வெள்ளி, ஜனவரி 13, 2012

அணையை உடைக்க கேரளாவுக்கு அதிகாரம் உண்டு : ஐவர் குழுவிடம் கேரளா மனு!

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணையை உடைப்பதற்கான எல்லா வித அதிகாரமும் தங்களுக்கு இருப்பதாக கேரள அரசு மத்திய அரசின் ஐவர் குழுவிடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலமாக தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

இந்த அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதால், தற்போது இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவிடம் கேரளா அரசு வற்புறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த அணை கேரள பகுதிக்குள் இருப்பதால் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளாவுக்கு அதிகாரம் உண்டு என்று ஐவர் குழுவிடம் கேரளா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது தமிழகத்தின் கோபத்தை கேரளா மேலும் தூண்டுவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக