
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட 122-நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்திருப்பதால் செல்பேசி வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றம் முறைகேடாக உரிமம் வழங்கப்பட்டதாக கூறி 122-நிறுவனங்களின் அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து செல்பேசி சேவையில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசி எண்ணை மாற்றிக் கொள்ளாமல், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வாய்ப்புள்ளதால் அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. யுனிநார், லூப்டெலிகான், சிஸ்டமாஷியாம், எடிசலாட், எஸ்டல், வீடியோகான், ஐடியா, டாட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக