ஞாயிறு, ஜூன் 03, 2012

டீசல்-கியாஸ் விலைகளை கண்டிப்பாக உயர்த்த பிடிவாதம்


புதுடெல்லி, ஜுன் 3 - டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த 31 ம் தேதி பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை உயர்த்தியாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ரங்கராஜன் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் தற்போது நிதி பற்றாக்குறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும். இதனால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. டீசல், சமையல் எரிவாயுவின் விலைகளை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. டீசல், கேஸ் விலைகளை கணிசமாக உயர்த்தினால்தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். இந்த முடிவும் ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக