வெள்ளி, மார்ச் 16, 2012

இந்தியாவுக்குப் பொருளாதார தடைவிதிக்க அமெரிக்கா திட்டம்!

மத்திய கிழக்கு நாடுகளில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்காவுக்கு தடையாக இருப்பதோடு தொடர்ந்து எரிச்சலூட்டிவரும் ஈரானுடன் இந்தியா பொருளாதார உறவுகளைத் தொடருமானால் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாகி ஒருவர் கூறியதாக புளூம்பர்க் வயர் செய்திகள் கூறியுள்ளது.
இது குறித்து ஜூன் 28ஆம் தேதி வாக்கில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவுக்கு 10 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஈரானுடனான கச்சா எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா கணிசமாகக் குறைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலும் இந்திய வணிகத்துறை அமைச்சகம் மற்ற துறைகளில் ஈரானுடன் உறவுகள் வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதால் அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு அரசியல்வாதிகள், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவை நெருக்கி வருவதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக