தாராபுரம் : கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்களின் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தாராபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த மோகன் தலைமையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற வேனை கேரளாவில் மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் வேனின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுகுறித்து மோகன் கூறும்போது, ‘முதலில் பம்பை சென்ற எங்களை அங்குள்ள போலீசார் குளிக்க அனுமதிக்கவில்லை. எந்த ஓட்டலிலும் எங்களுக்கு உணவு வழங்கவில்லை. பம்பையில் இருந்து சபரிமலை வரை வேனை எங்கும் நிறுத்தவும் அனுமதிக்கவில்லை. ஒரு வழியாக சாமி தரிசனம் முடித்துவிட்டு குமுளி வழியாக தமிழகம் திரும்பியபோது எல்லை பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் வேனை கல்லால் தாக்கினர். எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டோம்‘ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக