திங்கள், பிப்ரவரி 13, 2012

தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளான நடுவண் அமைச்சர் சல்மான்குர்ஷித் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார்



இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27-விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு நான்கரை விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி நடுவண் அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. உத்திரபிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இந்த உள் இட ஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு;ள்ளது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது நடுவண் அரசு சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித் இஸ்லாமியர்களுக்கு 9-விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக சல்மான்குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர்களுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் சல்மான்குர்ஷித்தை, பிரதமர் மன்மோகன்சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக