கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் புயலில் பாதிக்கப்பட்ட திருவக்குளம், கீழ்அனுவம்பட்டு, கோவிலாம்பூண்டி. கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, சிங்காரகுப்பம், முழுக்குத்துறை, முடசல்ஓடை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், கரிக்குப்பம், சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு ஆகிய பகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் கடலூர் வந்து நிவாரணப் பணிகளை தொடங்கி வைத்தப் பிறகும் அப்பணிகள் மந்தமாகவே உள்ளது. புயல் பாதிப்பு இழப்பீட்டு தொகை ரூ.5 ஆயிரம் கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. சேத மதிப்பு இதைவிட அதிகமாக இருக்கும்.
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,500 மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கருத்து நிலவுகிறது. இத்தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதாது.
எனவே முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார் திருமாவளவ
ன்......nidurin.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக