திங்கள், பிப்ரவரி 06, 2012

நடுவண் அமைச்சர் நாராயணசாமி மீது உதயகுமார் அவதூறு வழக்கு


நடுவண் அமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடந்தகரையில் நேற்று 111-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியினரும், சேலம் பெரியார் கழக மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆதராம் இல்லாமல் அவதூறாக பேசிவரும் நடுவண் இணையமைச்சர் நாராயணசாமி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். மேலும் போராட்டக்குழு மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டிவரும் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு உதயகுமார் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக