ஞாயிறு, ஜனவரி 15, 2012

சாதிக் பாட்சா ஜாமீனில் விடுதலை!


பாவா நகரை பூர்வீகமாகக் கொண்டு நீடூர்-நெய்வாசல் எஹ்சான் தெருவில் வசித்துவரும் ஹனீபாவின் மகன் சாதிக் பாட்சா சந்தேகத்தின் பேரில் சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டதும்,மனநலம் பாதிக்கப்பட்டவராக மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கும் சாதிக் பாட்சாவின் கைது குறித்து வழமைபோல் சென்னை மாலைப்பத்திரிக்கை தீவிரவாதியாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்ததும்,  இவர்களின் பத்திரிக்கை தர்மம் என்ன என்பதும் நாம் அறிந்த விஷயம்தான்.
அப்போதே சாதிக் பாட்சாவின் கைது நிலவரம் பற்றி அரசியல் வட்டாரத்தில் இருக்கும் சில முஸ்லிம் இயக்க முன்னோடித் தலைவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். சாதாரண சந்தேக வழக்கில்தான் சாதிக்பாட்சா கைது செய்யப் பட்டிருப்பதாகவும், டிசம்பர் 6-க்குப்பின் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி அப்போதைக்கு சமாளித்த தமிழ் நாடு காவல் துறை பின்னர் காவிகளின் ஏவல் துறையோ என்று எண்ணும் அளவிற்கு சாதிக் பாட்சாவின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சமுதாய இயக்கத்தோரின் தொடர் முயற்சியால் சாதிக் பாட்சா நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக