ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 13-ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.



முதலமைச்சர் ஜெயலலிதா தனது சட்டமன்றத் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில், வரும் 13-ஆம் தேதி, சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஜுன் மாதம் 19-ஆம் தேதி அரசு விழாவில் கலந்து கொண்டு 190-கோடி ரூபாய்க்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து 2-வது முறையாக வரும் 13-ஆம் தேதி ஸ்ரீரங்கம் செல்ல உள்ள ஜெயலலிதா அரசு விழாக்களில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக