வாஷிங்டன்: உலகின் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடு என்ற பெருமையை அமெரிக்கா தக்க வைத்து கொள்ள, இந்திய சுற்றுலா பயணிகள் உதவ வேண்டும் என்று அதிபர் ஒபாமா
அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளதாவது:
உலகின் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடாக அமெரிக்கா உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் அதை தக்க வைத்து கொள்ள இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வேகமாக வளரும் நாட்டு
மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்தியா போன்ற இளைஞர்கள் அதிகமுள்ள நாடுகளில் இருந்து மேலும் அதிக பயணிகள் அமெரிக்கா வர வேண்டும். வருமானம் அதிகரித்து வரும் இந்திய
நடுத்தர பிரிவினர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அமெரிக்காவை தேர்வு செய்யலாம். அதற்கேற்ப சுற்றுலா விசா நடைமுறைகளை தளர்த்த அரசு பரிசீலிக்கும். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார். 2010ம்
ஆண்டில் சுற்றுலா துறை மூலம் அமெரிக்காவில் 75 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது. சுற்றுலா துறை வருவாய், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீத பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக