சனி, பிப்ரவரி 04, 2012

பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் பேசும்போது, தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் கன்னடம், உருது பேசும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் கட்டாயம் தமிழ் படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக