வெள்ளி, ஜூன் 01, 2012

லண்டனில் இந்திய மாணவன் கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி கைது


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இந்திய மாணவன் அனுஜ் பித்வே லண்டனில் அடையாளம் தெரியாத ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்திய மாணவன் கொல்லப்பட்டது லண்டனில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும், இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இன வெறி காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் பிரிட்டனை சேர்ந்த 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கியாரன் ஸ்டாபிள்டன் என்கிற அவர் ' தான் ஒரு மனநல நோயாளி' என போலிசாரிடம் தெரிவித்திருகிறார். அனுஜை கொலை செய்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை லண்டனில் இம்மாதம் 25-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அவரது பெற்றோர் லண்டன் சென்றுள்ளனர். இது குறித்து அனுஜின் குடும்பத்தினர் கூறியபோது: அனுஜ் கொல்லப்பட்ட பிறகு முதன்முறையாக லண்டன் வந்துள்ளோம். கொலையாளியின் வாக்குமூலத்தை நேரில் கேட்க வேண்டும் என வந்துள்ளோம். எங்கள் மகனை கொன்றவனை நேரில் பார்க்க உள்ளோம். இது மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். இந்த வழக்கு குறித்த தகவல்களை அறிய இந்திய ஊடகங்களும் லண்டன் ஊடகங்களும் ஆவலாக உள்ளன என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக