
நேற்று சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதர் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்;கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்;ந்து இருந்ததாகவும், இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்; அடிப்படையில் இந்த வழக்கிற்க்கு மேலும் வலுவூட்டும் வகையில், ஆவணங்களை தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்; துறையும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையை கட்டிக்காக்க கச்சத்தீவை மீட்;கும் வரை தான் ஓயப்போவது இல்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக