சனி, ஜூன் 09, 2012

"பேஸ்புக்கில் வாலாட்டிய மருத்துவ மாணவர் கைது!


Jun 5 2012 பழிவாங்குவதற்கு ஃபேஸ்புக்கில் வாலாட்டிய மருத்துவ மாணவரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சைபர் குற்றங்கள் உலக அளவில் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஆர்குட் போன்ற சமூக வளைத்தளங்கள் வந்த பிறகு இந்த குற்றங்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இந்த சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் உண்மை சம்பவங்கள் திருடப்பட்டு அவை பழிவாங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த விபின் குமார் சவுகான்(27) என்பவர் பேஸ்புக் மூலம் செய்த குற்றத்திற்காக கம்பி எண்ண காத்துக் கொண்டிருக்கிறார். இவர் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற படித்து வருகிறார். இவர் தனது மைக்ரோ பயாலஜி துறையைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை பழி வாங்குவதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சையான வாசகங்களையும் எழுதி இருக்கிறார். இதுபோன்று, ஃபேஸ்புக் வழியாக பல்வேறு குடைச்சல்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின்பேரில், விபின் மோதி தூங்கிரியை போலிசார் கைது செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, ஐடி சட்டத்தின் படி, அவர் செய்த குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் இவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் அத்தோடு ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. மோதி தூங்கிரி காவல் நிலையத்தின் காவல் அதிகாரி திரு. தீபக் கன்டேல்வால் கூறும் போது கூற்றம் சாற்றப்பட்டிருக்கும் விபின் தனது செயலால் ஏற்படும் விளைவகளை அறியாமல் இருக்கிறார் என்று கூறுகிறார். எது எப்படியோ சைபர் குற்றங்கள் அதிகரிக்காமல் இருக்க இப்படிப்பட்ட கடுமையான தண்டனைகள் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக