சனி, ஜனவரி 07, 2012

1683 பேருக்கு இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: அமைச்சர் வழங்கினார்



கமுதி, ஜன.7: முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பூசேரி, சித்திரங்குடி, கடலாடி தாலுகாவைச் சேர்ந்த மேலச்செல்வனூர், இருவேலி ஆகிய ஊர்களில் 1683 பயனாளிகளுக்கு ரூ 86 லட்சத்து 57 ஆயிரத்து 310 மதிப்புடைய இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களை கைத்தறித்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜன் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அமலாக்கப் பிரிவு தனி துணை கலெக்டர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். முருகன் எம்எல்ஏ மாவட்ட ஊராட்சிகள் கவுன்சில் தலைவர் வழக்குரைஞர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராஜராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக