வியாழன், பிப்ரவரி 02, 2012

எகிப்து நாட்டில் கால்பந்துப் போட்டியில் நடந்த கலவரத்தில் 73 பேர் உயிரிழந்தனர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.



எகிப்து நாட்டில் உள்ள சிட்டி ஆப் போர்ட் நகரில் உள்ள மைதானத்தில் உள்ளுர் கால்பந்து அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது.
அல்அலி மற்றும் அல்மாஸ்ரி அணிகள் இந்தப் போட்டியில் மோதின. இரு அணி ரசிகர்களும் பெரும்பான்மையில் குழுமியிருந்தனர். போட்டி நடைபெற்றுவந்தபோது, ஒரு அணியைச் சேர்ந்த ஆதரவாரர்கள் திடீரென மைதானத்துக்குள் புகுந்து, மற்ற தரப்பு அணி வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற அணி ரசிகர்களும் உடனடியாக மைதானத்தில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல், தாக்குதலில் அடைந்த காயம் என மைதானத்தில் 73 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எகிப்து கால்பந்து வரலாற்றில் இது மோசமான மற்றும் துயரமான சம்பவம் என அந்நாடு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக