ஞாயிறு, ஜூன் 24, 2012

47 நாட்கள் போராட்டத்திற்கு முடிவில்லை. ஏர் இந்தியா விமானிகள் இன்றுமுதல் காலவரைஅற்ற உண்ணாவிரதம்.


மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளில் ஒரு பிரிவினர் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை மத்திய அரசு சட்ட விரோதம் என அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விமானிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால் ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சகம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதனால் 47 நாட்களாக போராட்டம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என விமானிகள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 101 விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதலில் 10 பேர் கொண்ட விமானிகள் குழு உண்ணாவிரதத்தில் பங்கேற்பது என்றும் தொடர்ந்து விமானிகளின் குடும்பத்தினரும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக