சனி, நவம்பர் 17, 2012

10-ம் வகுப்பு - பிளஸ் 2 அரையாண்டு தேர்வு 19-ல் தொடக்கம்


சென்னை, நவ. 17 - பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் வரும் 19 ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் இப்போது அரையாண்டு தேர்வுக்கான பொதுவான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19 ம் தேதி தொடங்கி ஜனவரி 7 ம் தேதி வரையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 19 ம் தேதி தொடங்கி ஜனவரி 10 ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். மொழிப்பாடங்கள் மற்றும் பிரதான பாடங்களுக்கு இடையே இந்த ஆண்டு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகுதான் விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு இந்த இரண்டு வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் தேர்வுகளுக்கு இடையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில மாதிரி தேர்வாக அமையும் வகையில் படிக்க கதுந்த கால அவகாசம் அளித்து நடத்தப்படுகிறது. இந்த கால அவகாசத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தராதேவி கேட்டுக் கொண்டுள்ளார். அரையாண்டு தேர்வுக்கு 11 வேலை நாட்கள் தேவைப்படும். போதுமான வேலை நாட்கள் தேர்வுக்கு கிடைக்காததால் இடையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 10 ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: 19 ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், 20 ம் தேதி மொழிப்பாடம் 2 ம் தாள், 21 ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22 ம் தேதி ஆங்கிலம் 2 ம் தாள், ஜனவரி 2 ல் கணிதம், 4 ம் தேதி அறிவியல், 7 ம் தேதி சமூக அறிவியல் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: 19 ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், 20 ம் தேதி மொழிப்பாடம் 2 ம் தாள், 21 ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22 ம் தேதி ஆங்கிலம் 2 ம் தாள், ஜனவரி 2 ல் கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரின் அண்டு டயக்ட்ரிக்ஸ், ஜனவரி 3 ம் தேதி வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல், ஜனவரி 4 ம் தேதி இயற்பியல், பொருளியல், ஜனவரி 7 ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 8 ம் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, ஜனவரி 9 ல் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்சுடு லாங்வேஜ் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, தமிழ், ஜனவரி 10 ல் உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக