திங்கள், ஆகஸ்ட் 18, 2014

ஷார்ஜாவில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த இந்தியர்.. காயத்துடன் உயிர் தப்பினார்


ஷார்ஜா: துபாயின் ஷார்ஜா பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ் வாலிபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவின் அல்புத்தைனா பகுதியில் குடும்பத்தாருடன் வசிக்கும் 19 வயது வாலிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடனும், உடலின் சில பகுதிகளில் எலும்பு முறிவுடனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர், அபாயகட்டத்தை கடந்து உடல்நிலை தேறி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வாலிபர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.NEWS24X7

மயிலாடுதுறை அருகே 2 முஸ்லிம் பெண்கள் கடத்தல் : கத்தியை காட்டி 35 பவுன் கொள்ளை....!!


நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர். மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர நல்லுர் செல்கிறோம் என்று சொல்ல இவர்களை மிரட்டியவாறு கார் சிதம்பரம் சென்றது. கார் மயிலாடுதுறையை தாண்டியபோது இன்னும் இரண்டுபேர் காரில் கத்தியுடன் ஏறி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை சிதம்பரம் கடத்தி சென்று அவர்கள் இருவருடமிருந்த 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு சிதம்பரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து சோழசக்கர நல்லுர் வந்து பின்னர் மயிலாடுதுறையில் காவல்நிலையத்தில் புகார் செய்துயுள்னர். காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்வதும், அறிமுகம் இல்லாத கார் மற்றும் வேன்களில் பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று... இது ஓர் விழிப்புணர்வு பதிவு, அதிகப்படியாக Share செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்... NEWS24X7

செவ்வாய், நவம்பர் 12, 2013

பிலிப்பைன்ஸ் டக்லோபான் நகரில் மீண்டும் புயல், மழை


பிலிப்பைன்ஸின் டக்லோபான் நகர் மீண்டும் கடும் புயற்காற்றுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த வாரம் வீசிய ஹையான் பெரும்புயலினால் தாக்கப்பட்டு கடும் சேதங்களை எதிர்கொண்ட அந்த நகர் மீண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இப்போது வீசியுள்ள கடும் புயல் மேலும் துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டக்லோபான் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து, இடிபாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அந்த நகரின் விமான நிலையத்துக்கு சென்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். அந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது என்றும், அவற்றை பெற்றுக்கொள்ள விரக்தியான நடவடிக்ககளில் மக்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார். உணவுகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கூட்டத்தினர் சூறையாடுகின்றனர் எனவும், மக்கள் ஆத்திரமடைய ஆரம்பித்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உதவிகள் எப்போது வந்து சேரும் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியாத சூழலே அங்கு நிலவுகிறது. எனினும் உதவிப் பொருட்களை ஏற்றி டக்லோபான் நகருக்கு செல்லும் வாகனங்களுக்கு இப்போது துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

திங்கள், நவம்பர் 11, 2013

பிலிப்பைன்சில் புரட்டிப் போட்ட ‘ஹையான்’ புயல் இன்று வியட்நாமைத் தாக்கியது


ஹனாய்: பிலிப்பைன்ஸ் தீவை நிலை குலையச் செய்த ‘ஹையான்' புயல் இன்று காலை வியட்நாமைத் தாக்கியது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதியில் கடந்த 8ம் தேதியன்று ஹையான் புயல் சுமார் 315 கி.மீட்டர் வேகத்தில் தாக்கியது. புயலில் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1200 பேர் பலியாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், புயலில் சிக்கி 10 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்ட போதும் இவ்வளவு பேர் பலியானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப் பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைவதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளது. இதன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது. தனது வரலாற்றிலேயே பிலிப்பைன்ஸ் சந்தித்திருக்கும் மிக மோசமான புயல் இதுவென கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் தனது கோர முகத்தைக் காட்டிய ஹையான் புயல் தற்போது தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி செல்வதாகவும் தொடர்ந்து சீனாவை தாக்கப்போவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சீனா ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், வியட்நாம் நாட்டையும் ஹையான் புயல் தாக்கியுள்ளது. இன்று அதிகாலையில், வடக்கு வியட்நாமில் 'ஹையான்' புயல் கரையைக் கடந்தது. இதனால், தலைநகர் ஹனோயில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கன மழையும் பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 6 லட்சம் மக்கள் அபாயகரமான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல் குறித்து மிகவும் கால தாமதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தலைநகர் ஹனோய் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வியட்நாம் சேத விபரங்கள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

ஞாயிறு, நவம்பர் 10, 2013

கிழக்கு ஜப்பானை மறுபடியும் தாக்கிய 5.5 ரிக்டர் நில நடுக்கம்:புக்குஷிமாவும் குலுங்கியது


ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜப்பானை 5.5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் காலை 7.37 am இற்குத் தாக்கியுள்ளது. இதனால் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதுடன் முன்னர் சுனாமி தாக்கிய ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையிலும் அதிர்ச்சிகள் உணரப்பட்டதாகவும் ஆயினும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் குறித்த அணு உலையின் ஆப்பரேட்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் டோக்கியோவுக்கு வடக்கே 59 Km ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 30 செக்கன்கள் நீடித்த இந்த பூகம்பத்தை டோக்கியோவில் வசிக்கும் பல மக்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் டோக்கியோவிலும் அதற்கு அண்மையிலும் செல்லும் அதிவேக புல்லட் ரயில்களான ஷின்கான்சென் ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளனவா என விரைவாக பரிசோதிக்கப் பட்டதன் பின் ரயில் சேவை உடனே வழமைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகின்றது. ஜப்பானில் இதற்கு முன் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கமாக 2011 ஆம் ஆண்டு மார்ச்சில் அதன் வடகிழக்கு கடற்கரையில் ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவுடைய பூகம்பமும் அதனால் விளைந்த சுனாமியும் கருதப் படுகின்றது. ஜப்பானில் அணு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மிக அதிக மக்களைப் (18 000) பலி கொண்ட இயற்கை அனர்த்தமாக இது கருதப் படுகின்றது.

பிலிப்பைன்ஸ் சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி'


பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி தொடர்புடைய பக்கங்கள் 'பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்'கேட்க02:08 தொடர்புடைய விடயங்கள் பருவநிலை மாற்றம் பிலிப்பைன்ஸை தைப்பூன் ஹையான் சூறாவளி தாக்கியதில் ஒரு மாகாணத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக தாம் நம்புவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட கிராமங்களின் அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புதிய எண்ணிக்கையை தாம் எட்டியுள்ளதாக லெத்தே மாகாணத்தின் பொலிஸ் தலைவர் கூறியுள்ளார். பெரும்பாலானவர்கள் ஒன்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது இடிந்த கட்டிடங்களில் அகப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். அருகில் உள்ள சமர் தீவில் 300 பேர் இறந்துபோனதாகவும், இரண்டாயிரம் பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகின்றது. இராணுவ விமானங்களில் ஆட்கள் கொண்டு செல்லப்பட்டும், உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டும், பெரும் எடுப்பிலான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'முற்றான நிர்மூலம்' இந்தச் சூறாவளியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தக்லொபான் நகரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு ஒட்டுமொத்த அழிவை தான் பார்த்ததாகக் கூறியுள்ளார். லெய்தேவின் தலைநகரில் வீடுகள் எல்லாம் தரைமட்டமாகியுள்ளதாக அவர் கூறுகிறார். அங்கு சுத்தமான குடிநீர், மின்சாரம் எதுவும் கிடையாது என்றும் உணவும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார். உதவிகளை தாம் விநியோகிப்பதற்கு சிரமப்படுவதாகவும், அங்கு பரவலாக சூறையாடல் சம்பவங்கள் நடப்பதாகவும் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சூறாவளி அழிவுகளை, சுனாமியுடன் ஒருவர் ஒப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கிருந்து வெளியேறுவதற்காக, நிர்மூலமாகிக் கிடக்கும் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்துக் கிடப்பதாகவும் செய்தியாளர் கூறுகிறார்.

சனி, நவம்பர் 09, 2013

பிரேசிலில் இருந்து மேலும் இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வருகிறது!


மெட்ரோ ரயில் திட்டம் சோதனையோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வருகிறது. 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 4 பெட்டிகளுடன் கூடிய சோதனையோட்டம் கடந்த 6ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இதை அடுத்து மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த ரயில் பெட்டிகள் டிசம்பர் மாதம் சென்னை துறைமுகத்தை வந்தடையும் என்றும் தெரிய வருகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை ஒரு ரயில் தடமும் என்றும், சென்னை சென்ட்ரலில் இருந்து வண்ணாரப் பேட்டை வரை ஒரு ரயில் தடமும் என்றும் இரண்டு வழித் தடங்களாக செயல்பட உள்ளது என்றும் தெரிகிறது. மேலும் இந்த மெட்ரோ ரயிலுக்கு டிக்கெட் எடுத்து விட்டால் அவர்கள் மின்சார ரயில், மற்றும் மாநகரப் பேருந்துகள் என்று அனைத்திலும் பயணிக்கலாம என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.