
புதுடெல்லி : இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு 4 நாள் பயணமாக செல்ல உள்ளார். மேலும் இலங்கையில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் எஸ்.எம்.கிருஷ்ணா பங்கேற்கிறார். தமிழர்கள் மறு குடியமர்வு மற்றும் சீர்திருத்தம் தொடர்பாக எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடன் வீடு, ரயில்வே, தொலைத்தொடர்பு, விவசாயம் ஆகிய 4 முக்கிய துறைகளில் இந்திய ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக