வியாழன், பிப்ரவரி 02, 2012

சட்டப்பேரவையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவரை 10 நாட்களுக்கு இடை நீக்கம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.



எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்னையை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று அவைத் தலைவர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவையில் தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து தனது நிலையைத் தெரிவிக்க உரிமை மீறல் குழு விஜயகாந்துக்கு அறிவிக்கை அனுப்பியது.
ஆனால் விஜயகாந்த் விளக்கம்  அளிக்காததால்  உரிமைக்குழு எடுத்த முடிவினை அவை தலைவர் வாசித்தார். இந்த முடிவின்படி, மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்றும், இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் அவையில்  அனுமதிக்கப்படுவர் என்றும் அவைத் தலைவர் கூறினார்.
இந்நிலையில், உரிமைக்குழுவின் கருத்து மீது பேச அனுமதிக்கும்படி திமுக உறுப்பினர்கள் கோரினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக