வெள்ளி, ஜனவரி 20, 2012

விடுதியில் மாணவன் சாவு : மறியல் செய்த உறவினர்கள் மீது தடியடி!

உடுமலை : விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவன், மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்ததால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பல்லடம் ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளியில், முண்டுவேலாம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கிருஷ்ணகுமார் (15), பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியிலேயே தங்கியிருந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் கிருஷ்ணகுமாரை மயங்கிய நிலையில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு விடுதி வார்டன் அழைத்து வந்தார். பரிசோதித்த டாக்டர், மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே, கிருஷ்ணகுமார் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் ஆவேசப்பட்டனர். சவகிடங்கின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தினர். 

அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். உடுமலை -திருப்பூர் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அங்கு நள்ளிரவு வரை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக