இன்று மீட்கப் பட்டது. நிலம் புயல் காரணமாக சென்னையில் பிரதீபா காவேரி என்ற கப்பல் தரைதட்டியது. இதில் இருந்து தப்பிக்க முயன்ற மாலுமிகளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இக்கப்பலை மீட்க இந்திய அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்த பலனுமில்லாமல் இருந்தது, இந்நிலையில் இன்று ஏழாவது முறையாக மேற்கொள்ளப் பட்ட முயற்சியில் கப்பல் ஆழ்கடலுக்குள் சென்றது. இதனால் மீட்புப் பணியில் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் மீட்புப் பணியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். கப்பல் தரைதட்டிய பகுதி சுற்றுலாத் தலம்போல் காட்சி தருகிறது.

வெள்ளி, நவம்பர் 09, 2012

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லட்சியத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் – பாப்புலர் ஃப்ரண்ட் மாநாட்டில் உறுதி!


திருவனந்தபுரம்:போராட்ட வீரியத்தின் சக்தியை பிரகடனப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு திருவனந்தபுரத்தில் புதிய வரலாற்றை எழுதியது. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை அவதூறுகளின் அலையில் மூழ்கடித்துவிட முடியாது என்று மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளம் உரக்க தெரிவித்தது.’பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ என்ற தலைப்பில் தேச முழுவதும் கடந்த ஒருமாதமாக நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று(08/11/2012) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு நடந்தது.பாசிச சிந்தனை மையத்தில் உருவெடுத்து உளவுத்துறையின் ஒப்புதலுடன் குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பி வரும் அவதூறு பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களின் உரைகளும், மக்களின் பங்களிப்பும் எடுத்தியம்பியது. திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் ஆரம்பித்த மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைத்து உரையாற்றினார்.அவர் தனது உரையில் கூறியது:“சமநீதிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்துவதற்குமான போராட்டத்தில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு போதும் பின்வாங்காது. முஸ்லிம்களை சக்திப்படுத்துதல் மற்றும் சமநீதிக்கான சமரசம் இல்லாத போராட்டத்தின் காரணமாகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த இயக்கத்திற்கு எதிராக சாட்டப்படும் எந்த குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இயக்கத்தின் கொள்கைகள், சித்தாந்தம், பணிகள் ஆகியவற்றில் எவ்வித தவறுகளை கண்டுபிடிக்க முடியாததால் அவதூறு பிரச்சாரங்களின் மூலமாக களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.தேசப்பாதுகாப்பு என்ற பெயரால் இவ்வியக்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவோருக்கு நாட்டில் நிகழ்ந்த ஏதேனும் நாசவேலைகளில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், குண்டுவெடிப்புகள், கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தி மக்களுக்கும், தேசத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பாசிசத்தை பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்க்கிறது.சதித்திட்டங்களையும், அவதூறுப் பிரச்சாரங்களையும் முறியடித்து சமநீதியின் அடிப்படையில் புதியதொரு இந்தியாவை உருவாக்க அனைவரும் போராடவேண்டும்.” இவ்வாறு முஹம்மது அலி ஜின்னா கூறினார்.இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த லோக்ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தவிர்க்க முடியாத காரணங்களால் நேரடியாக கலந்துகொள்ள இயலாததால் அவர் தொலைபேசி வாயிலாக மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டிற்கு கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார்.

27 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 121 பாலங்கள் கட்டப்படும்


சென்னை, நவ.- 9 - தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் பாலங்கள் கட்டமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் பல்வேறு கட்டமைப்புகளில் சாலை உட்கட்டமைப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அங்கு அமைந்துள்ள ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பினைக் கொண்டே கணிக்க இயலும். சாலைப் போக்குவரத்து வசதி சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தால் தான் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும். வளர்ச்சித் திட்டங்கள் செயல் வடிவம் பெற சாலைப் போக்குவரத்து முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும், பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 3,793 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் மற்றும் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதற்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, 340.68 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மேம்பாலங்கள், பாலங்கள், சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2,262 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள். சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மிகவும் முக்கியமானது பாலங்கள் அமைப்பது ஆகும். ஆறு மற்றும் nullர்பரப்புகளை சுலபமாக கடந்து சீரான வாகனப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கு அவற்றின் குறுக்கே பாலங்கள் அமைக்கப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 121 பாலங்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், கடலூர் மாவட்டத்தில் 8 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 பாலமும், வேலூர் மாவட்டத்தில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 பாலமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், சேலம் மாவட்டத்தில் 31 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 பாலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 5 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், கரூர் மாவட்டத்தில் 15 கோடியே 95 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், திருப்nullர் மாவட்டத்தில் 7 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9 கோடியே 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 14 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பாலங்களும், அரியலூர் மாவட்டத்தில் 5 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 11 பாலங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கோடியே 85 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 3 பாலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கோடியே 54 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பாலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், மதுரை மாவட்டத்தில் 8 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 19 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 பாலங்களும், தேனி மாவட்டத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கோடியே 64 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 8 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 5 கோடியே 64 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும் என மொத்தம் 27 மாவட்டங்களில் ரூ.235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்கள் கட்டப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு, மக்கள் மற்றும் பொருட்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சுலபமாகவும், விரைவாகவும், சென்றடைவதற்கு வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், நவம்பர் 08, 2012

இன்டிகோ விமானத்தில் பயங்கரம்... விமான ஊழியரைத் தாக்கி ரகளை செய்த பயணியால் பீதி


டெல்லி: மும்பை-டெல்லி இடையிலான இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வன்முறையில் இறங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டு விட்டது. புதன்கிழமையன்று, மும்பையிலிருந்து டெல்லிக்கு இந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்குக் கிளம்பியது. விமானம் வானில் பறக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன நிலையி்ல 40 வயதான முர்சலின் ஷேக் என்ற திடீரென முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தார். அனைவரையும் மிரட்டும் வகையில் அவர் பேசினார். இதையடுத்து விரைந்து வந்த விமான ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களை மீறி நடந்த அவர் காக்பிட்டுக்குள் நுழைய முயற்சித்தார். மேலும், காக்பிட் கதவை உடைக்கவும் முயன்றார். அதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் அவர் தாக்கினார். ஒரு ஏர் ஹோஸ்டஸ் கன்னத்தில் பளார் என அறைந்தார். மேலும் விமானத்தை தகர்த்து விடுவேன் என்றும் அவர் மிரட்டினார். இதையடுத்து பயணிகள் சிலர் எழுந்து வந்து விமான ஊழியர்களுடன் இணைந்து அந்த பயணியை தடுத்து நிறுத்தி அமர வைத்தனர். அந்த பயணி டென்ஷனில் இருந்ததாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஆயுதம் எதையும் வைத்திருந்ததாக தெரியவில்லை. இந்த சண்டைக்காட்சியை ஒரு பயணி தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் அந்த முரட்டுப் பயணி, விமான ஊழியர்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை இன்டிகோ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் முரட்டுத்தனமாக நடந்த பயணியைக் கைது செய்து கொண்டு சென்றனர். அவர் மீது பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது, கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஷேக் மும்பையைச் சேர்ந்தவர். அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திங்கள், நவம்பர் 05, 2012

தீபாவளி : 6,859 சிறப்பு பஸ்கள்


தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6,859 சிறப்பு பேருந்துகளை இயக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்களை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வி.செ.பாலாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி 768, 10ஆம் தேதி 633, 11ஆம் தேதி 543, 12ஆம் தேதி 884 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை நீங்கலாக, மாநிலம் முழுவதும் இருந்து 9ஆம் தேதி 925, 10ஆம் தேதி 940, 11ஆம் தேதி 977, 12ஆம் தேதி 1189 பேருந்துகள் என மொத்தம் 6,859 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பபட உள்ளன. தீபாவளிக்குப் பிறகு ஊர் திரும்ப வசதியாக 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.300 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 5 முதல் 13ஆம் தேதி வரை சென்னையின் இதர பகுதிகளில் இருந்து தியாகராயநகர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து 044 - 24794709 என்ற எண்ணில் முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, நவம்பர் 02, 2012

வங்காள விரிகுடாவில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் சென்ற படகு மூழ்கியது! – 122 பேரை காணவில்லை !


டாக்கா:பங்களாதேஷ் கடல் எல்லையை ஒட்டிய வங்காள விரிகுடாவில் பயணிகள் படகு மூழ்கியதில் 122 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்தும் கலவரத்தால் புலன்பெயர்ந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்றுக் கொண்டிருந்த படகுதான் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.மீனவ தொழிலாளிகள் மீட்ட ஆறுபேரில் ஒருவர் நடந்த சம்பவத்தை வங்காளதேச கடலோர படையிடம் விவரித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி ஆட்களை மலேசியாவுக்கு கொண்டு செல்லும் படகுதான் விபத்தில் சிக்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 70 பேர் செல்லும் படகில் 128 பேர் ஏற்றப்பட்டுள்ளனர். படகின் அடிப்பகுதி பாறையில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் இறந்த உடல்களை கண்டதாக மீனவ தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தரைதட்டிய கப்பல்: ஹெலிகாப்டரில் மீட்பு நடவடிக்கை


சென்னை, நவ.2 - வங்கக் கடலில் உருவான `நீலம்' புயல் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை நெருங்கிய போது காற்றின் வேகம் பலமாக இருந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை துறைமுகம் வந்த கப்பல்கள் ஆங்காங்கே நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. மொத்தம் 23 கப்பல்கள் நின்றிருந்தன. மும்பையில் இருந்து விசாகபட்டினம் துறைமுகம் செல்லும் எம்.டி. `பிரதீபா காவேரி' என்ற எண்ணை கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. புயலுக்கு முன்பே வந்த இந்த கப்பல் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி தர வேண்டி இருந்ததால் சென்னையில் இருந்து புறப்படாமல் நின்றிருந்தது. இந்த நிலையில் `நீலம்' புயல் உருவானதால் துறைமுகத்தின் வெளியே பெசன்ட் நகர் கடற்கரை அருகே நின்றிருந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று சூறாவளி காற்று பலமாக வீசியதால் `பிரதீபா காவேரி' கப்பல் நகர்ந்து தரை தட்டியது. இதனால் கப்பல் கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு தள்ளாடிய படியே 5 கி.மீ. தூரம் சென்று பட்டினப்பாக்கம் தாண்டி கலங்கரை விளக்கத்தின் அருகே நின்றது. அப்போது கப்பலில் 37 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 21 பேர் உயிர் தப்புவதற்காக கப்பலில் இருந்த 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு செல்ல முயன்றனர். அவர்கள் 'லைப் ஜாக்கெட்' என்ற உயிர் காக்கும் நீச்சல் உடையும் அணிந்து இருந்தனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் கடல் அலை 1 மீட்டர் தூரம் எழுந்ததால் படகுகள் தத்தளித்தது. எதிர்பாராத விதமாக 2 படகுகள் கவிழ்ந்துவிட்டன. அதில் இருந்து கப்பல் ஊழியர்கள் `லைப் ஜாக்கெட்' உதவியுடன் கடலில் நீந்தியவாறு தத்தளித்தனர். இதை கரையில் நின்று வேடிக்கை பார்த்த மீனவர்கள் துணிச்சலுடன் படகுகளில் சென்று 16 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஆனந்த் மோகன் தாஸ் மயங்கிய நிலையில் இருந்தார். அவரையும் மற்ற 15 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆனந்த் மோகன்தாஸ் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரை ஒதுங்கிய கப்பலில் கேப்டன் உள்பட 15 பேர் கப்பலிலேயே இருந்தனர். இரவில் கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பாக காணப்பட்டதாலும் மழை பெய்ததாலும் அவர்களை மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் உயிரை கையில் பிடித்தபடி கப்பலிலேயே விடிய விடிய தவித்தனர். அதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு கடலோர காவல் படை ஹெலிகாப்டரில் மீட்பு படையினர் ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் சென்று கப்பலில் தவித்த கேப்டன் உள்பட 15 பேரையும் மீட்டனர். அவர்களை ஹெலிகாப்டரில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேன்களில் 15 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அடையாறு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே கப்பல் தரை தட்டி கரை ஒதுங்கியதும் படகுகளில் உயிர் தப்ப முயன்ற 21 பேரில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். மீதி 5 பேர் மாயமாகிவிட்டனர் என்று தெரிய வந்தது. அவர்கள் பெயர் ராஜ்கமித்கர், ருசத் ஜாதவ், நிரஞ்சன், கிருஷ்ணாகுரில், ஜோமன் ஜோசப். இவர்கள் அனைவரும் படகு கவிழ்ந்தபோது கடல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்கள். அவர்கள் 'லைப் ஜாக்கெட்' அணிந்து இருந்ததால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மாயமான 5 பேரையும் முதலில் படகில் சென்று தேடினார்கள். ஆனால் கடல் சீற்றம் தணியாததால் படகில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலையில் கடலோர காவல் படை ஹெலிகாப்டரில் சென்று 5 ஊழியர்களையும் கடலில் தேடி வருகிறார்கள். சிறிய படகில் அதிகம் பேர் தப்ப முயன்றதால் கவிழ்ந்தது: கூடுதல் டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல் மெரீனாவில் தரை தட்டிய கப்பல் ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:​ கப்பல் தரை தட்டி நின்றதும் அது இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று கரை ஒதுங்கினால் ஆபத்து என்று கப்பல் கேப்டன் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கப்பல் ஊழியர்கள் 36 பேரும் உயிருக்கு பயந்து தப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். கப்பலில் ஆபத்து காலத்தில் உயிர் தப்ப 2 படகு இருந்தது. அதில் அனைவரும் செல்ல முடியாது என்பதால் ஒரு படகில் 15 பேரும், மற்றொரு படகில் 16 பேரும் ஏறி இருக்கிறார்கள். படகில் அவர்கள் அமர்ந்து இருந்த நிலையில் கிரேன் மூலம் கடலில் இறக்கப்பட்டது. படகுகள் தரையை நோக்கி வரும் போது கடல் சீற்றம் காரணமாகவும், ஒரே படகில் அதிகம் பேர் ஏறியதாலும் தாங்க முடியாமல் கவிழ்ந்து விட்டது. கடலில் தத்தளித்த 16 பேரும் அபயக்குரல் எழுப்பினர். கரையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த மீனவர்கள் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். மேலும் 5 பேரை காணவில்லை. அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்து இருப்பதால் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் அவர்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்களா? என்று தேடி வருகிறோம். மீனவ கிராமங்களும், கடலோர காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து 5 பேரையும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நீலம் புயல் கரையை கடப்பதால் சரக்கு கப்பல்களை நடுக்கடலுக்கு செல்லுமாறு துறைமுக அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் பிரதீபா காலோறு கப்பல் நடுக்கடலுக்கு செல்ல முயன்றபோதுதான் கடல் சீற்றம் காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்டதாக ஒரு தகவலும், கப்பலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் கப்பலை நடுக்கடலுக்கு செலுத்த முடியவில்லை என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதுபற்றி முழு விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 174 மீட்டர் ளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பலில் சுமார் 8 ஆயிரம் டன் எண்ணை பொருட்களை ஏற்றிச் செல்லலாம். இந்த கப்பல் 1981​ல் ஜப்பானில் கட்டப்பட்டது. தற்போது 31 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் இதன் இயந்திரங்கள் அபாய நிலையை சமாளிக்கும் திறன் இழந்து விட்டதா? என்பது குறித்தும், கப்பலை அப்படியே பத்திரமாக இழுக்க முடியுமா? அல்லது உடைத்துத்தான் எடுக்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆய்விற்கு பிறகே கூற முடியும் என கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2011​ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தை தானே புயல் தாக்கியபோது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஓ.எஸ்.எம். அரேனா என்ற கப்பல் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. ஆனால் உடனடியாக இழுவைக் கப்பல்கள் மூலம் அந்த கப்பல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.