ஞாயிறு, ஜனவரி 08, 2012

சென்னையில் கஞ்சா கடத்திய 3 பெண்கள் கைது



சென்னை, ஜன.8: சென்னை அயனாவரத்தில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துவந்த 3 பெண்களையும் ஒரு இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம் சரக உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில் போலீசார் புரசைவாக்கம் - பிரிக்ளின் ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர், 3 பெண்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் இளைஞர் தப்பி ஓடிவிட்டார். 3 பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வேளச்சேரியை சேர்ந்த முத்துலட்சுமி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ரீட்டா, ரமணி என்பதும் ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்து 650 பணம், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய வந்தவாசி தாலுகா விசாமங்கலத்தை சேர்ந்த சுமனையும் போலீசார் கைது செய்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக