திங்கள், ஜனவரி 09, 2012

விழுப்புரத்தில் ரயிலின் பின்னால் வேறு என்ஜின் மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

விழுப்புரம், ஜன.9: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த ரயில் என்ஜின் மோதியதில் 2 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.
விழுப்புரம் ரயில் நிலையத்தின் 6 நடைமேடையில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணிக்கு நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 5 மணிக்கு புறப்பட வேண்டியது.
இந்நிலையில் அப்போது வந்த சரக்கு ரயில் என்ஜினுக்கு டீசல் நிரப்பும் பணி நடந்தது. அதில் ஒரு என்ஜினில் டீசல் நிரப்பப்பட்டது. மற்றொரு என்ஜினில் டீசல் நிரப்ப ஓட்டுநர் எத்திராஜ், என்ஜினை மட்டும் தனியாக இயக்கி வந்தார். அது வடக்கே செல்வதற்கு பதில் தெற்கு நோக்கி சென்றதால், அந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மயிலாடுதுறை பயணிகள் ரயில் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் நொறுங்கி, தடம்மாறி நின்றன. அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக