வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ரம்ஜான் விளையாட்டு விழாவில் கத்திகுத்து ?


வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த புங்கனூர் கிராமத்தில் ரம்ஜான் பண்டிகையைகொட்டி 2 நாட்கள் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நூர் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் மன்சூர் அகமது செய்திருந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஜமாத்தின் தலைவராக கமாலுதீன் இருந்து வந்தார். கடந்த மாதம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய ஜமாத் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி கமாலுதீன் மகன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் ஒன்றிய செயலாளர் வஜ்ருதீன், ஜமாத்தின் பஞ்சாயத்தாராக பொறுப்பேற்ற முகமது இந்திரிஸ் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜமாத் பஞ்சாயத்தார் இந்திரிஸ் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவரது நண்பர் நஜ்புதீன் இருவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இவர்களுக்கும் வஜ்ருதீன் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உருவான தகராறில் இந்திரிஸ் மற்றும் நஜ்புதீன் இருவரும் த.மு.மு.க.வினர் அசாருதீன், பாசிக், ரபிக், ரியாஜிதீன், மன்சூர் அகமது ஆகியோரை சரமாரி கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் இந்திரியஸ், நஜ்புதீன் ஆகிய இருவரையும் வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகுணா மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் நஜ்புதீன் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்தும் நஜ்புதீன் த.மு.மு.க.வினர் மீது புகார் கொடுத்தார். இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதையொட்டி சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக