புதன், பிப்ரவரி 15, 2012

இலங்கை போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது


 1/1 
கொழும்பு, பிப்.- 15 - இலங்கை விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழந்து நொறுங்கியது.  இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மிக் 27 ரக ஜெட் போர் விமானம் தலைநகர் கொழும்புவிற்கு அருகே விழுந்து நொறுங்கியது. சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்காவை அடுத்துள்ள புத்தளத்தில் ஹேவனவில் தென்னந்தோப்பு ஒன்றில் விமானம் கீழே விழுந்தது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள பறந்த இந்த விமானம் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி  எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர்தப்பினார் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் அண்டி விஜேயசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  ரஷ்ய தொழில் நுட்பத்தில் தயாரான இந்த மிக் ரக போர் விமானம் தமிழீழ விடுதலைப் போரின் போது புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த விமானங்கள் சிங்கள ராணுவத்திடம் இருந்தது. அதிலும் ஒரு விமானம் தற்போது நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக