ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

2.5% 'ஜகாத்' மூலம் 25% பலன் : 7 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ். ஆனார்கள்!


'ஜகாத் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் நிதியுதவியின் மூலம் படித்த, 7 நபர்கள் உட்பட மொத்தம் 30 முஸ்லிம்கள், இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பொறுப்புக்களில் அமர்ந்துள்ளனர். முன்னாள் அரசு ஊழியரான 'டாக்டர் செய்யத் ஜஃபர் மஹ்மூத்' என்பவரது தலைமையில், கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, வசதி படைத்த முஸ்லிம்களிடம் 'ஜகாத்' பெற்று கல்விப் பணிகள் உள்ளிட்ட பல சமுதாயப் பணிகளை செவ்வனே செய்து வருகிறது. இவ்வாண்டு தேர்வான 30 முஸ்லிம் மாணவர்களில், 2.5% ஜகாத் பண உதவியுடன் பயின்ற 7 நபர்கள் பெற்ற வெற்றி என்பது, 25% ஆகும். டெல்லியில் உள்ள இஸ்லாமிக் கல்சுரல் சென்டரில் நேற்று முன்தினம் (29/08/13) நடந்த விழாவில், முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் கலந்துக் கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக