சனி, பிப்ரவரி 18, 2012

”இந்தியாவா? வல்லரசா? நோ சான்ஸ்”

லண்டன் : இந்தியா வல்லரசாகும் வாய்ப்பில்லை என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், வல்லரசாகும் வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை என ”இந்தியா - தி நெக்ஸ்ட் சூப்பர் பவர்?” என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ”இந்தியா ஒரு வல்லரசு” என தெரிவித்ததை இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டி அதனை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என புறம் தள்ளியுள்ளது.

ஒன்பது ஆய்வாளர்கள் இந்தியா பற்றி எழுதியுள்ள அறிக்கைகள் இந்த ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசு நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா வல்லரசு ஆக முடியாததற்கு ஏழு காரணங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நக்ஸலைட்கள் பிரச்சினை, ஹிந்துத்வவாதிகளின் நயவஞ்சகம், மத்திய அரசின் இழிவான செயல்பாடுகள், பொருளாதாரத்தில் பெருகி வரும் ஏழை - பணக்காரர் வேறுபாடு, ஊடகங்களின் பின்தங்கிய நிலைமை, சுற்றுச்சூழல் உணர்வின்மை,கூட்டணி அரசினால் ஏற்படும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவை பிரதான காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நிலவி வரும் சாதிய வேறுபாடுகள், எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் ஆகியவையும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் உணவு, இலக்கியம், இசை, விளையாட்டு போட்டிகள் உலகெங்கும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சீனாவுக்கு இணையாக இந்தியா வல்லரசாக ஆகும் என மேற்கத்தேயவர்கள் நினைப்பது தற்போதுள்ள சூழலில் நடைபெற போவதில்லை என லண்டன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கட்டுரைகளை ராமச்சந்திர குஹா, ராஜீவ் ஸிபல்,இஸ்கந்தர் ரஹ்மான், நிகோலஸ் பிலாரல்,ஓலிவர் ஸ்டுன்கெல், ஹரீஷ் வான்கடே, முகுலிகா பானர்ஜி, ஆன்ட்ரூ சான்செஸ் மற்றும் சந்தீப் சென்குப்தா ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்

Read more about ”இந்தியாவா? வல்லரசா? நோ சான்ஸ்” at www.nidurin.blogspot.com

இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு

7 Mar 2012
டெஹ்ரான்:எரிவாயு குழாய் திட்டம் முடங்கிய சூழலில் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை குறித்து ஈரான் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் எண்ணெய்துறை அமைச்சர் மஜீத் கூறியுள்ளார்.

எரிசக்திகளுக்காக புதிய திட்டங்களை துவக்கும் இந்தியாவுக்கு ஈரானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். ஈரானில் இருந்து மின்சாரத்தை இறக்குமதிச் செய்வதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அஜண்டாவில் இவ்விஷயம் தொடர்பாக உட்படுத்தியிருப்பதாகவும் ஈரானின் அமைச்சர் கூறுகிறார்.

ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் புதிய எரிசக்தி நிலையம் நிறுவ திட்டமிட்டுள்ளதாக மஜீத் கூறினார்.

விவசாயம், எண்ணெய், இயற்கை எரிவாயு, பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும், ஈரானும் கடந்த ஜனவரியில் தீர்மானித்திருந்தன.

டெஹ்ரானில் இந்திய தூதர் சி.பி.ஸ்ரீவஸ்தவா, ஈரான் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு தலைவர் மாஜித் ஹிராயத் ஆகியோர் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்

இலங்கை போர்க் குற்றம் குறித்து ஐ.நா. கூட்டத்தில் விவாதம்

ஜெனீவா: இலங்கை போர்க் குற்றம் குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது. ஐநா.வின் மனித உரிமை ஆணையக் கூட்டம் சுவிஷ் நாட்டின் ஜெனீவா நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து பேச்சு நடத்தினார். மேலும் மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை அரசு ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் 'காலம் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

ஐ.நா.பிரதிநிதியின் கருத்து

ஐ.நா. மனித உரிமை ஆணைய நவிபிள்ளை இலங்கைப் பிரச்சனை பற்றி பேசினார். அப்போது 'இலங்கை அரசு நியமித்த கமிஷன் அறிக்கை மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது' என்று கூறிய அவர் 'எனினும் கமிஷனின் பரிந்துரைகளை இலங்கை உடனே நிறைவேற்ற வேண்டும்' என்று நவிபிள்ளை வலியுறுத்தினார்

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

சம்பளத்தை மனைவியிடமே தர வேண்டும்: இந்தோனேசிய அரசு


ஜகார்தா, மார்ச். - 5 - இந்தோனேசிய நாட்டில் ஆண் ஊழியர்களின் சம்பள பணத்தை அந்நாடு அவரவர் மனைவிகளிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. ஆண்கள் தங்களின் சம்பளம் முழுவதும் வேறு வழிகளில் செலவழிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தோனேசியாவில் அரசு பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக் காதலிகள் மற்றும் விபச்சாரிகளிடம் செலவு செய்து வருவதாக தெரிகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாவதாக அரசு ஊழியர்களின் மனைவிமார்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிக அரசு ஊழியர்கள் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு பணத்தை செலவிடுவதை கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை அவரவரது மனைவிமார்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து மனைவிமார்களின் பெயர்களில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் சம்பள பணம் போடப்பட்டது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது

கடத்தப்பட்ட மாணவன் 12 மணி நேரத்தில் மீட்பு


சென்னை நொலம்பூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் 12 மணி நேரத்தில் மீட்பு: 3 பேர் கைது - கூடுதல் ஆணையர் கடும் எச்சரிக்கை
 1/1 

சென்னை, பிப்.17 - நொலம்பூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். கடன் பிரச்சானைகளில் பள்ளி மாணவர்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார். கடன் பிரச்சனை போன்றவற்றிற்கு பள்ளி மாணவர்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையர் எச்சரித்துள்ளார்.நேற்றுமுன்தினம் சென்னையில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவனை 23 மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் மீட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு :.
சென்னை கொரட்டூர் ஜெகதாம்பிகாநகர் சேக்கிழார் நகரில் வசிக்கும் ரஜினிகாந்த் என்பவரின் 12 வயது மகன் லோகேஸ்வரன் நேற்றுமுன்தினம் காலை தனது தம்பி ஜெயசூர்யாவுடன் திருமங்கலத்தில் உள்ள லியோ மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி சென்றபோது இரண்டு நபர்கள் லோகேஸ்வரனை காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உத்தரவின் கீழ் கூடுதல் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் தெற்கு மண்டலம் சங்கர் மேற்பார்வையில் 12 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுவனை மீட்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சென்னை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் கடத்தப்பட்ட சிறுவனின் பெரியப்பா நிரஞ்சன் குமார் என்பவர் திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் என்றும், சென்னை வடபழனியில் கார் வாங்கி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  வடபழனி பாபு என்பவரிடம் அவர் ரூ.2 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத காரணத்தால் நிரஞ்சன் குமார் வீட்டிற்கு வந்திருக்கிறார். லோகேஸ்வரன் பாட்டியிடம் நிரஞ்சன் குமார் பற்றி  மிரட்டலாக பேசியிருக்கிறார்.  அவர் வீட்டில் இல்லாததால் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதற்காக வெளியே வந்த சிறுவன் லோகேஸ்வரனை கடத்திச் சென்றது தெரியவந்தது.  இந்த விபரம் அறிந்ததும் போலீஸ் தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைந்தனர்.  இந்த விவரம் அறிந்த பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் சிறுவன் லோகேஸ்வரனை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு தெரியாமலேயே பாபுவின் கூட்டாளிகள் 2 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்த அறிந்த போலீசார் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  உத்தண்டியில் சிறுவனை மீட்டனர்.  பஸ்சில் பயணம் செய்த குற்றவாளிகள் பாலசுப்பிரமணியம் மற்றும் பீட்டரை மடக்கி பிடித்தனர்.  சிறுவனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  கடத்தப்பட்ட சிறுவன் 23 மணி நேரத்தில் மீட்கப்பட்டான்.  கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவர் சிக்கியிருக்கிறார். மற்றும் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த தகவல்களை சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடன் பிரச்சனை போன்றவற்றிற்காக சிறுவர்களை கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் தாமரைகண்ணன் எச்சரித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீதிபதிகள் மதிவாணன், அர்த்தநாரிசுவாமி ஆறுமுகசாமி, வாசுகி ஆகியோரைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இன்று முதல் இரண்டாண்டுகளுக்குப் பதவியில் இருப்பல் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வியாழன், பிப்ரவரி 16, 2012

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இஸ்ரேல் நாட்டு தூதர் திடீர் சந்திப்பு


 1/1 

புதுடெல்லி,பிப்.- 16 - புதுடெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரக காரில் குண்டுவெடிக்க செய்தது தொடர்பாக அந்த நாட்டு தூதர் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது. டெல்லியில் நேற்றுமுன்தினம் ஒளரஙகசீப் சாலையில் பிரதமர் வீடு அருகே சென்று கொண்டியிருந்த இஸ்ரேல் நாட்டு தூதரக கார் மீது தீவிரவாதிகள் ஸ்டிக்கர் குண்டை வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்தனர். இதில் காரில் சென்ற இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை ஈரான் நாட்டு ஆதரவு தீவிரவாதி ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்து குண்டை வெடிக்கச்செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.இந்தநிலையில் நேற்று மாலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இஸ்ரேல் நாட்டு தூதர் ஆலோன் உஸ்பிஜ் சந்தித்து பேசினார். அப்போது குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது.

பாக். விமானத்தின் கழிப்பறையில் பயணிகளை அழைத்துச்சென்ற அவலம்


 1/1 
இஸ்லாமாபாத், பிப்.- 16 - விமானத்தில் இடமில்லாத காரணத்தால் 2 பயணிகளை விமானத்தின் கழிப்பறையில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார் பாகிஸ்தான் விமானி ஒருவர்.  பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான கம்பெனிக்கு சொந்தமான விமானம் ஒன்று லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட  நிலையில் 2 பேர் உட்கார இடம் இருக்கவில்லை. உடனடியாக அந்த விமானத்தின் பைலட் அந்த இரு பயணிகளையும் அழைத்து விமானத்தின் கழிப்பறையில் அமர்ந்து வரமுடியுமா என்று கேட்டார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். அதனால் கழிப்பறையில் அமர்ந்தபடியே அந்த இரண்டு பயணிகளும்  கராச்சி வந்து சேர்ந்துள்ளனர்.  பெருத்த நஷ்டத்தில் இந்த விமான கம்பெனி இயங்குவதால் இந்த கம்பெனியை நடத்த பாகிஸ்தான் அரசு பெருத்த  முயற்சிகளை எடுத்துவருகிறது. அத்தோடு  வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு இந்த விமான கம்பெனி ஊழியர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய சிறப்பான சேவையை வழங்கத்தானோ என்னவோ அந்த விமானி பயணிகளை இவ்வாறு கழிப்பறையில் அமர வைத்து அழைத்துச்சென்றுள்ளார்.  பஸ்ஸில் எக்ஸ்ட்ரா  டிக்கெட் ஏற்றுவது போன்று இப்போது விமானத்திலும் எக்ஸ்ட்ரா டிக்கெட் போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஹுண்டுராஸ் சிறைக்குள் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 350-பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது



ஹுண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவில் இருந்து 140-கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் கோமாயுகா. இங்கு அமைந்துள்ள சிறைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் புகையில் மூச்சுத்திணறி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சிறைக்குள் ஏற்பட்ட தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதன், பிப்ரவரி 15, 2012

இலங்கை போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது


 1/1 
கொழும்பு, பிப்.- 15 - இலங்கை விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழந்து நொறுங்கியது.  இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மிக் 27 ரக ஜெட் போர் விமானம் தலைநகர் கொழும்புவிற்கு அருகே விழுந்து நொறுங்கியது. சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்காவை அடுத்துள்ள புத்தளத்தில் ஹேவனவில் தென்னந்தோப்பு ஒன்றில் விமானம் கீழே விழுந்தது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள பறந்த இந்த விமானம் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி  எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர்தப்பினார் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் அண்டி விஜேயசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  ரஷ்ய தொழில் நுட்பத்தில் தயாரான இந்த மிக் ரக போர் விமானம் தமிழீழ விடுதலைப் போரின் போது புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த விமானங்கள் சிங்கள ராணுவத்திடம் இருந்தது. அதிலும் ஒரு விமானம் தற்போது நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மேடையில் மயங்கிவிழுந்த கர்நாடக அமைச்சர் மரணம்


 1/1 
பெங்களூர், பிப்.- 15 - கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மரணமடைந்தார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான  பாரதிய ஜனதா  ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சராக வி.எஸ்.ஆச்சார்யா(71) இருந்துவந்தார். இந்நிலையில் ஆச்சார்யா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல்  கல்லூரிக்கு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், திடீரென்று மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மல்லிகே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும் 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அரசியலில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஆச்சார்யா கர்நாட மாநில உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சவூதி அரேபியாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி


 1/1 
துபாய்,பிப்.- 14 - இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் உயர்மட்ட குழுவினர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியா-சவூதி அரேபியா இடையே ராணுவ ஒத்துழைப்பு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. அரபு நாடுகளுடன் இந்தியா சுதந்திரம் வாங்கியதில் இருந்து நல்லுறவை பேணி வருகிறது. அமெரிக்காவின் பகை நாடுகளான ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுடன் கூட இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது. அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அரபு நாடுகளிடையே எண்ணெய் வளம் அதிகம் உள்ள சவூதி அரேபியாவுடனும் இந்தியா தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறது. அந்த நாட்டுடன் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினர் நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் ரியாத் நகருக்கு சென்றனர். அந்தோணியுடன் இந்திய ராணுவ செயலாளர் ஷஷி கே.சர்மா, ராணுவ துணை தலைமை தளபதி எஸ்.கே. சிங், கப்பல் படை ஊழியர் துணை தலைமை தளபதி சதீஷ் சோனி, ஏர்மாஷல், எம்.ஆர். பவார் ஆகியோர் சென்றுள்ளனர். இன்று சவூதி அரேபியாவின் ராணுவ அமைச்சரும் இளவரசருமான சல்மானை ஏ.கே. அந்தோணி சந்தித்து பேசுகிறார். இருநாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் இதுவரை செய்யப்படவில்லை என்றாலும் ராணுவம் தொடர்பாக இருநாடுகளிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் வந்து போவதும் நடந்து வருகிறது. சவூதி உயரதிகாரிகளையும் ஏ.கே. அந்தோணி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது, தீவிரவாதத்தையும் கடல் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று இந்திய ராணுவ அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், பிப்ரவரி 13, 2012

முத்தரப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது


 1/1 
அடிலெய்டு, பிப்.- 13 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற நிலையில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் 1 - 1 என்ற நிலையில் சமன் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா - இலங்கை நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை  பெற்ற நிலையில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நேற்று அடிலெய்டில் மோதின. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் வினய்குமார். 6 ரன்களை எடுத்திருந்த ரிக்கி பாண்டிங், வினய் பந்தில் விராட் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி.யின் ஸ்கோர் அப்போது 14 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களமிறங்கினார். வார்னர்- கிளார்க் ஜோடி மெதுவாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிலும் கிளார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியபோது 18 ரன்களை எடுத்திருந்த வார்னர், அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக கிளார்க்குடன் அறிமுக வீரர் ஃபாரஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் விளையாடி ரன்களை உயர்த்தியது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய கிளார்க் 38 ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் மித வேகமாக வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 81 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். ஃபாரஸ்ட் மற்றும் ஹஸ்ஸி ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதிலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய ஃபாரஸ்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதலாவது அரை சதத்தை கடந்தார். 71 பந்துகளில் இவர் அரை சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியும் அரை சதம் கடந்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 35.3 ஓவர்களில் 179 ஆக இருந்தபோது 66 ரன்களை எடுத்திருந்த ஃபாரஸ்ட், உமேஷ் யாதவின் பந்தில் வினய்குமாரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹஸ்ஸியுடன், கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த ஹஸ்ஸி, ஜாஹீர்கான் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 72. அப்போது ஆஸ்திரேலிய அணி 44.2 ஓவர்களில் 235 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வாடே இம்முறை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இவரும் கிறிஸ்டியனும் இறுதிக் கட்டத்தில் அதிரடியைக் காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் வினய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாஹீர்கான் 1விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்தியது இந்திய அணி. இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் துவக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. அணி 52 ரன்களை கடந்தபோது அதிரடி வீரர் சேவாக் 20 ரன்களை எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் விராட் ஹோலி களமிறங்கினார். இம்முறை ஹோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஃபாரஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து காம்பீருடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. காம்பீர் அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸின் பந்தில் ஸ்டார்க்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அருமையாக விளையாடிவந்த காம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து அணித் தலைவர் தோனியும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 46.1 ஓவரில் அணியின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தபோது  ரெய்னா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோகர்த்தியின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இவர் 8 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் தோகர்த்தியால் அவுட் ஆக்கப்பட்டாலும் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெக்கே 3 விக்கெட்டையும், தோகர்த்தி 2 விக்கெட்டையும், ஹாரிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 92 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட காம்பீர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை


 1/1 
புதுடெல்லி,பிப்.- 13 - ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 1 வருடம் ஜெயில் தண்டனை விதிப்பதற்கான சட்டதிருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று இந்த திருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பதை தடுக்க மத்திய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்ப டவில்லை.  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதையும், வாக்காளர்கள் அதை வாங்குவதையும் தடுக்கும் விதமாக தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  அதன்படி பணமோ அல்லது பொருளோ லஞ்சமாக வழங்கினால் அது கைது செய்வதற்கு உரிய குற்றம் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இதற்காக ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும். தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1) -வது பிரிவின்படி ஓட்டுக்கு பணம் வாங்குவது ஊழல் நடவடிக்கையாகும்.  5 மாநில தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி பஞ்சாபில் ரூ.12.13 கோடி பணமும், உத்தரகாண்டில் ரூ.1.35 கோடியும், மணிப்பூரில் ரூ.47 லட்சமும், கோவாவில் ரூ.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை ரூ.53.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளான நடுவண் அமைச்சர் சல்மான்குர்ஷித் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார்



இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27-விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு நான்கரை விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி நடுவண் அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. உத்திரபிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இந்த உள் இட ஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு;ள்ளது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது நடுவண் அரசு சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித் இஸ்லாமியர்களுக்கு 9-விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக சல்மான்குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர்களுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் சல்மான்குர்ஷித்தை, பிரதமர் மன்மோகன்சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சனி, பிப்ரவரி 11, 2012

பிறந்தநாள் விழா: அ.தி.மு.க.வினருக்கு வேண்டுகோள்


எனது பிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம்: அ.தி.மு.க.வினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
 1/1 
சென்னை, பிப்.11 - எனது பிறந்தநாள் அன்று என்னை யாரும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அன்று ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுமாறும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க.  பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதம் வருமாறு:- கட்சியின் உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது என்பதில் ரண நம்பிக்கை கொண்டே எனது பொதுவாழ்வை மேற்கொண்டு வருகிறேன் என்பதை தமிழக மக்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளாகிய நீங்களும் நன்கு அறிவீர்கள்.
 எம்.ஜி.ஆர்.  உயிரோடு இருந்தவரை, அவர் தன்னுடைய பிறந்த நாளை ஒரு போதும் கொண்டாடியது கிடையாது.  அன்றைய தினம் யாரையும் அவர் சந்திக்கவும் மாட்டார்.
எம்.ஜி.ஆரால், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு தான் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று, அவரது பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கினேன்.  அப்போதும் கூட, அந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம் எம்.ஜி.ஆர்.  ஒரு போதும் கலந்து கொண்டது கிடையாது.  அது போலவே உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அவர் நடந்த பாதையில், அவரின் பாதச் சுவட்டில் பயணிப்பதிலேயே எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.  எனவே, என்னுடைய பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதே வேளையில், எனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை​எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெரு வாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு மாறாக, கட்சியின் உடன்பிறப்புகள் யாரேனும் பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் அது என்னை வருத்தப்படுத்துமே தவிர ஒரு போதும் திருப்திபடுத்தாது.  எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கழக கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.  கடந்த மைனாரிட்டி திமுக  ஆட்சிக் காலத்தில் அலைவரிசை பணத்தை களம் இறக்கி நாள்தோறும் அவர்கள் நடத்திய ஆடம்பர விழாக்களும், அவசியமற்ற படாடோபங்களும் மக்களை முகம் சுளிக்க வைத்ததோடு, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக​வின் படுதோல்விக்கு அவர்களின் அந்த ஆடம்பரங்களும் ஒரு காரணமாயின என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஒன்பது மாதங்களை தொட்டு விட்ட நிலையிலும் இன்று வரை எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளையும் நடத்தாமல், அரசு திட்டங்களைக் கூட காணொளிக் காட்சிகளின் மூலமே துவக்கி வைத்தும், மக்களின் வரிப் பணத்தை துளியும் வீணடிக்காத நம் கட்சி அரசின் எளிமையையே, கட்சி கண்மணிகளாகிய நீங்களும் முன் மாதிரியாகக் கொண்டு எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை இல்லார்க்கு உதவுகின்ற நன்னாளாக கடைபிடித்திட வேண்டும் என்று வேண்டுகிறேன்.  அதே வேளையில், வருகின்ற நாடாளுமன்ற மக்கள் அவை பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றி ஒன்று தான் என் கண்மணிகளாகிய நீங்கள் எனக்கு தருகின்ற இணையில்லா பரிசாக இருக்கும் என்பதை இப்போதேங்கள் உணர்ந்து வெற்றிக் கனி கொய்திட விவேகத்தோடு விரைந்திடுங்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி


இடைமறித்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனை அபார வெற்றி
 1/1 
பாலசோர்,பிப்.11 - எதிரிகள் ஏவும் அணு ஏவுகணையை வானிலேயே வழிமறித்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமாக நடத்தியது. இதனையொட்டி விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஒத்தக்குழாய் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எதிரிகளுடன் போர் நடத்திய இந்தியா, தற்போது ராணுவ வலிமையில் உலகமே வியக்கும் வன்னம் முன்னேறி வருகிறது. அக்னி, பிரித்வி போன்ற பல வகையான அணு ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து வருகிறது. இந்தநிலையில் எதிரிகள் அணு ஏவுகணைகளை ஏவும்போது அதை வழியிலேயே மறித்து தாக்கி அழிக்கும் அணுஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்தியா வேகமாக செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் ஒரிசே கடற்கரை பகுதியான பாலசோர் ஏவுதளத்தில் இருந்து நேற்று வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இந்த ரக ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டதாகும். பல அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை சோதனை மிகவும் அற்புதமாக நடந்தது என்று ஒருங்கிணைந்த சோதனை தளத்தின் இயக்குனர் எஸ்.பி.தாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பாலசோர் அருகே கடலில் உள்ள ஐடிஆர் 3-வது சோதனை தளத்தில் இருந்து நேற்றுக்காலையில் சரியாக 10.13 மணிக்கு தரையில் இருந்து மற்றொரு இடத்தில் தரையில் இருக்கும் இலக்கை தாக்கும் பிரித்வி அணு ஏவுகணை ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 3-வது நிமிடத்தில் சாண்டிபூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீலர் தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வழிமறித்து தாக்கும் அணுஏவுகணைக்கு ரேடார் கருவியில் இருந்து சிக்னல் கிடைத்தது. அதாவது பிரித்வி ஏவுகணை வருகிறது என்பது உணர்த்தப்பட்டது. உடனே இந்த ஏவுகணை ஆகாயம் வழியாக பறந்து சென்று ஒரு குறிப்பிட்ட இலக்கில் பிரித்வி ஏவுகணையை அழிக்க வானம் வழியாக பறந்து சென்றது. திட்டமிட்டபடி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் எதிரே வந்த அந்த ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழித்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. வழிமறித்து தாக்கும் ஏவுகணையானது 7.5 மீட்டர் நீளமுள்ளது.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி


திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி
 1/1 

திருமங்கலம், பிப். 10 - திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்களன்று தேவாரத்தை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவருக்கும், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த உமாவிற்கும் திருமணம் தூத்துக்குடியில் நடைபெற்றது. திருமண வீட்டார் மணமக்களை தேவாரத்தில் விட்டு விட்டு நேற்று ஒரு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டை என்ற இடத்தின் அருகே வரும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கிட்டத்தட்ட 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. 
இதில் தூத்துக்குடியை சேர்ந்த மணி(46), விருதுநகரை சேர்ந்த மாதவன்(41) மற்றும் சாயல்குடியை சேர்ந்த கருப்பசாமி(45) ஆகியோர் வேனின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து அருகில் உள்ளோருக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் வேன் நீரில் முற்றிலுமாக மூழ்கிப் போனது. இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.டி.ஓ. புகழேந்தி மற்றும் தாசில்தார் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். 
நீரில் மூழ்கிய வேனுக்குள் தூத்துக்குடியை சேர்ந்த சித்ரவேல், முருகம்மாள், பாலகிருஷ்ணன், அருணா, கைலாஷ், சஞ்சய், விஸ்வா, மேலும் ஒருவர் மற்றும் வேனின் ஓட்டுனர் ஆகியோர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். நீரில் மூழ்கிய வேன் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது. இது குறித்து தகவலறிந்த முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த விபத்து குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை குத்திக்கொலை


சென்னையில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை குத்திக்கொலை - தன்னைப்பற்றி புகார் அளித்ததால் மாணவன் வெறிச்செயல்
 1/1 

சென்னை, பிப்.10 - சரியாக படிக்காததால் மாணவனை கண்டித்து ஒழுங்குபடுத்தி நினைத்த ஆசிரியை மாணவனால் பள்ளி வளாகத்தில் குத்தி கொல்லப்பட்டார். இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை பாரிமுனையில் உள்ள அர்மீனியன் தெருவில் இருக்கும் புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் உமாமகேஸ்வரி(43) என்பவரை அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவன் முகமது இர்பான். இவன் பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் ஒழுங்கீனமாக இருந்ததால் ஆசிரியை அவனை கண்டித்து பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் இர்பான் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியை உமாமகேஸ்வரி வழக்கம்போல் 10-ம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று ஆவேசத்துடன் உள்ளே நுழைந்த இர்பான் கத்தியால் ஆசிரியை உமாமகேஸ்வரியை குத்த பாய்ந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆசிரியை அவனிடம் இருந்து தப்பிக்க வெளியே ஓடியுள்லார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை பலியானார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாணவனை மடக்கி பிடித்தனர். 
இந்தி ஆசிரியை உமாமகேஸ்வரியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம்அளித்துள்ளான். தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், மதிப்பெண் போடுவதில் ஏற்பட்ட பிரச்சினையாலும் அவரை குத்திக் கொன்றதாக இர்பான் தெரிவித்தான்.
ஆசிரியை கொலை செய்யப்பட்டதை அறிந்து அந்தப் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பள்ளி விடுமுறை விடப்பட்டது. வகுப்பறையிலேயே மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், பிப்ரவரி 09, 2012

சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்



அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளர் வெற்றி பெறும் வகையில் பரப்புரை இருக்கும் என்றும் தி.மு.கவில் உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாட்கள் இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்றும் ஜனநாயக மரபுகளை உடைக்கும் வகையில் அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

புதன், பிப்ரவரி 08, 2012

எல்லா துறைகளிலும் உரிமங்கள் ஒதுக்கீடு ஏல முறைதான்


உரிமங்கள் ஒதுக்கீடு: இனி ஏல முறைதான்: மத்திய அரசு அதிரடி முடிவு
 1/1 

புது டெல்லி, பிப்.8 - தொலைத் தொடர்பு துறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடந்த 2008 ம் ஆண்டு 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், மத்திய கணக்கு தணிக்கை குழுவும் கண்டுபிடித்து உறுதி செய்தன. ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்புக்கு காரணமான இந்த கொள்கை முடிவால் ராசா, கனிமொழி உட்பட 14 பேர் கைதாகினர். இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. எனவே அரசு சொத்துக்களான இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ததில் வேறொரு கொள்கை முடிவை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக முன்னாள் நிதியமைச்சக செயலாளர் அசோக் சாவ்லா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 
அந்த குழு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பல பரிந்துரைகளை மத்திய அரசிடம் அறிக்கையாக கொடுத்துள்ளது. அதில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது சில பெரிய நிறுவனங்களின் ஏகாதிபத்யத்துக்கு வழிவகுத்து விடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏல முறைதான் சிறந்தது என்றும் அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மின்னணு ஏல முறையையும் கடைப்பிடிக்கலாம் என்று கூறியுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே மத்திய அரசின் எல்லா துறைகளிலும் ஏல முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.