செவ்வாய், ஜனவரி 08, 2013

நானும் பெண்களை மதிப்பவன் தான்....


நானும் பெண்களை மதிப்பவன் தான்.... பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவன்... நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை... உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கரையில் ஒரே ஒரு வேண்டுகோள்..... உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்.... அப்படி நீங்கள் அணியும் உடை.. ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது.. பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உருத்தலாய் தெரிகிறது... காமகொடூறன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது... அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை..... ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை... இதை நான் ஆணாதிக்க திமிறில் சொல்லவில்லை.. என் சகோதிரிகள் மீதிருக்கும் அக்கரையில் சொல்கிறேன்...nidurin.blogspot.com

காரைக்கால் கடலில் குளித்து மாயமான கல்லூரி மாணவன் உடல் கரை ஒதுங்கியது


காரைக்கால், ஜன.8/(மு.இ.) நேற்று மாலை காரைக்கால் கடலில் குளித்து மாயமான, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவன் சையது முகமது அன்சாரியின் உடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு கரை ஒதுங்கியது. காரைக்கால் சுண்ணாபுக்கார வீதியைச் சேர்ந்தவர் முகமது உஷேன் மகன் சையது முகமது அன்சாரி(21). இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை சுமார் 4 மணிக்கு, நண்பர்கள் 4 பேருடன் கடலில் குளித்த போது, அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, காரைக்கால் கடலோர காவல் நிலையம், நகர காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று பிற்பகல் வரை கடலில் மாயமான மாணவனை கரையோரத்தில் தேடிவந்தனர். இந்நிலையில், பிற்பகல் சுமார் 1 மணிக்கு, மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அங்குள்ள மீனவர்கள் கூறியதாவது: நேற்று மாலை கடல் சீற்றமாகவும், தண்ணீர் உள்வாங்கலாகவும் இருந்ததால், அலையில் சிக்கிய மாணவன் உடல் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது. அதனால்தான் நேற்று முழுவதும் உடல் கரை ஒதுங்கவில்லை. இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தண்ணீரின் அளவு கூடியதால் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்ட மாணவன் உடல் மீண்டும் அவர் குளித்த இடத்தின் அருகே கரை ஒதுங்கியுள்ளது. பொதுவாக, முகத்துவாரம் கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கடல் ஆழமாகவும், அலையின் சீற்றம் அதிகமாகவும் இருப்பதால், அலையில் சிக்கும் மாணவர்கள் உடல் கற்களில் மோதி நிலைதடுமாற செய்கிறது. எனவே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் எக்காரணம் கொண்டும் குளிக்க கூடாது என்றனர். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் கூறியதாவது: சுனாமிக்கு பிறகு காரைக்ககால் கடலின் தன்மை மாறியுள்ளது. முகத்துவாரம் அருகில் இந்த மாற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. மீனவர்களே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல அஞ்சுகின்றனர். கடற்கரை ஓரம் கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என விளம்பபர போர்டுகள் வைத்தும், காவலர்கள் கண்காணித்தும், அதையும் மீறி சென்று குளிப்போர் உயிர் இழக்க நேரிடுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காரைக்கால் கடல் குறித்து எச்சரிக்கை செய்யவேண்டும். காவலர்களும் கடற்கரையோரம் இனி கூடுதலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகள் அளவில் மிக விரைவில் இது குறித்து விழ்ப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வாகனங்களை ஓட்டும் போது செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள்


வாகனங்களை ஓட்டும் போது செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம் இது வசனம் அல்ல.. புகைப்படத்தில் இறந்து கிடப்பவருக்கும் அப்படிதா...ன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.. அழைத்தது எமன் என தெரியாமல் செல்போனை எடுத்து பேசியபடி பைக் ஓட்டியவர் விபத்தை தடுக்க காவல்துறை வைத்து இருந்த வேக தடுப்பில் மோதி பலியானார்.. இறந்து போன கணவனை மடியில் போட்டு மனைவி கதறி அழ.. பாசமாய் தூக்கி வளர்த்த தந்தை தன்னை பார்க்காமலே போய்விட்டாரே என்று அவரது மகள் அலறி துடிக்க.. கண்கள் கலங்கியபடி பதறி போய் நின்றனர் பார்த்தவர்கள்.. வாகனங்கள் ஓட்டும்போது உங்களுக்காக மனைவி, குழந்தைகள் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.. உங்கள் நலனுக்காக :nidurin.blogspot.com

திங்கள், ஜனவரி 07, 2013

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்


டெல்லியில் கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவர் இன்று டெல்லி சாகெத் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். ஆறாவது நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதனால் சிறுவர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன. நீதிபதி நம்ரிதா அகர்வால் முன்னிலையில் ஏனைய ஐவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணையை அறிந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டனர். பத்திரிகையாலர்கள், வழக்கறிஞர்களும் நீதிமன்ற அறைக்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 30 பேர் மட்டுமே அமரக்கூடிய நீதிமன்ற அறைக்குள் அனைவரையும் அனுமதித்தல், பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கூறிய நீதிபதி, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வீடியோவில் பதிவு செய்யும் படியும் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததும், அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் வியாழக்கிழமை வரவிருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணதண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அரசுக்கு சார்பிலான சாட்சியங்களாக மாற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

புதன், ஜனவரி 02, 2013

புதுச்சேரியில் பள்ளி மாணவி பலாத்காரம்


டெல்லியில் ஓடும்பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் , நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். புதுவை போலீசார் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். புதுச்சேரி திருப்புவனை பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வில்லியனூர் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மாணவி விழுப்புரம் பேருந்து நிலையில் தான் இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணை போது , தான் வழக்கமாக செல்லும் தனியார் பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாசலபதி ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை


அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். அமீரகத்தில் (Dubai)இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று. துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம். என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை. இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை. தடை செய்யப்பட்ட சில பொருள்கள்: 1. கஸகஸா 2. பான் 3. சுபாரி (beetal nuts), பான் பராக் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள். http://www.dubai.ae/en.portal?topic%2CArticle_000827%2C1%2C&_nfpb=true&_pageLabel=home இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை. உண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ். தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

காரைக்கால் சென்ற Avc கல்லுரி மாணவன் நேருக்குநேர் மோட்டார் சைக்கிளில் மோதி பலி.


காரைக்கால் சென்ற Avc கல்லுரி மாணவன் நேருக்குநேர் மோட்டார் சைக்கிளில் மோதி பலி. கொல்லாபுரத்தை சேர்ந்த மேலத்தெரு நாட்டக்ரா விட்டு ஜியாவுதீன் அவர்களின் மகன் இஃவான் இவர் Avc கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் இவரும் இவரது நண்பர் தவ்பிக் kvS.கல்லூரியில் படிக்கும் மாணவர் இவர்கள் இருவரும் புத்தாண்டுக்கு கொண்டத்திர்க்கு காரைக்காலை நோக்கி செல்லும் போது திருநள்ளாறு அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிலில் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலே இஃவான் இவர் Avc கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் இறந்து விட்டார் [இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிவூன்] தவ்பிக் RVS.கல்லூரியில்படிக்கும் மாணவர் சிறிது காயத்துடன் தப்பித்தார். எதிரில் வந்தா மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அம்பகரத்தூர்சேத்தூரை சேத்தூரை சேர்ந்த பாக்யராஜ் (21) மற்றும் சிங்காரவேலு (13) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அவரது மகனும் ஆபத்தான நிலையில் காரைக்காலில் அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டுள்ளனர்