கோலாலம்பூர்,ஜன.8: மலேசிய எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் மீதான பாலியல் முறைகேடு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தனது உதவியாளருடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை இதன் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. "இது ஆளும் கட்சியின் சதி. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியின் தோல்வி உறுதி. அதனால் இது போன்ற வழக்குகளை தொடுத்து பிகேஆர் கட்சியின் நன்மதிப்பை கெடுக்க முயற்சிக்கிறார் மலேசிய பிரதமர் நஜீப் ரஸôக்" என அன்வர் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆனால் நாம் இங்கு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இவரது குற்றச் சாட்டை அரசு மறுத்துள்ளது. தண்டனை உறுதி செய்யப்பட்டால் இவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பானது மலேசியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதே வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக