
இன்று மீலாது நபி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுனர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுனர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல், கொள்கையை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டும் என்றும் ஒற்றுமை, அமைதி, நல் லிணக்கத்தை கடைபிடித்து நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பங்கேற்போம் என உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அண்ணல் நபிகள் நாய கம் பிறந்த நாளாம் மீலாது நபி. உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவ ருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக் களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள் பெரு மான் அறப்போராளியாக, வணிகராக, அரசியல்வாதியாக, பேச்சாளராக, சீர்த்திருத்தவாதியாக, அனாதரட்சகராக, அடிமைகளைக் காப்பவராக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக, நீதிபதியாக, துறவியாக வாழ்ந்தவர் நேர்த்தியான இத்தகைய நிலைகள் அனைத் திலும் மனித நேயம் சிறந்திட வழிகாட்டும் மாமனிதராகவே திகழ்ந்தவர். இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உளமார்ந்த மிலாடி நபி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்வதாக தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வற்புறுத்துகிறது. முஸ்லிம்கள் எல்லா துறையிலும் மேம்பாடு அடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அன்பு, அமைதி, சமய நல்லிணக் கம் ஆகியவற்றை உலகுக்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இறை நம்பிக்கையில் அசை க்க முடியாத உறுதியுடன் நபிகள் நடத்திய சத்திய போராட்டங்கள் அகிலத்தாருக்கு அவரை அழகிய முன்மாதிரியாய் காட்டின. சமய நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்நன்னாளில் சூளுரை ஏற்போம்எ என்று தெரிவித்துள்ளார். தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மிலாது நபி இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் மானுட சமத்துவத்தையும் விரும்புகிற ஒவ்வொரு ஒவ்வொருவரும் கொண்ட வேண்டிய திருநாள் என்று தெரிவித்துள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக