சனி, ஜனவரி 07, 2012
மயிலாடுதுறை புயல் பாதிப்பு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்ட
மயிலாடுதுறை, ஜன. 5: தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், 2010-ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும், கொள்ளிடம் ஒன்றிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் வி. விஸ்வநாதன், பொருளர் ஏ. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தானே புயலால் கொள்ளிடம் பகுதியில் உள்ள விளை நிலங்களும், அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த நெல் பயிர்களும், புஞ்சை பயிர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக