புதுச்சேரி : ‘தானேÕ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்கள் 5வது நாளாக நேற்றும் முடங்கின. பல பகுதிகளில் மின்தடை உள்ள நிலையில் பூகம்ப பீதியும் ஏற்பட்டதால் இந்த பகுதி மக்கள் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய வீதிகளில் தவித்தனர். ÔதானேÕ புயலில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பெரிதும் திக்கப்பட்டன. புயல் கரை கடந்த போது இந்த 3 பகுதிகளையும் புரட்டி போட்டு விட்டு சென்றது. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. தொலைதொடர்பு வயர்கள் அறுந்துவிழுந்தன. வீடுகள், படகுகள் பலத்த சேதமடைந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. புயல் பாதிப்பில் இருந்து புதுவை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்பட்ட மக்களுக்கு படிப்படியாக தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. புயல் பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார். இந்நிலையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென பூகம்பம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் பூகம்ப பீதியில், அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து வீதிகளில் தவித்தனர். புயல் எச்சரிக்கையால் விழுப்புரம் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மின்தடையுடன் பூகம்ப தகவலும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூறாவளி காற்றில் விழுப்புரம்புதுவை சாலையில் திருநகர், கோலியனூர், நல்லரசன்பேட்டை, வளவனூர் பகுதியில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர். புதுவையிலும் பூகம்பம் ஏற்பட்டதாக நேற்று நள்ளிரவு திடீரென தகவல் பரவியது. இதில் பீதி அடைந்த மக்கள் குழந்தைகளுடன் மார்கழி குளிரில் வீதியில் தஞ்சம் அடைந்தனர். சிலர் தங்களது நகைகளையும் வெளியே எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்து கொண்டனர். பூகம்ப செய்தி காட்டுத்தீ போல் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதால் ஒட்டுமொத்தமாக புதுவை மக்கள் நேற்று இரவு முழுவதும் வீதியிலேயே தங்கினர். பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்து வீதிக்கு அழைத்து வந்தனர்.
நகர பகுதிகள் மட்டுமின்றி திருபுவனை, வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களிலும் பூகம்ப தகவலால் மக்கள் கலக்கம் அடைந்தனர். காவல் துறையையும், வானிலை ஆய்வு மையத்தையும் தொடர்பு கொண்டு விசாரித்தனர். Ôஜப்பான், இந்தோனேசியா, திரிபுராவில் ஏற்பட்ட நிலநடுக்க செய்தியின் எதிரொலியாக வதந்தி பரவியிருக்கலாம். புதுவை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு பூகம்ப ஆபத்து எதுவும் இல்லைÕ என்று ஒலிபெருக்கியில் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டபடி இருந்தனர். அதன்பின் அதிகாலை மக்கள் வீடுகளுக்கு சென்றனர். சுமார் ஆறு மணி நேரம் நீடித்த புரளியால் புதுவையில் பரபரப்பு நிலவியது.
வேகமாக பரவியது வதந்தி
‘தானேÕ புயல் சீற்றத்தால் புதுவையில் கேபிள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் டிவி பார்க்க முடியவில்லை. யாரோ எஸ்எம்எஸ் மூலம் கிளப்பி விட்ட பூகம்ப பீதி, காட்டுத்தீ போல் பரவி விட்டது. ஆனால் எப்எம் ரேடியோ செய்தி கேட்டு வதந்தி என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு காவல் துறையும், வானிலை மையமும் உடனடியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ததால் வீடுகளுக்குள் சென்றனர்...nidur.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக