வெள்ளி, பிப்ரவரி 17, 2012

கடத்தப்பட்ட மாணவன் 12 மணி நேரத்தில் மீட்பு


சென்னை நொலம்பூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் 12 மணி நேரத்தில் மீட்பு: 3 பேர் கைது - கூடுதல் ஆணையர் கடும் எச்சரிக்கை
 1/1 

சென்னை, பிப்.17 - நொலம்பூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். கடன் பிரச்சானைகளில் பள்ளி மாணவர்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார். கடன் பிரச்சனை போன்றவற்றிற்கு பள்ளி மாணவர்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையர் எச்சரித்துள்ளார்.நேற்றுமுன்தினம் சென்னையில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவனை 23 மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் மீட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு :.
சென்னை கொரட்டூர் ஜெகதாம்பிகாநகர் சேக்கிழார் நகரில் வசிக்கும் ரஜினிகாந்த் என்பவரின் 12 வயது மகன் லோகேஸ்வரன் நேற்றுமுன்தினம் காலை தனது தம்பி ஜெயசூர்யாவுடன் திருமங்கலத்தில் உள்ள லியோ மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி சென்றபோது இரண்டு நபர்கள் லோகேஸ்வரனை காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உத்தரவின் கீழ் கூடுதல் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் தெற்கு மண்டலம் சங்கர் மேற்பார்வையில் 12 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுவனை மீட்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சென்னை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் கடத்தப்பட்ட சிறுவனின் பெரியப்பா நிரஞ்சன் குமார் என்பவர் திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் என்றும், சென்னை வடபழனியில் கார் வாங்கி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  வடபழனி பாபு என்பவரிடம் அவர் ரூ.2 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத காரணத்தால் நிரஞ்சன் குமார் வீட்டிற்கு வந்திருக்கிறார். லோகேஸ்வரன் பாட்டியிடம் நிரஞ்சன் குமார் பற்றி  மிரட்டலாக பேசியிருக்கிறார்.  அவர் வீட்டில் இல்லாததால் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதற்காக வெளியே வந்த சிறுவன் லோகேஸ்வரனை கடத்திச் சென்றது தெரியவந்தது.  இந்த விபரம் அறிந்ததும் போலீஸ் தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைந்தனர்.  இந்த விவரம் அறிந்த பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் சிறுவன் லோகேஸ்வரனை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு தெரியாமலேயே பாபுவின் கூட்டாளிகள் 2 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்த அறிந்த போலீசார் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  உத்தண்டியில் சிறுவனை மீட்டனர்.  பஸ்சில் பயணம் செய்த குற்றவாளிகள் பாலசுப்பிரமணியம் மற்றும் பீட்டரை மடக்கி பிடித்தனர்.  சிறுவனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  கடத்தப்பட்ட சிறுவன் 23 மணி நேரத்தில் மீட்கப்பட்டான்.  கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவர் சிக்கியிருக்கிறார். மற்றும் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த தகவல்களை சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடன் பிரச்சனை போன்றவற்றிற்காக சிறுவர்களை கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் தாமரைகண்ணன் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக