
ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் , திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக ரிஷியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களாக திவாகரனை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு திருச்சி அருகே அரியமங்கலம் சோதனைச்சாவடியில், வந்து கொண்டிருந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்ட போது அதில் திவாகரன் இருந்துள்ளார். உடனடியாக திவாகரனை காவல்துறையினர் கைது கைது செய்தனர். பின்னர் , நீடாமங்கலம் நீதிமன்றம் முன்பு நேர்நிறுத்தப்பட்ட திவாகரனை பிப்ரவரி16-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து திவாகரன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக