வியாழன், மே 31, 2012

ரஷ்ய அதிபர் புதின் படத்தின் மீது எச்சில் துப்பிய வாலிபருக்கு சிறைத்தண்டனை.


ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தின் போது அதிபர் விளாடிமிர் புடின் படத்தின் மீது எச்சில் துப்பியவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்று பதவியேற்றார். தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மாஸ்கோவில் கடந்த 7ம் தேதி ஐக்கிய ரஷ்ய கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற திமித்ரி கருயேவ் என்ற 20 வயது வாலிபர், திடீரென புடின் படத்தின் மீது எச்சில் துப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ÔÔபொது இடத்தில் ஒழுங்கீனமாக திமித்ரி நடந்து கொண்டார்ÕÕ என்று வாதிட்டார். இந்த குற்றச்சாட்டை மறுத்த திமித்ரி, எனக்கு அடிக்கடி தும்மல் வரும். ஆர்ப்பாட்டத்தின் போது தும்மினேன். புடின் படத்தின் மீது எச்சில் துப்பவில்லை என்று கூறினார். இவரது வக்கீல் கூறுகையில், ÔÔதிமித்ரியின் செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அடிக்கடி தும்முவது அவரது இயல்புÕÕ என்றார். அதை ஏற்க மறுத்த ரஷ்ய கோர்ட், திமித்ரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து இன்டர்நெட்டில் ஏராளமானோர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் பந்த்: பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை


சென்னை, மே. 31 - எதிர்க்கட்சிகள் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன .இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளார். பெட்ரோல்​ டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் நள்ளிரவு முதலே போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பஸ்களை இயக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:​ 'பந்த்' என்ற பெயரில் வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அடைக்கச் சொல்லி வற்புறுத்தினாலோ, பஸ்களை மறித்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பந்த் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோரது மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ்நிலையம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடந்தது.

புதன், மே 30, 2012

அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்


ராவல்பிண்டி, மே. 30 - அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று குறுகிய தூரத்தில் இலக்கைத் தாக்கக் கூடிய ஹத்ப்-ஐ ஓ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது. அக்னி ஏவுகணையை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஷாஹீன் ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது பாகிஸ்தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹத்ப்-ஐஐஐ என்ற ஏவுகணையை விண்ணில் செலுத்தியிருந்தது. இது 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது இந்நிலையில் 60 கிலோ மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹத்ப்-ஐஓ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்கு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் விஞ்ஞானிகளைப் பாராட்டியுள்ளனர்.

பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு தீரும்: முதல்வர் அறிவிப்பு


சென்னை, மே.30 - பெட்ரோலும், டீசலும் உடனடியாக பங்க்குகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் தட்டுப்பாடு தீரும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினை நீக்குவது குறித்து எனது தலைமையில் நேற்று பிற்பகல் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மங்களூரில் உள்ள மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பணிகள் கடந்த 10 நாட்களாக முடங்கிப் போயிருந்ததாலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வரவேண்டிய டீசல் வராததாலும், பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்துள்ளதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொச்சியிலிருந்து மூன்று கப்பல் டேங்கர்கள் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவை நேற்று பிற்பகல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த பெட்ரோல் மற்றும் டீசலை சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 72 பெட்ரோல் பங்குகளுக்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளுக்கும் உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 கிலோ லிட்டர் டீசல் பெங்களூரிலிருந்து சாலை வழியாக சென்னைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. சென்னைக்கு நாளொன்றுக்கு சுமார் 2,100 கிலோ லிட்டர் பெட்ரோலும், 2,500 கிலோ லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 67,000 கிலோ லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் உடனடியாக பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னை நகரில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நேற்று முதல் தீர்ந்துவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

திங்கள், மே 28, 2012

Sad Death of FootBall Player..(LAST BREATH)


ரியாத்-மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் என்ஜினில் தீ: பயணிகள் தப்பினர்!


மும்பை: செளதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியதும் அதன் இடது புற என்ஜினின் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் என்ஜின் முழுவதுமாக எரிந்து நாசமானது. ஜெட் ஏர்வேசின் 9w523 எண் விமானம் இன்று காலை 5.40 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாகக் தரையிங்கியது. 5.50 மணியளவில் ரன்வேயில் இருந்து டேக்ஸி வே பகுதிக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டு என்ஜினின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிலிருந்த 158 பயணிகளும் அவசரமாகத் தரையிறக்கப்பட்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்த தீயை அணைப்பதற்குள், அந்த என்ஜின் முழுவதுமாக எரிந்துவிட்டது.

மியான்மருடன் நெருங்கிய நட்புறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது


புதுடெல்லி,மே.- 28 - அண்டை நாடான மியான்மருடன் நெருங்கிய நட்புறவை வைத்துக்கொள்ள இந்தியா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக நேற்று புதுடெல்லியில் இருந்து மியான்மரின் புதிய தலைநகர் நாய் பிய் தாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டு செல்லும்முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மியான்மர் நாடு நமது அண்டை நாடு மட்டுமல்லாது நெருங்கிய நட்பு நாடாகும். மியான்மர் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் மியான்மருடன் வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு தொடர்பாக நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள புதிய வழிமுறைகள் வகுத்து செயல்படும் என்று கூறியுள்ளார். சமீபகாலமாக இருநாடுகளிடையே உள்ள உறவு பல துறைகளில் விரிவடைந்து வருவதோடு பலப்பட்டும் வருகிறது. இந்த உறவு என்னுடைய மியான்மர் பயணத்தால் மேலும் பலப்படுவதோடு இந்தியாவுக்கு மியான்மர் அதிபர் தெயின் செயின் வந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மியான்மர் தலைநகர் நாய் பியி தாவில் அதிபர் தெயின் செயினை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாடுகளிடையே வர்த்தகம், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் சூகியையும் சந்தித்து பேசுகிறார். கடந்த 1987-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, மியான்மருக்கு சென்றார். அதன் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் மியான்மருக்கு சென்றிருப்பது முதல் தடவையாகும். மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சூகி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற்றனர். அதன் பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி மாறி ஜனநாயக ஆட்சி மலரும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஞாயிறு, மே 27, 2012

நீடூர் - நெய்வாசல் தேர்தல் நாள் நெருங்கிவிட்டது வேட்பு மனு தாக்கல் 28.05.12 அன்று காலை துவக்கம் ! ! !


வரக்கூடிய 28.05.2012. திங்கள் அன்று காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை நமதூர் பெரிய பள்ளிவாசலில் வேட்புமனு தாக்கல் நடக்கவுள்ளது.அன்று மாலை 4.30மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தோர் பட்டியல் வெளிடப்படுகிறது. 29.5.2012 அன்று காலை 12 மணிக்கு தகுதி பெற்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. . .

வெள்ளி, மே 25, 2012

அதிபர் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த எகிப்து மக்கள்


கெய்ரோ, மே. 25 - ஆப்பிரிக்க நாடான எகிப்து அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட புரட்சியால் தனது 20 ஆண்டு கால பழைய பதவியில் இருந்து விலகினார். அவர் மீது பல்வேறு ஊழல் முறைகேடு குற்றசாட்டுகள் உள்ளன. முபாரக் பதவி விலகியதும் நடைபெறும் தேர்தல் என்பதால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அதற்கேற்ப எகிப்து மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் 5 வேட்பாளர்களிடம்தான் கடும் போட்டி நிலவியது. இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமர்மவுசா, முன்னாள் பிரதமர் அகமது ஜாபிக், இஸ்லாமிய கட்சிகளின் முகமது மோரீஸ், அபு அல் முனீம், கமாதீன் ஷெபாகி ஆகியோர் முக்கியமானவர்கள். வரும் 29 ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. புதிய அதிபர் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பதவியேற்பார் என தெரிகிறது.

மனையியல் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடம் பிடித்த முஸ்லிம் மாணவி.


காயல்பட்டின...ம், மே 22 : நடந்து முடிந்த +2 தேர்வில் மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா அவர்கள் தெரிவித்ததாவது. மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்.. பல லாட்ஜுகளில் உல்லாசம்!


வேலூர்: பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர். வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில், நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள். கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம். அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம். அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார். நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன். அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன். இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார். இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர். அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களது மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீசல் விலையும் உயருகிறது..!


புது டெல்லி, மே. 25 - பெட்ரோல் விலை உயர்வால் நாட்டு மக்கள் பெருத்த அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பெட்ரோல் விலையைப் போல டீசல் விலையையும் உயர்த்தலாமா என்பது பற்றி மத்திய அரசு இன்று முடிவு எடுக்கிறதாம். இது எப்படி இருக்கு? பெட்ரோல் விலை நேற்று முன்தினம் ஒரு லிட்டருக்கு ரூ. 7.54 வீதம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே. இதனால் அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் மத்திய அரசை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகனங்களை மூட்டை கட்டி விடலாமா என்றும் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான் போலும். ஒரு அதிர்ச்சி வந்து தாக்கும் போது மற்றொரு பெரிய அதிர்ச்சி உடனே வந்தால் முன்பு வந்த அதிர்ச்சி சிறியதாகி விடுமாம். இதுதான் சினிமா இயக்குனர் பாலச்சந்தரின் இரு கோடுகள் தத்துவம். இந்த தத்துவம் மத்திய அரசுக்கு எப்படியோ தெரிந்து விட்டது போலும். அதனால்தான் டீசல் விலையையும் உயர்த்தப் போகிறார்களாம். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அரசு குழு இன்று கூடி டீசல் விலையை உயர்த்துவது, கேஸ் விலையை உயர்த்துவது, மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது, இதைப் பற்றியெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்கப் போகிறார்களாம். இத்தகவலை நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, டீசல் விலையை உயர்த்துவது பற்றி விவாதிக்க இன்று மதியம் கமிட்டி கூடுவதாக தனது பெயரை சொல்ல விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் எண்ணெய் அமைச்சகமும் தனது திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளது. டீசல், கெரசின், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு இந்திய அரசு அதிகளவில் மானியம் கொடுக்கிறதாம். இதனால் அரசு பெருமளவில் கடன்வாங்க வேண்டியதிருக்கிறதாம். அது மட்டுமல்ல, சர்வதேச எரிசக்தி விலை நிலவரம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றாலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல, ஒரு லிட்டர் டீசலுக்கு எண்ணெய் கம்பெனிகளுக்கு 14 ரூபாய் இழப்பு ஏற்படுகிறதாம். இதன் காரணமாகவே டீசல் விலையையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சமையல் கேஸ், கெரசின் விலைகளும் உயரப் போகிறது. இதெல்லாம் ஒரு சரியான நடவடிக்கைதான் என்கிறார் மும்பையில் உள்ள ஒரு பொருளாதார நிபுணர். அவருக்கு இது சரிதான். ஆனால் கஷ்டப்படும் மக்களுக்கு?

புதன், மே 23, 2012

இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்


இந்தியா, தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கு உதவ, 200 கோடி டாலர்கள் அளவுக்கு, நிதி உதவி அமைப்பு ஒன்றை , தனது மத்திய வங்கியான , ரிசர்வ் வங்கியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம், அண்டை நாடுகள் , இந்தியாவின் ரிசர்வ் வங்கியை அணுகி நிதி உதவி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய கடன் வசதி அமைப்பு ,அண்டை நாடுகளிடையே, இந்தியா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலானது என்ற கருத்து இருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் உலகம் இந்த்த் திட்ட்த்தின் நோக்கம் என்ன, இந்தியாவிடமிருந்து அண்டை நாடுகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை இது பூர்த்தி செய்யுமா என்பது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் நீலகண்டன் ரவி இது அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என்றார். நீலகண்டன் ரவி பேட்டி மாற்று மீடியா வடிவில் இயக்க அண்டை நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்துவதற்கும் இந்த மாதிரியான கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டாலும், பங்களா தேஷ் போன்ற நாடுகள் , இந்தியாவிடமிருந்து நிதி உதவியை விட, நதி நீர்ப் பங்கீடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வையே அதிகம் விரும்புகின்றன , எனவே இத்திட்டம் எந்த அளவுக்கு இந்தியாவின் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு அனுகூலத்தைத் தரும் என்று கேட்ட்தற்கு பதிலளித்த அவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கும், செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும், இந்தியாவுக்கு இருக்கும் பல்வேறு வழிகளில் இது போன்ற நிதி உதவித் திட்டமும் ஒன்றுதான். ஒரு கதவு மூடப்பட்டிருந்தால், மற்றொரு கதவைத் திறந்து முன்னேறுவது போலத்தான் இவையும் என்றார் ரவி.

ஆந்திர மாநில ரயில் விபத்தில் 25 பேர் பலி


ஐதராபாத், மே23 - ஆந்திர மாநிலத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவத்தில் 25 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகுண்டா ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவம் நேற்று காலை 3.15 மணிக்கு நடந்தது. சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் வேகமாக மோதியதில் பயணிகள் ரயிலின் முதல் பெட்டியில் தீ பிடித்துக்கொண்டது. இதில் 11 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் மூன்றாவது பெட்டி தடம்புரண்டதில் அதில் சிக்கியிருந்த மேலும் 14 பேரும் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பயணிகள் ரயிலின் முதல் 3 பெட்டிகளும் தடம்புரண்டன என்றும் இதில் 25 பேர் பலியானார்கள் என்றும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் 3 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் சிக்னலை மீறி ஓட்டிச்சென்றதால்தான் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹூப்ளியில் இருந்து பெங்களூர் வந்த இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள். இவர்களில் ஹூப்ளி மற்றும் ஹொசப்பேட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களால் தற்போது பேச முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். விபத்து நடந்த பகுதியில் ரயில்வே மற்றும் மாநில போலீசார் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் முதல் பெட்டி தீப்பிடித்ததால் தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் கொல்கத்தாவில் இருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அமைச்சர் முகுல் ராய் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள தண்டவாளங்கள் சீர் செய்யப்பட்ட பிறகு நேற்று பிற்பகல் முதல் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

செவ்வாய், மே 22, 2012

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 55.35 ஆனது.. பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!


மும்பை: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் வேகமாக சரிவடைந்து வருகிறது. இன்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55.35 என்ற நிலையை அடைந்துள்ளது. இன்று ஒரு தினத்தில் மட்டும் அதன் மதிப்பு 33 பைசா சரிந்துவிட்டது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் யூரோவின் மதிப்பு சரிவதாலும், அதே நேரத்தில் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு கூடி வருவதாலும், இந்தியாவில் இறக்குமதியாளர்கள் டாலர்களை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் (டாலரின் மதிப்பு அதிகரிப்பதால்), இறக்குமதியாளர்கள் பீதியில் உள்ளனர். அடுத்த சில வாரங்களில் தங்களது பொருட்களை இறக்குமதி செய்ய அதிக பணம் தேவைப்படும் என்பதால், அதை இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டனர். பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!: டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 5 வரை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ. 3ம் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

தமிழகத்தில் மின்வெட்டு குறையும் சூழல்


சென்னை, மே.22 - காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 695 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு குறைய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் கடுமையாக மின்வெட்டு நிலவி வரும் வேளையில் கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 ஆயிரத்து 500 மெகா வாட்டுக்கும் அதிகமாக கிடைத்தது. இதனால், சென்னை உள்பட தமிழகத்தில் கிராமங்கள் வரை மின் வெட்டு நேரம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காற்றின் வேகம் மிகவும் மந்தமாக இருந்தது. இதையடுத்து காற்றாலை மின் உற்பத்தி 450 மெகாவாட்டாக குறைந்தது. இதற்கிடையே கடந்த 17ந்தேதி முதல் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 18ந் தேதியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 1,688 மெகா வாட்டாக இருந்தது. இது கடந்த 19ந் தேதி மாலை 6.55 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றின் வேகம் மேலும் தீவிரம் அடைந்து, காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 695 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், 54.265 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கிராமங்களிலும் மின்வெட்டு நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.

முன்னாள் அமைச்சர் நேருவிடம் 1 மணி நேரம் விசாரணை


திருச்சி,மே.22 - திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நேற்று திமுக முன்னாள் அமைச்சர் நேருவிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் நேரு நேற்று காலை 10.15 மணிக்கு திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலிசார் அலுவகத்திற்கு சென்றார். அவரிடம் டி.எஸ்.பி(பொ)ரங்கராஜ் விசாரணை நடத்தினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை நடத்தியபோது சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை நடந்தபோது நேரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேருவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அவர் தனது வக்கீலுடன் சென்றார். விசாரணையின்போது, நேருவிடம், கட்சியில் என்னென்ன பொறுப்புகள் வகித்தீர்கள், இதுவரை 3 முறை அமைச்சராக இருந்தபோது என்னென்ன இலாகாக்களில் பொறுப்பு வகித்தீர்கள் என்பதையும், தற்போதைய சொத்து விவரங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டனர். விசாரணை முடிந்து 11.15 மணிக்கு நேரு வெளியே வந்தபோது அவரிடம் விசாரணை விவரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்று விட்டார். விசாரணை விவரம் குறித்து டி.எஸ்.பி ரங்கராஜனிடம் கேட்க அலுவலகத்திற்கு சென்றபோது, அவரும் பத்திரிக்கையாளர்களை பார்க்க மறுத்து விட்டார்.

சனி, மே 19, 2012

ஸ்டிரைக் சட்டவிரோதம் - பணிக்கு திரும்புங்கள் - அஜீத்சிங்


புதுடெல்லி. மே.- 20 - ஏர் இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் அவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஏர் இந்தியாவின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் கணிசமான அளவுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்த போதிலும் கூட அதனை பொருட்படுத்தாமல் பைலட்டுகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த ஸ்டிரைக் போராட்டம் சட்டவிரோதமானது என்றும் இவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமையை சமாளிக்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு பைலட்டுகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அஜீத் சிங் கேட்டுக்கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுதாரி சரண் சிங் விமான நிலையத்தில் புதிய டெர்மினலை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு அஜீத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில் - நீதிபதி தர்மாதிகாரி கமிட்டி அறிக்கை விரைவில் வர இருப்பதால் இவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அவசியமே இல்லை என்றும் கூறினார். பைலட்டுகளின் கோரிக்கைகள் குறித்து இக்கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தர இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கமிட்டியிந் அறிக்கை கிடைத்ததும் பைலட்டுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 30,000 கோடி நிதி உதவி செய்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம் மட்டுமே பயன்படாது. ஏர் இந்தியா நிறுவனத்தை சிறப்பாக நடத்த விமானிகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். பைலட்டுகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. எனவே பைலட்டுகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெள்ளி, மே 18, 2012

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு


சுற்றுலா வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் மகமத் நகரை சேர்ந்த 16 பெண்களும், 4 வாலிபர்களும் என மொத்தம் 20 பேர் நேற்று ஒரு வேனில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அந்த வாகனத்தை ஒகேனக்கல்லில் நிறுத்தி விட்டு பெண்கள் 16 பேரும் காவிரி ஆற்று பகுதியில் குளிக்க சென்றனர். வாலிபர்கள் அருண் என்கிற ஜஸ்டிஸ்(வயது19), திணேஷ்(18), யஸ்வந்த்(18), சிலம்பரசன்(24) ஆகிய 4 பேரும் தொங்கு பாலம் வழியாக நடந்து சென்று கோத்திக்கல் ஆலமரம் பகுதியில் குளிக்க சென்றனர். கோத்திக்கல் ஆலமரம் பகுதி ஆழமான பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்து உள்ளனர். இதை அறியாமல் அந்த வாலிபர்கள் 4 பேரும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது ஒரு வாலிபர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த மற்ற வாலிபர்கள் 3 பேரும் அவரை மீட்க முயன்றனர். இதில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். உடனே இது குறித்து அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீனவர்கள், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கி இறந்த வாலிபர்களின் உடல்களை மீட்டனர். இது அவர்களுடன் சுற்றுலா வந்த பெண்களுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆலமரம் பகுதிக்கு விரைந்து சென்று இறந்த அந்த 4 வாலிபர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது தொடர்பாக இறந்த அந்த வாலிபர்களின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த 4 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்த அருண் என்கிற ஜஸ்டிஸ், திணேஷ் ஆகிய 2 பேரும் அண்ணன்-தம்பி ஆவார்கள். யஸ்வந்த் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். சிலம்பரசன் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

இந்தியாவில் கணிணி விற்பனையில் லினோவா முதலிடம்


பெங்களூர், மே. - 18 - இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சீன நிறுவனமான லினோவாவின் கணிணிகளே அதிக அளவுக்கு விற்பனையாகி உள்ளன. டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்களின் கணிணிகள் சரிவையே சந்தித்துள்ளன. இந்தியாவில் நடப்பு காலாண்டில் மட்டும் 26.30 லட்சம் கணிணிகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் காலாண்டைக் காட்டிலும் 7.7 விழுக்காடு அதிகமாகும். நடப்பு 2012-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி- மார்ச்) டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களின் கணிணிகளைவிட சீனாவின் லினோவா நிறுவன கணிணிகளே அதிகம் விற்பனையாகி உள்ளன. கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் லினோவா நிறுவனமானது கணிணி விற்பனையில் 4-வது இடத்தில்தான் இருந்தது. முதலிடத்தில் டெல் இருந்தது. ஆனால் டெல் இப்பொழுது 2-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. 3-வது இடத்தில் எச்.பி. நிறுவனம் இருக்கிறது. பொதுவாக லேப்டாப்களின் விற்பனை அதிகரித்து வருவதால் டெஸ்க்டாப் கணிணிகளின் விற்பனை சரிந்துள்ளது. அசெம்பிள் செய்யப்படும் கணிணிகளின் விற்பனையானது 38 விழுக்காடு அளவு சரிவை சந்தித்துள்ளது. நடப்பு 2012-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சர்வர்கள் விற்பனை மூலம் 75.45 கோடி டாலராக (ரூ.4,000 கோடி) உயரும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சர்வர்கள், ஸ்டோரேஜ், நெட்வொர்க்கிங் சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு சாதனங்கள் பிரிவின் மொத்த வருவாயில் சர்வர்களின் பங்கு மட்டும் 37 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டிற்குள் இந்த வருவாய் 300 கோடி டாலராக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

ரகளைசெய்த ஷாருக்கானுக்கு மும்பை மைதானத்தில் நுழையதடை


மும்பை, மே. - 18 - மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ்டுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷாருக்கானை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பது என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில், ஷாருக்கான் மும்பை கிரிக்கெட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கானை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வியாழன், மே 17, 2012

சர்வதேச விமானங்களை ஏர்இந்தியா இயக்கியது


புதுடெல்லி, மே - 17 - பைலட்டுகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான போக்குவரத்து சேவையை சகஜ நிலைக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு நேற்று சர்வதேச விமானங்களை இயக்கியது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் சுமார் 200 பைலட்டுகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்த போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு கூறியிருந்த போதிலும்கூட இவர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை. பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நேற்று 9 வது நாளாக நீடித்தது. பைலட்டுகளின் போராட்டத்தால் கடந்த 8 நாட்களாக சர்வதேச விமான போக்குவரத்தை ஏர் இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தனது விமான போக்குவரத்து சேவையை சகஜ நிலைக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏர் இந்தியா நேற்று சர்வதேச விமானங்களை இயக்கியது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த எட்டு நாட்களாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனால் நேற்று ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு சர்வதேச விமானங்களை இயக்கியதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் தங்களது விமான போக்குவரத்து சேவை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று டெல்லி-பாரீஸ்-நியூயார்க், டெல்லி-பிராங்பர்ட்-சிகாகோ விமானங்கள் இயக்கப்பட்டன. டெல்லி - ஷாங்காய், டெல்லி - லண்டன் சர்வதேச விமானங்களும் நேற்று இயக்கப்பட்டதாக அவர் அறிவித்தார். மும்பை - லண்டன், மும்பை - ஷாங்காய் விமான சேவை டெல்லி - லண்டன், டெல்லி- ஷாங்காய் விமான சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு டிக்கெட் பதிவு செய்தவர்கள் நேற்று இந்த சர்வதேச விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முடிவுகட்ட மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பைலட்டுகளுடன் பேச்சு நடத்த தயார் என்று சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் நேற்று மாலை வரை புலப்படவில்லை.

புதன், மே 16, 2012

ஏர் இந்தியா பணிநிறுத்தத்தால் பயணிகள் அவதி


இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் ஏழாவது நாளாகவும் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறைந்தது 14 ஏர் இந்தியா விமானங்களின் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் மாட்டிக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிறுவனத்திடமிருந்து முறையான அறிவுறுத்தல்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, உலகம், மன்மோகன் சிங், காங்கிரஸ் கடந்த சில தினங்களில் மட்டும் 70க்கும் அதிகமான விமானிகளை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதேவேளை, பணிநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விமான சேவைகளுக்கான அமைச்சர் அஜித் சிங் விமானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 8 சர்வதேச சேவைகளையும் 6 உள்ளுர் சேவைகளையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்துசெய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதிய போயிங் 787 விமானங்களுக்கான பயிற்சிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைக்கு மத்தியில் குறைந்தது 200 விமானிகள் கடந்த செவ்வாய்க் கிழமையிலிருந்து சுகயீன லீவு போராட்டத்தில் உள்ளனர். 2007ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்திய விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானிகளுக்கு புதிய விமானங்களை ஓட்ட பயிற்சியளிக்கும் தீர்மானத்தை ஏர் இந்தியா விமானிகள் எதிர்க்கின்றனர். விமான நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னரே, இந்த புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போடப்பட்டதால் தமக்கே பயிற்சியில் முன்னுரிமை வேண்டும் என்று விமானிகள் வாதிடுகின்றனர். பணி நிறுத்தப் போராட்டம் தொடங்கிய மறுநாளே 'இந்தப் போராட்டம் சட்டமுரணானது, விமானிகள் வேலைக்குத் திரும்ப வேண்டும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. எனினும் பெரும்பாலான விமானிகள் வேலைக்குத் திரும்ப மறுத்துவருகின்றனர். இந்த நிலைமையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நோக்கிச் செல்லும் விமான சேவைகளுக்கான பயணச் சீட்டு விநியோகத்தை மே 15ம் திகதி வரை நிறுத்திவைத்துள்ளதாக ஏர் இந்தியா கடந்த வாரம் தெரிவித்திருந்தது. கடந்த வெள்ளியன்று, விமான சேவைகளுக்கான அமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நிதி நெருக்கடியில் இருக்கின்ற இந்த ஏர் இந்தியா நிறுவனம் அண்மைக்காலமாகவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விமானவிபத்தில் பிரபலகுழந்தை நட்சத்திரம் தரிணியும் பலியானார்


சென்னை, மே.- 16 - நேபாள விமான விபத்தில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது: இந்த விபத்தில் இறந்த 15 பேர்களில், பிரபல குழந்தை நட்சத்திரம், தரணியும் ஒருவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்த விபரம் வருமாறு:- 108 திவ்ய வைணவத் தலங்களில் முக்திநாத் என்னும் தலம் நேபாள நாட்டில் உள்ளது. கோடை காலத்தில் இந்த தலத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் சென்று வருவதுண்டு. முக்திநாத் தலத்துக்கு செல்பவர்கள் காட்மண்ட்டில் இருந்து விமானத்தில் திபெத் எல்லை அருகே தொரோஸ்லா இமயமலைக் கணவாய் அருகே உள்ள ஜோம்சோம் விமான நிலையத்துக்கு சென்று பிறகு காரில் செல்லவேண்டும். நேற்று முன்தினம் அப்படி சென்ற 21 யாத்ரீகர்களின் விமானம் எதிர்பாராதவிதமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அக்னி ஏர் என்னும் விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் டோர்னியர் ரகத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,600 மிட்டர் உயரத்தில் இருக்கும் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மலையில் மோதி நொறுங்கியது. விமானத்தில் இருந்த 21 பேரில் 15 பேர் பலியானார்கள். அவர்களில் 11 பேர் யாத்ரீகர்கள். 2 பேர் விமானிகள். 2 பேர் டென் மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள். பலியான வர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவி லதா. மற்றொருவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டாச் சாரியார் எல்.எஸ். சுதர்சனம். லதாவின் கணவர் ஸ்ரீகாந்த், அவரது 2 மகள்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்கள். பொகார நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல் கள் பொகார மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிறகு காட்மண்டுக்கு எடுத்து வரப்பட்டது. பலியானவர்கள் யார்​யார் என்ற விசாரணை நடந்தது. அப்போது பலியான வர்களில்மேலும் 2 பேர் தமிழகத்தைசேர்ந்தவர்கள் எனதெரிய வந்தது. ஒருவர் பெயர் சொர்ணலட்சுமி, மற்றொருவர் கோபி . இரு வரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி உறுதியான தகவலை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பலியான தமிழர்களின் உடல்களை நேற்றே சென்னை கொண்டு வர தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அசோகன் ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ாவெற்றிச்செல்வன்ா இப்படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி. மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் வெள்ளி நட்சத்திரம் சத்யம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நேபாள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்ற போதுவிபத்தில் சிக்கி இறந்துள்ளார். இது பற்றி ாவெற்றிச்செல்வன்ா தமிழ்திரைப்பட இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார். ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்நிலையில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த பா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடத்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எப்போதும் கலகலப்பாக பேசுவார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார். அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. 25-ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள் என்று கூறினார். இது தான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலி. தருணியை எனக்கு அறிமுகப்படுத்திய ருக்மணிதான் அவர் இறந்த தகவலை நேற்று காலை தெரிவித்தார். இவ்வாறு ருத்ரன் கூறினார். விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளம் விரைந்துள்ளனர். உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய், மே 15, 2012

அணு விஞ்ஞானியை கொலை செய்த இஸ்ரேலிய உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்!


டெக்ரான்: ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியாக அலி முகமதுவை படுகொலை செய்த வழக்கில் இஸ்ரேலிய உளவாளியான மஜித் ஜமாலி என்பவர் இன்று தூக்கிலிடப்பட்டார். 2010-ம் ஆண்டு அணுவிஞ்ஞானி அலி முகமது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மஜித் ஜமாலி என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துடன் இணைந்து அலி முகமதுவை அவர் படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறையில் இருந்த அவர் இன்று தூக்கிலிடப்பட்டார். ஈரானின் அணு விஞ்ஞானிகள் 4 பேரை அடுத்தடுத்து இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கும் வகைய்ல் டெல்லி, பாங்காங் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலிய தூதரகங்களைக் குறிவைத்து ஈரானியர்கள் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் நடந்த விமானவிபத்து 11 இந்தியர்கள் உட்பட 15 பேர்பலி


காட்மாண்டு, மே - 15 - நேபாள நாட்டில் ஜாம்சம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது 21 பேருடன் சென்ற ஒரு தனியார் விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 இந்தியர்கள் உட்பட தில் பயணம் செய்த 15 பயணிகள் உடல்கருகி பலியானார்கள். முன்னதாக இந்த விமானம் ஒரு மலை உச்சியில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்ததாக மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் 11 இந்தியர்களும், மற்றும் சில நேபாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 9 உடல்கள் நேற்று மதியம் வரை மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விமானம் நொறுங்கிக் கிடந்த பகுதியில் இருந்து 3 விமான ஊழியர்கள் மற்றும் 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் சொன்னார். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பொகாரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 இந்தியர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான தனியார் விமானம் ஜாம்சம் விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது. வழியில் இது மலை உச்சியில் மோதியது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மற்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் எந்தெந்த நாட்டு பயணிகள் பயணம் செய்தார்கள் என்பதில் குழப்பம் நீடிப்பதால் சரியான விவரங்கள் தெரியவில்லை. இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஞாயிறு, மே 13, 2012

21 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதியது!


நேபாளத்தில் 21 பயணிகளுடன் சென்ற அக்ரி ஏர் என்ற தனியார் விமானம் மலையில் மோதி நொறுங்கியது. ஜோம்சோம் நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 12 இந்தியர்களும் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் இதுவரை 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ..

அமெரிக்க பீரங்கிகளை வாங்க மத்திய கவுன்சில் ஒப்புதல்


புது டெல்லி, மே. 13 - அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க தயாரிப்பான ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புடைய 145 இலகு ரக எம் 777 பீரங்கிகள், ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புடைய 65 எல்-70 ஏர் கன் ரேடார்கள், ரூ.480 கோடி மதிப்புடைய பயிற்சி கப்பல், ரூ.350 கோடி மதிப்புடைய கூட்டு விமானப்படை மற்றும் ராணுவ சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவாடங்கள் ஆகியவை கொள்முதலுக்கான கவுன்சில் அனுமதித்துள்ளது. பி.ஏ.இ. சிஸ்டம் நிறுவனத் தயாரிப்பான இத்தகைய பீரங்கிகளை சீன எல்லைப் பகுதிகளான காஷ்மீரின் லடாக், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பாங்கான களங்களில் பயன்படுத்த முடியும். இதன் எடை குறைவு என்பதால் ஹெலிகாப்டர்கள் மூலமாக சுலபமாகவும், துரிதமாகவும் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, மே 12, 2012

ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 22-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் எண்ணெய் கப்பல் கடத்தல்- 11 இந்தியர்களின் கதி என்ன?


லண்டன்: லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை அரபிக் கடற்பரப்பில் ஓமன் அருகே சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். ஓமன் கடற்கரையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவருடன் இந்தோனோசியா நோக்கி எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்து கடத்திச் சென்றுத் தாக்கினர். கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் 11 இந்தியர்களும் இருந்தனர். கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. கடத்தப்பட்டோரை மீட்க அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சோமாலிய கடற்படையினரிடம் தற்போது 17 கப்பல்களும் 300க்கும் மேற்பட்டோரும் பிணைக் கைதிகளாக சிக்கியிருக்கின்றனர். சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து சரக்குக் கப்பலைப் பாதுகாக்க அந்தந்த நாட்டு கடற்படையினர் கப்பல்களில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சோமாலிய கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது.

ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு அஜித்சிங் வேண்டுகோள்

புதுடெல்லி, மே 12 - ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துக்கழக துறை அமைச்சர் அஜித்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் சுமார் 200 பைலட்டுகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4 வது நாளாக இந்த வேலை நிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் ஒரு ஆலோசனையை கூறியுள்ளார். பைலட்டுகள் தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினால் அவர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று அஜித்சிங் கூறியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனமும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள பைலட்டுகளும் தங்களது பிடிவாத நிலையை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிடிவாதமாக இருப்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. பேச்சு நடத்து வேண்டும் என்று பைலட்டுகள் விரும்பினால் அவர்கள் முதலில் பணிக்கு வரவேண்டும். அதன்பிறகு அவர்களது பிரச்சனைகளுக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண முடியும். பைலட்டுகளின் இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டே கூறிவிட்டது. எனவே பைலட்டுகள் தங்களது பிடிவாதத்தை தளர்த்தி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அஜித்சிங் கேட்டுக்கொண்டார். முன்னதாக பைலட்டுகள் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அஜித்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாணாமல் பிரச்சனையை அரசு இழுத்துக்கொண்டே போவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அஜித்சிங் மேற்கண்ட பதிலை அளித்தார்.

வெள்ளி, மே 11, 2012

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


புதுடெல்லி, மே - 11 - இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சுற்றுலா துறையில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் சுற்றுலா துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்றும், இது 9 சதவீத வளர்ச்சி என்றும் குறிப்பிட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 57 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர் என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்த விபரங்களை இந்திய சுற்றுலா துறை சேகரிக்கவில்லை என்றாலும் சுங்கத்துறை வாயிலாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன என்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுங்கத்துறை இதுபோன்ற புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஊரக சுற்றுலா திட்டத்தை அபிவிருத்தி செய்யவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். சாலைகள், பூங்கா வடிவமைப்பு, கழிவு பராமரிப்பு, சுகாதார மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். கிராமப்புற சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.

ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் தொடர்கிறது 22 விமானங்கள் ரத்து


புதுடெல்லி, மே - 11- ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் ஸ்டிரைக் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. விமானிகளின் இந்த போராட்டத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஏர் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விமானிகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி விமானிகள் நேற்று 3-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினர்.இதனால் 23 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி வர வேண்டிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவல்களை ஏர் இந்தியா அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 200 விமானிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், மே 10, 2012

ரூ.1420 கோடியில் 162 கி.மீ புதிய சாலை: முதல்வர் அறிவிப்பு



சென்னை, மே.10 - மாமல்லபுரத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்க சிங்கப்பெருமாள் கோயில் ஸ்ரீ பெரும்புதூர் - திருவள்ளூர், பெரியபாளையம் - காட்டுப்பள்ளி வரை ரூ.1420 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 110 விதியின் கீழ் சட்டசபையில் அவர் வாசித்த அறிக்கை வருமாறு:-

வேளாண்மைத்துறையின் வேகமான வளர்ச்சியிலும், தொழில் துறையின் துரிதமான முன்னேற்றத்திலும், ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதிலும் சாலை கட்டமைப்பு வசதி இன்றியமையாததாக விளங்குவதால்தான், ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி முக்கிய பங்கினை வகிக்கிறது. சாலை கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கிராமப்புறங்களுக்கு சிறந்த சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதிலும், மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பதிலும், ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதிலும், புதிய சாலைகளை அமைப்பதிலும், ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், பயண நேரம் மற்றும் வாகன இயக்கச் செலவினை குறைக்கும் வண்ணமும், புதிய பாலங்கள் அமைத்தல், வட்டச் சாலைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு சாலைப் பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படும். இதன்படி, கொள்ளிட ஆற்றின் குறுக்கே திருச்சி மாநகரத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளதால், அங்கு புதிய நான்கு வழி பாலம் அமைக்கும் பணியும், அணுகு சாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் அமைக்கும் பணியும், மற்றும் சாலை சந்திப்பு மேம்பாடு போன்ற பணிகளும் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இதே போன்று, கரூர் மாவட்டத்தில் பசுபதி பாளையம் அருகில் கரூர்​வாங்கல் சாலையையும், நாகப்பட்டினம்​கூடலூர்​மைசூர் சாலையையும் இணைக்கும் தரைவழிப்பாலம் பழுதடைந்துள்ளதால், அங்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட பாலம் ஒன்று அமைக்கப்படும்.

மாமல்லபுரத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், 1420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 162 கிலோ மீட்டர் nullநீளமுடைய புதிய வழித்தடம் சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரிய பாளையம், புதுவயல், ஆகிய ஊர்களின் வழியாக காட்டுப்பள்ளி வரை சென்னை எல்லை சாலை பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இத் திட்டத்தின்படி 83.20 கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கெனவே உள்ள 78.60 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.

மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்nullர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு முதற்கட்டமாக வட்ட மற்றும் ஆரச்சாலைகள் அமைப்பதற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு புறவழிச்சாலைகள் அமைப்பதற்கு விரிவான திட்டம் தயாரிக்கப்படும். மேலும், புதிதாக சாலைகள் அமைகிறபோது அல்லது மேம்படுத்த திட்டமிட்டும் போது, அந்தச் சாலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வளர்ச்சியடையும் வகையில் சாலை கட்டமைப்பு வளையம், அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் திட்டம் சென்னை வெளிவட்டச் சாலை அமையும் பகுதியில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையில் என்னால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்களின் மூலம், தமிழகத்திலுள்ள சாலைப் போக்குவரத்து மேன்மை அடைவதுடன், நகர்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமுமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடைய வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

புதன், மே 09, 2012

10 விமானிகள் நீக்கம்: ஏர்-இந்தியா அதிரடி



புதுடெல்லி, மே 9 - போராட்டம் நடத்திய 10 விமானிகளை ஏர் இந்தியா நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் விமானிகள் தொழிற்சங்க அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அவ்வப்போது நிதி உதவி அளித்து வருகிறது. தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் விமானங்களை ஓட்ட முடியாது என்றும் சுமார் 160 ஏர் இந்தியா நிறுவன விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 10 விமானிகள் பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை ஏர் இந்தியா நிறுவனம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியது. இதனால் ஏர் இந்தியாவின் 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. டெல்லி - டொரண்டோ, டெல்லி - சிகாகோ, மும்பை -நியூயார்க், மும்பை - ஹாங்ஹாங் ஆகிய இந்த 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். விமானிகள் கிடைக்காததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய விமானிகள் தொழிற்சங்க அங்கீகாரத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது. விமானிகளின் போராட்டத்திற்கு காரணமானவர்கள் மீது ஏர் இந்தியா நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் கூறினார். வேலை நிறுத்தம் குறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. இவர்கள் உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு கொடுத்துவிட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 160 விமானிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏர் இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை விமானிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக இருக்கிறது



திருவனந்தபுரம்,மே.9 - எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமை தளபதி வி.கே. சிங் கூறியுள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் நாளை ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வி.கே. சிங் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ராணுவமானது வெளியில் இருந்து வரும் எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறது. அதற்கான தளவாடங்கள், போர் கருவிகள் போதுமான அளவில் உள்ளது என்றார். உங்கள் வயது விவகாரத்தை நீங்கள் கைவிட்டுவிட்டீர்களா அல்லது மத்திய அரசு கைவிட்டுவிட்டதா என்று நிருபர்கள் கேட்டதற்கு இந்த பிரச்சினையை நான் அனைவரும் கைவிட்டுவிட வேண்டும் என்று கூறி தப்பித்துக்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் உம்மன்சாண்டி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். வடகிழக்கு மாநிலங்களின் வளமும் பலதரப்பட்ட கலாசாரம் என்ற தலைப்பில் இந்த புத்தகம் 3 பகுதிகளாக வெளியிடப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வி.கே. சிங் ரகசியமாக எழுதிய கடிதம் வெளியாகிவிட்டது. அதில் இந்திய ராணுவத்திற்கு போதுமான ஆயுதங்கள் இல்லை. இருக்கும் ஆயுதங்களும் பழமையானவைகள் என்று கூறியிருந்ததாக செய்தி வெளியாகியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையொட்டி வெளிநாடுகளில் ஆயுதம் வாங்கும் முயற்சியில் மத்திய அரசும் ராணுவ அமைச்சகமும் மும்முரமாக இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், மே 08, 2012

ஹஜ் பயணிகளுக்கு மானியம் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது மார்க்க கடமைகளில் ஒன்றாகும். அதன்படி இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள், அது குறித்து முன்கூட்டியே முன்பதிவு செய்தால்,குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான செலவினத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு அவர்களுக்கு மானியமாக வழங்குகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து,10 ஆண்டுகளுக்குள் அதனை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சிறுபான்மையினத்தவர்களை கவருவதற்காக ஹஜ் பயணத்தை மத்திய அரசு அரசியலாக்கிவிட்டதாக சாடிய நீதிமன்றம்,புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்குவது சரியானதல்ல என்றும் கூறியது. மேலும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விவரங்களையும்,மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு எந்த முறையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கான ஒதுக்கீட்டில்,தனியார் சேவைதாரர்கள் மூலம் வருபவர்களையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுமாறு மும்பை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இன்றைய விசாரணையின்போதே,உச்ச நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பித்தது.

தங்கநகை மீது வரிவிதிப்பு வாபஸ் பார்லி.யில் பிரணாப் அறிவிப்பு

புதுடெல்லி,மே.- 8 - தங்கம் மற்றும் வைர நகைகள் மீது பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கலால் வரி ரத்து செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அறிவித்தார். பாராளுமன்றத்தில் 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு கலால் வரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் நகை கடைக்காரர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். நகைக்கடைகள் மூடப்பட்டன. எதிர்ப்பு வலுவாக இருப்பதை அறிந்த நிதி அமைச்சர் பிரணாப் நேற்று தங்கம்,வைர நகைகள் மீது விதிக்கப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். முத்திரை பதிக்கப்பட்ட நகைகள், முத்திரை பதிக்கப்படாத நகைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் நகைகளுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு மிகவும் சொற்பமே. அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில்தான் இந்த சொற்ப வரி விதிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அந்த கலால் வரி விதிப்பை வபாஸ் பெறப்படும் என்று நிதி மசோதாவை விவாதத்திற்கு தாக்கல் செய்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

ஞாயிறு, மே 06, 2012

எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகள் தயார்..2 நகரங்களில் நிறுத்தப்படும்!

டெல்லி: இந்தியாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் முழுமையாக தயாராகி விட்டது. இந்த வகை ஏவுகணைகளை விரைவில் 2 நகரங்களில் நிறுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதி நவீன ஏவுகணைகளை வைத்துள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது. மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமான டிஆர்டிஓ இதை உருவாக்கியுள்ளது. மேலும் இதை வெற்றிகரமாகவும் சோதித்துப் பார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள், 2000 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவிச் சென்று எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும். இதை 2016ம் ஆண்டுவாக்கில் 5000 கிலோமீட்டர் வரை மேம்படுத்தும் திட்டத்தையும் டிஆர்டிஓ வைத்துள்ளது. இதுகுறித்து டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் கூறுகையில், தற்போது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் தயாராகி, ஆயத்த நிலைக்கு வந்து விட்டது. இதை முதலில் 2 நகரங்களில் நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நகரங்கள் எது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசியல் மட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார். பிருத்வி ஏவுகணையின் பல்வேறு வகைகளைக் கொண்டு இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சரஸ்வத் இதுகுறித்துக் கூறுகையில், மொத்தம் 6 முறை பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் புவியின் வளி மண்டலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் என இரு மட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ஏவுகணைகளைக் கண்டறிவது, அதை தடுத்து தாக்குவது உள்ளிட்ட அனைத்தும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டமானது தானாக இயங்கக் கூடியது. நமது எல்லைக்குள் எதிரி நாட்டு ஏவுகணைகள் ஊடுறுவுமானால் தானாகவே சென்று அதைத் தாக்கி அழிக்கும். அதை நிறுத்து வேண்டுமானால் மட்டுமே நாம் தலையிட்டு ஏவுகணையைக் கட்டுபடுத்த வேண்டும் என்றார்.. அமெரிக்காவின் பாட்ரியாட் 3 ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைக்குச் சமமானது இந்தியா உருவாக்கியுள்ள ஏவுகணை. 1990ல் நடந்த வளைகுடாப் போரின்போது பாட்ரியாட் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டன என்பது நினைவிருக்கலாம். இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக சோதனையிட்டுப் பார்த்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக அளவில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட ஏவுகணைகள், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, மே 05, 2012

இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் அறிக்கை தாக்கல்

புது டெல்லி,மே. - 6 - இலங்கை சென்று திரும்பிய அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று நேரில் சந்தித்து அறிக்கை அளித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஏப்ரல் 16 முதல் 21-ந் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டது. அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை பார்வையிட்டது. இந்தியாவின் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் எம்.பி.க்கள் குழு பங்கேற்றது. இக்குழு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தாங்கள் சேகரித்த விவரங்களை அறிக்கையாக கொடுத்தனர். பிரதமருடனான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் கண்ணியமான உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களிடம் கூறியதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசியல் தீர்வுக்கான அந்நாட்டு நாடாளுமன்ற குழுவுடன் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண வேண்டிய பொறுப்பு ராஜபக்சேவுக்கு இருக்கிறது என்றும் பிரதமரிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சுஷ்மா கூறினார். குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடம் இலங்கைப் பயணம் பற்றிய கருத்தை மன்மோகன்சிங் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் மற்றும் மத்திய இணை அமைச்ச வி. நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர். பிரதமருடனான சந்திப்புப் பெற்ற செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், இருதரப்பு உறவுகளுக்கும் இடையே சிக்கலான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயணம் இது என்று பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார் தாகூர். இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் அறிக்கை தாக்கல் புது டெல்லி,மே. - 6 - இலங்கை சென்று திரும்பிய அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று நேரில் சந்தித்து அறிக்கை அளித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஏப்ரல் 16 முதல் 21-ந் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டது. அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை பார்வையிட்டது. இந்தியாவின் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் எம்.பி.க்கள் குழு பங்கேற்றது. இக்குழு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தாங்கள் சேகரித்த விவரங்களை அறிக்கையாக கொடுத்தனர். பிரதமருடனான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் கண்ணியமான உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களிடம் கூறியதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசியல் தீர்வுக்கான அந்நாட்டு நாடாளுமன்ற குழுவுடன் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண வேண்டிய பொறுப்பு ராஜபக்சேவுக்கு இருக்கிறது என்றும் பிரதமரிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சுஷ்மா கூறினார். குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடம் இலங்கைப் பயணம் பற்றிய கருத்தை மன்மோகன்சிங் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் மற்றும் மத்திய இணை அமைச்ச வி. நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர். பிரதமருடனான சந்திப்புப் பெற்ற செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், இருதரப்பு உறவுகளுக்கும் இடையே சிக்கலான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயணம் இது என்று பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார் தாகூர்.

வெள்ளி, மே 04, 2012

சொல்லாமல் கொள்ளாமல் நேட்டோ ஏவுகணைகளை தாக்கி தூள் தூளாக்குவோம்-ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகிக்' கிடக்கிறது. இந்த நிலையில் நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை தனது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்துள்ள அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது தாக்குதல் ஏவுகணைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவை மேலும் கடுப்பாக்கியுள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டே ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த ஏவுகணைத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவும், நேட்டோவும், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வர வேண்டும்.இல்லாவிட்டால் பதிலடி தருவோம் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ தலைமைத் தளபதி நிக்கோலாய் மகரோவ் அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிலைமை மோசமானால், நாங்களாகவே நேட்டோ ஏவுகணை தளங்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தும் நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். இதை அமெரிக்காவும், நேட்டோவும், தவிர்க்கும் என்று நம்புகிறோம். கிழக்கு ஐரோப்பாவில் தனது ஏவுகணைகளை நிறுத்தி வருவதை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அதற்கு ரஷ்யா பொறுப்பாக முடியாது என்றார் அவர். ஆனால் ஈரானிடமிருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல் அபாயத்திலிருந்து கிழக்கு ஐரோப்பாவைக் காக்கவே ஏவுகணைகளை நிறுத்துவதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதே ஒரேயடியாக ரஷ்யா நிராகரித்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து பிடிவாதமாக இதை செயல்படுத்தி வருவது ரஷ்யாவின் தாக்குதல் பலத்தை கேலி செய்வது போலாகும் என்று ரஷ்யா கோபத்துடன் கூறியுள்ளது. தனது முதல் கட்ட ஏவுகணைப் பாதுகாப்பு வளையத் திட்டத்தின் கீழ் துருக்கியில் அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர்க் கப்பல்களை அமெரிக்கா கொண்டு வந்து நிறுத்தியது. இதையடுத்து ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளிலும் அது இதை கொண்டு வந்தது. அடுத்து முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்குள்ளும் நுழையவுள்ளது. இதற்குப் பதிலடியாக போலந்து நாட்டுடனான தனது எல்லைப் பகுதியான கலினிகிராட் என்ற இடத்தில் ரஷ்யா தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவுக்கு நேரடியாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கான், ஈரான், சீனா விவகாரம் குறித்து இந்திய பயணத்தில் ஹிலாரி விவாதிக்கிறார்..

டெல்லி: இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது. ஹிலாரியின் இந்திய பயணம் நாளை மறுநாள் தொடங்குகிறது. கொல்கத்தாவுக்கு வருகை தரும் ஹிலாரி, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின் போது பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவன்ங்களை மேற்கு வங்கத்தில் அமைப்பது தொடர்பாக மமதாவுக்கு ஹிலாரி அழுத்தம் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது. பின்னர் மே 7-ந் தேதியன்று டெல்லியை வந்தடையும் ஹிலாரி 8-ந் தேதியன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் ஹிலாரி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த பயணத்தின் போது ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டு வெளியேறுவது பற்றியும் அந்நாட்டில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் கிருஷ்ணாவுடன் ஹிலாரி விவாதிக்கக் கூடும். மேலும் ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பாகவும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்துவது குறித்தும் ஹிலாரி வலியுறுத்தவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீன பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு ஹிலாரி வருவதால் நிச்சயம் தென்சீனக் கடல் விவகாரமும் இந்த ஆலோசனையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது. தென்சீனக் கடலில் சீனா ஒருபுறமும் இந்திய, அமெரிக்கா ஒருபுறமும் நின்று கொண்டு பதற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் தென்சீனக் கடல் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை ஹிலாரி கிருஷ்ணாவுடன் ஆலோசிப்பார் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.