சனி, ஜனவரி 07, 2012

நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்





புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவுள்ள மத்திய குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் தேவேந்திரநாத்
சென்னை, ஜன. 7: "தானே' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
 புயல் சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை, நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான குழு சனிக்கிழமை காலை தமிழகம் வந்தது. மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக