சனி, ஜனவரி 14, 2012

சென்னையிலிருந்து புறப்பட்ட அவுரா ரெயிலில் திடீர் தீ விபத்து!


புவனேஸ்வரம்: சென்னையிலிருந்து புறப்பட்ட அவுரா ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அவுரா செல்லும் கோரமண்டல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புவனேஸ்வரம் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலின் என்ஜினில் இருந்து 2-வது பெட்டியில் திடீர் தீப்பிடித்தது.

உடனே பயணிகளும், ரெயிலில் பயணம் செய்த ரெயில்வே போலீசாரும் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே, புவனேசுவரம் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்து சேர்ந்தது. புவனேஸ்வரத்தில் பாதிக்கப்பட்ட ரயில் பெட்டியை அகற்றினார்கள். பின்னர் வேறொரு பெட்டி சேர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஒரு பயணியின் கவனக்குறைவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக